Posts

Showing posts with the label புத்தர்

பௌத்தம்-களப்பணி

Image
14.9.2013 அன்று ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரி  (Rotary Club of Thanjavur Cauvery) சார்பாக நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் "பௌத்தம்-களப்பணி" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன்.  அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலுவலகப்பணியாளர்கள் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆய்வியல் நிறைஞர் பட்டம் மேற்கொண்டபின் எளிதாக முனைவர்ப் பட்டம் மேற்கொள்ளும் சூழல். தஞ்சாவூரில் அருங்காட்சியகங்களில் முதன்முதலாக புத்தர் சிலைகளின் அமைப்பைக் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டது. அய்யம்பேட்டையில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்டது. திருச்சி மாவட்டம், மங்கலத்தில் மீசையுடன் உள்ள புத்தரைக் கண்டுபிடித்து அச் செய்தி நாளிதழ்களில் வெளியானது. மூல அனுமார் கோயில் பின்புறம் இருந்த சமணர் சிலையை முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் உதவியுடன் காணச்சென்றது. போன்றவை உள்ளிட்ட பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.  ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரியில்  கலந்துகொண்டு உரையாற்றியது ஒரு நி...

பௌத்த சுவட்டைத் தேடி: கரூர்

Image
26.9.1999 புதுக்கோட்டை மாவட்ட பௌத்த சமயச் சான்றுகளைக் காண்பதற்காக மேற்கொண்ட களப்பணியில் சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தரைப் பார்க்கத்திட்டமிட்டபோது கரூரில் உள்ள புத்தர் நினைவிற்கு வந்தார். தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார்கோயில் வழியாகக் கரூர் சென்றேன். அங்குள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தரைக் கண்டேன்.  அங்குள்ள கருப்பர்சாமிக்குக் கடா வெட்டுவது புத்தருக்குத் தெரியாமல் இருப்பதற்காக வலது பக்கம் தனியாக புத்தரை வைத்துள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வின்போது மூலவர் நிலவளமுடைய அய்யனார் சாமிக்கு முன்பாகத் திரையைப் போட்டுவிடுவதாகவும் கூறினர்.  அங்குள்ளோருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து பொன்பற்றிக்குச் சென்றேன். அங்கு புத்தர் சிலை எதுவும் காணப்படவில்லை. அங்கிருந்து சுந்தரபாண்டியன்பட்டினம் சென்றேன் . அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதித்துள்ளோம். 10.10.2021 சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அச்சுப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது அச்சிலையைக் காண்பதற்காக அங்குச் செல்ல விரும்பினேன். தொல்லியல் ஆய்வுக் கழக நிறு...

சோழ நாட்டில் பௌத்தம்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்

Image
நேற்று (9.5.2026) தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் "சோழ நாட்டில் பௌத்தம்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன். உரையில் சோழ நாட்டில் இருந்த/இருக்கின்ற பௌத்த சமயச் சான்றுகளைப் பற்றி எடுத்துரைத்தேன். அத்துடன் பின்வருவன உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தேன். புத்தர் கற்சிலைகள், புத்தர் கோயில்கள், சிற்பங்கள், விகாரம், புத்த பாதம் ஆகியவற்றைப் பார்த்த அனுபவங்கள். நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை இந்திய மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து அஞ்சல் வழியாக (அப்போது அதிகமாக மின்னஞ்சல் அறிமுகமாகாத காலகட்டம்) பெற்று முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஆவணப்படுத்தியது. கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகள் முதன்முதலாக நாளிதழ்களில் வெளியானபோது அடைந்த உணர்வு. அடுத்தடுத்த களப்பணியின்போது முன்னர் பார்த்த சிலைகள் காணாமல் போனது. சில புத்தர் சிலைகள் அருங்காட்சியகங்களுக்கு இடம் பெயர்ந்தது. சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளின் (புது எழுத்து, 2022, 2023) அச்சேற்றம் பற்றிய அனுபவங்கள். ஒரு மழைக்காலத்தில் எங்கள் இல்லத்தில், சேகரிப்பில் இருந்த நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின...

