Posts

Showing posts from 2015

பௌத்த சுவட்டைத்தேடி : 23 ஆண்டு களப்பணியில் 29 சிலைகள்

Image
தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரை தம்ம விஜயவிகாரை, புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை சென்னை இணைந்து இன்று (4.12.2015) நடத்தும் பன்முகப் பார்வையில் பௌத்தக்கலை என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கிற்காக அளிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பௌத்த ஆய்வின்போது 16 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. 1993இல் பௌத்த ஆய்வில் அடியெடுக்கும்போது இவ்வாறாகத் தேடல் முயற்சி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. மயிலை சீனி வேங்கடசாமியை அடியொற்றியும், பின் வந்த அறிஞர்களைத் தொடர்ந்தும் சென்ற வகையில் பல இடங்களில் சிலைகளைக் காணமுடிந்தது. தமிழகத்தில் இக்காலகட்டத்தில் இவ்வாறாக அதிக எண்ணிக்கையில் இப்பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது என் எண்ணம். பௌத்த ஆய்விற்கு வழிவகுத்துத் தந்த  தமிழ்ப்பல்கலைக்கழகத்தை நன்றியோடு, நினைவுகூர்ந்து,  என் ஆய்விற்குத் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றிகூறி    களத்திற்கு அழைக்கின்றேன்.   களப்பணி மிக எளிதாக இருக்கும் என எண்ணி களத்தில் இறங்கினேன். இறங்கியபின்னர்தான் அதிலுள்

பௌத்த சுவட்டைத் தேடி : விக்ரமம்

Image
1999இல் பார்த்த ஒரு புத்தர் சிலையை மறுபடியும் பார்க்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்களைக் காண தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விக்ரமம் செல்வோம், வாருங்கள். 29 ஜனவரி 1999 விக்ரமம், பள்ளிவிருத்தி, பூதமங்கலம் களப்பணி சென்றபோது விக்ரமம் களப்பணி மேற்கொண்டேன். தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை-மதுக்கூர் பேருந்தில் சென்று, மதுக்கூரிலிருந்து ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இரண்டு கிமீ தொலைவில் உள்ள விக்ரமம் சென்றேன். விசாரித்து, புத்தர் சிலை இருந்த இடத்திற்குச் சென்று, புத்தரைப் பார்த்தேன். போதிய நேரமின்மையால் உரிய விவரங்களைச் சேகரிக்கமுடியவில்லை. 13 பிப்ரவரி 1999 மறுபடியும் விக்ரமம். தோப்பில் இருந்த புத்தரைக் காண திரு சண்முகவேல் உதவி செய்தார். இச்சிலையை செட்டியார் சிலை என்றும், சிலை இருக்கும் இடத்தை புத்தடி செட்டிக்கொல்லை என்றும் கூறினார். அவரது தாயார் திருமதி பாக்கியத்தம்மாள் (72) அந்த புத்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்.  "வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கலின்போது தேங்காய் உடைத்து சாம்பிராணி போடுவோம். முதலில் எண்ணெய் எடுக்கும்போது புத்தருக்கு சாத்திவிட்டே பயன்படுத்துவோம்...அவ்வப்போது வேண்டு

பௌத்த நல்லிணக்க சிந்தனைகள்

Image
முந்தைய பதிவுகளில் பௌத்தம் தொடர்பாக களப்பணிகள் குறித்தும்,  பௌத்தம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இப்பதிவில் பௌத்தம் போற்றும் நல்லிணக்கச் சிந்தனைகளைக் காண்போம். பௌத்தம் போதித்த முதன்மையான நன்னடத்தைகள் அன்புறு நேயம், கருணை, இரக்க நல்லின்பம், நிதானம் ஆகியவையாகும். இவற்றில் அன்புறு நேயம் முதலிடத்தைப் பெறுகிறது. இவ்வாறான நேயம் காணப்படும்போது வாழ்வில் நிம்மதியைக் காணமுடிகிறது. அது வீட்டையும் நாட்டையும் மேம்படுத்தும். நல்லிணக்கத்தின் அடிப்படை அன்பு நல்லிணக்கம் பேணப்படுவதற்கு அன்பு அடிப்படையாக அமைகிறது. நல்ல சிந்தனைகள் மேம்படும் நிலையில்  நல்லிணக்கம் நிலவும். அவ்வாறான நல்லிணக்கத்தை பல நிலைகளில் உருவாக்கிக்கொள்ள முடியும். பகைமை தவிர்த்தல் "இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்8ல. பகைமை அன்பினாலோய தணியும். இதுவே பண்டைய நெறி "  என்கிறது பௌத்த அடிப்படை நூலான தம்ம பதம் .  " தாய் தன் சேயை அரவணைத்துப் போற்றுவது போல, உங்கள் அன்பு உலகிலே பரவட்டும், ஒவ்வோர் உயிரையும் அரவணைத்துக் கொள்ளட்டும், தடையற்ற சுதந்திரத்துடன் அது உயரேயும் கீழேயும் ப

Buddha spotting in Chola country fills his weekends: Times of India

Image
Feel happy to share my interview, "Buddha spotting in Chola country fills his weekends", which appeared in Times of India of 29th October 2012, with due thanks to Times of India.  29 அக்டோபர் 2012இல் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் வெளியான எனது பேட்டியைப் பகிர்வதில் மகிழ்கின்றேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.   Chennai:  B Jambulingam’s search for Buddha idols began with an ordinary visit to a remote village in Thanjavur in the 1980s. The villagers had excavated a Buddha idol, and Jambulingam noted down the dimensions of the stone idol on a cigarette packet. Back home in Thanjavur, he started studying various aspects of the idol.     His research drew him to Buddhism, and he began travelling to villages across Tamil Nadu in search of Buddha statues.     He once pedalled more than 25 miles on his old Hercules bicycle to see a Buddha idol in Puthur. Jambulingam has identified 66 Buddha idols in the erstwhile Chola country, and the journey is still on.     “I have fou

அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) : பட்டுக்கோட்டை குமாரவேல்

Image
நான் படித்த நூல்களில் ஒன்று அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் . 104 காட்சிகளைக் கொண்ட வரலாற்று நாடகமாக உள்ள இந்நூலில் புத்தரது வரலாற்றை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் பட்டுக்கோட்டை குமாரவேல். நாடகப்பாத்திரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளவிதம், ஒவ்வொரு காட்சியையும் அமைத்துள்ள முறை, நிகழ்வுகளை மனதில் பதியும்வகையில் தந்துள்ள பாங்கு போன்றவை மிகவும் சிறப்பாக இந்நூலில் அமைந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த இந்நூலை அண்மையில் மறுபடியும் படித்தேன். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அவ்வரலாற்று நிகழ்வை நாடமாக்கித் தந்துள்ள ஆசிரியரைப் பாராட்டி, அந்நூலை வாசிப்போம், வாருங்கள். காட்சி 7 (இடம் : அரண்மனை / மன்னர், அரசி, அந்தணர்கள்) சுத்தோதனர் : ஜோதிட வல்லுநர்களே...இளவரசனின் ஜாதகம் பார்த்து பலனைச் சொல்லி இந்த நாட்டு இளவரசருக்கு நீங்கள் பெயரிடவேண்டும். அந்தணர்1 : இளவரசனுக்கு சித்தார்த்தன் என்று பெயரிடுங்கள். அந்தணர்2 : குழந்தையின்னி வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். அந்தணர்3 : குழந்தை இளவரசானதும் அவர் நாட்டம் அரசியலில் இருந்தால் பெரிய சக்கரவர்த்தியாக வாழ்வார். அந்தணர்4 :