சோழ நாட்டில் பௌத்தம் : 50,000 பக்கப் பார்வைகள்

         கடந்த 10 ஆண்டுகளாக எழுதி வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவின் மூன்று முதன்மைப்பக்கங்கள் ஒவ்வொன்றையும் சுமார் 50,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். ஆய்வு தொடர்பான இந்த வலைப்பூவிற்கு ஆதரவு தருகின்ற நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.



முதலில் சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பாக மட்டுமே எழுத ஆரம்பித்தேன். பின்னர் நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி பௌத்தம் தொடர்பான பொதுவான பதிவுகளையும், ஆங்கிலக்கட்டுரைகளையும், பௌத்தம் தொடர்பான நூல்களைப் பற்றியும்  எழுதி வருகிறேன்.  முக்கியமான பதிவுகளை தமிழ் மொழி அறியாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதிவருகிறேன். அந்த வகையில் பிற ஆங்கில நூல்களிலும், இதழ்களிலும் என்னுடைய இந்த வலைப்பூவிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
இவ்வலைப்பூவின் கீழ்க்கண்ட பதிவுகள் 50,000க்கும் மேலான பக்கப்பார்வையைக் கொண்டுள்ளன. மேற்கோள் பதிவுகள் மூன்றாண்டுகளுக்குள் 54,000க்கும் மேற்பட்ட பக்கப்பார்வையைக் கொண்டுள்ளன.

கண்டுபிடிப்பு 52,980+ (24 மார்ச்2011முதல்)
கட்டுரைகள் 55,850+ (24 ஜுன் 2011 முதல்)
மேற்கோள்கள் 54,390+ (1 செப் 2017 முதல்)

பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் இவ்வலைப்பூவினைப் பார்த்து கருத்து பரிமாறிக்கொள்வதையும், ஆய்வு தொடர்பாக என்னைச் சந்திக்க வருகின்ற ஆய்வாளர்கள், நான் சந்திக்கும் அறிஞர்கள் தொடர்பான பதிவுகளையும் பதிகிறேன்.
சாதாரணமாக ஒரு வலைப்பூவில் எழுதுவதற்கும், ஆய்வு தொடர்பான வலைப்பூவில் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்கிறேன். நாளுக்கு நாள் மேம்படுகின்ற செய்தி ஆய்வுத்தளத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்ற அடிப்படையில் முந்தைய பதிவுகளில் சிறிய மாற்றம் இருந்தால்கூட அதனைக் கட்டுரையில் சேர்த்துவிட்டு, கட்டுரையின் நிறைவுப்பகுதியில் மேம்படுத்தப்பட்ட நாளினைக் குறிப்பிடுகிறேன். இது ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படுவதாகக் கூறுகின்றனர். 
ஓர் ஆய்வுக்கட்டுரைக்குத் தரப்படுகின்ற முக்கியத்துவத்தைத் தந்து ஆங்காங்கே கையாளப்பட்ட மேற்கோளையும், சந்தித்த நபர்களைப் பற்றிய குறிப்புகளையும் தந்துவிடுகிறேன்.
   உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும் இத்தளத்தில் என் பதிவினைத் தொடர்ந்து எழுதுவேன், ஓர் ஆய்வாளனாக. நன்றி.

Comments

  1. ஆய்வு தொடர்பான கட்டுரைகள தேடிப் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளோம். ஏனென்றால் எழுந்தவாரியாக எழுதுபவர்கள் அதிகரித்து விட்டார்கள்.

    ReplyDelete
  2. சிறப்பு ஐயா...

    உங்கள் உற்சாகம் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஐயா
    தங்களின் பணி தொடரட்டும்

    ReplyDelete
  4. முனைவர் அவர்களின் அரும்பணி இன்னும் உயரங்களைத் தொடும் வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
  5. 50000-க்கும் மேற்பட்ட பக்கப் பார்வைகள் - மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.

    ReplyDelete
  6. பரிதி நிலவு இருக்கும் வரை கடல் அலைகள் ஆர்பரிக்கும் வரை தங்கள் ஆய்வுத் தொண்டு பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
    வாழ்க.வளர்க.

    ReplyDelete
  7. தங்கள் தேடல்கள் தொடரட்டும். ஆர்வமுள்ளவர்களின் பார்வைகள்
    மேலும் விரியட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. தங்கள் பணி மகத்தானது.எதிர்காலத்தில் உங்கள் வலைப்பக்கம் பல ஆய்வ்களுக்கு ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதனை பேக் அப் எடுத்து வைத்து விடுங்கள்.

    ReplyDelete
  9. தங்களின் பணி என்றும் தொடர வேண்டும் ஐயா.
    வலைப்பூ நண்பர்கள் என்றும் தங்களுக்கு ஆதரவாயிருப்போம்.

    ReplyDelete
  10. பெருந்தகையீர்,

    ஓய்வறியா தங்களின் ஆய்வுப்பணி தொடரட்டும் , வாழ்த்துக்கள்!!!
    கோ.

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா. சிறப்பான உங்கள் ஆய்வுகளை மற்றவருக்கு பயன்பட வேண்டும் என்று கண்ணும் கருத்துமாகப் பதிவிட்டு வருகிறீர்கள். உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. மிக்க நன்றி ஐயா 🙏 தொடரட்டும் உங்கள் ஆய்வுகளும் பதிவுகளும்.

    ReplyDelete
  12. தங்கள் பணிகளும் பங்களிப்புகளும் பாராட்டுக்குரியவை. தொடரட்டும்.
    உடுவை.எஸ்.தில்லைநடராசா

    ReplyDelete

Post a Comment