பௌத்த சுவட்டைத் தேடி: தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம்

Image
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக அரண்மனை வளாகத்தில் துணைவேந்தர் செயலக நுழைவாயிலின் முன்பாக வாயிற்படியின் இடது புறத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். பின்னர் அது அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதை அறிந்தேன். ஜூன் 1995 ஆய்வியல் நிறைஞர் ஆய்வு தொடர்பாக தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்திற்குச் சென்று அங்கிருந்த இரு புத்தர் சிலைகளையும், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் பார்த்ததைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலுள்ள புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றேன்.  அருங்காட்சியகக் காப்பாளர் (பொ) திரு கு.தேவராஜைச் சந்தித்தேன். ஒளிப்படமெடுக்க எழுத்துவழி அனுமதி தேவையில்லை என்றும், ஆய்வேட்டில் உரிய ஒப்புகை தரும்படியும், இந்தச்சிலை வரலாற்றறிஞர் கும்பகோணம் என்.சேதுராமன் முயற்சியால் கொண்டுவரப்பட்டதாக புலவர் செ. இராசு கூறியதாகவும் தெரிவித்தார். அங்குத் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர்/பொ.ஆ.10ஆம் நூற்றாண்டு என்ற குறிப்புடன் அழகான தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். இச்சிலை...

பௌத்த சுவட்டைத் தேடி: கலைக்கூடம், தஞ்சாவூர்

Image
ஆய்வியல் நிறைஞர்ப் பட்ட ஆய்விற்காக ( Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district , Madurai Kamaraj University, Madurai, 1995) முதலில் பௌத்தம் தொடர்பாக நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். பின்னர் புத்தர் சிலைகளின் அமைப்பையும், காலத்தையும் அறிந்துகொள்ள ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியங்களுக்குச் செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் அருங்காட்சியகங்கள் என்ற நிலையில் அக்காலகட்டத்தில், 1990களின் இடையில், கலைக்கூடத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் மட்டுமே புத்தர் சிலைகள் உள்ளதை அறிந்தேன். தஞ்சாவூர், கலைக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பாக மேனாள் காப்பாட்சியர் திரு எஸ்.இரத்தினசபாபதி அவர்களைச் சந்தித்தால் புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைப் பெறமுடியும் என்பதை நண்பர்கள் மூலமாக அறிந்தேன். அவரைச் சந்திக்க அவருடைய இல்லத்திற்குச் சென்று, நான் மேற்கொண்டு வருகின்ற ஆய்வினைப் பற்றி கூறினேன். அவர், தான் எழுதி வெளிவரவுள்ள நூலில் கலைக்கூடத்திலுள்ள இரு புத்தர் சிலைகளைப் பற்றியும் ( Stone Sculptures , Manuscript, 1983), ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திரு...

பௌத்த சுவட்டைத் தேடி: மங்கலம்

Image
மே 1998 8.5.1998இல் வந்த தி இந்து நாளிதழில் என் ஆய்வுப்பகுதியில் காணப்படுகின்ற ஒரு புத்தர் சிலையைப் பற்றிய செய்தியைக் கண்டேன்.  இதுவரை நூல்களையும், கட்டுரைகளையும் சான்றுகளாகக் கொண்டிருந்த எனக்கு முதன்முதலாக நாளிதழ் செய்தியும் சான்றாக அமைந்ததைக் கண்டேன். அன்று வந்த செய்தி (10th century Buddha statue to get separate shrine, The Hindu , 8.5.1998) மூலமாக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மங்கலம் என்னுமிடத்திலுள்ள அரவாண்டியம்மன் கோயிலில் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்தர் சிலை உள்ளதாகவும், அதை வைப்பதற்காக தனியாக ஒரு சன்னதி கட்டப்பட்டு வருவதாகவும் வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன் கூறியிருந்ததை அறிந்தேன்.  அந்தப் புத்தர் சிலையைப் பார்க்கச் சென்று, அதை மீசையோடு கண்டதும்,  அது நாளிதழ்களில் செய்தியாக  வந்ததும் நினைவில் நிற்கும் அனுபவம்.  ஜூன் 1998 செய்தி வந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் தழைத்த பௌத்தம் என்ற தலைப்பில் என் உரையினைப் பதிவு செய்வதற்காக திருச்சி, அகில இந்திய வானொலி நிலையத்திற்குச் சென்றேன். பதிவு முடிந்தபின் அங்கிருந்து மங்கலம் செல்லத் ...

சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள்

Image
  ------------------------------------------------------------------------------------------- நன்றி:   தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013 ------------------------------------------------------------------------------------------- பிற கட்டுரைகளை வாசிக்க : கட்டுரைகள் ------------------------------------------------------------------------------------------- 19.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

பௌத்த சுவட்டைத் தேடி: காஞ்சிபுரம்

Image
1993இல் ஆய்வுக்களத்தில் இறங்கியபோது தஞ்சாவூர் மாவட்டத்திலும், சோழ நாட்டிலும் உள்ள பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளை வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்டோரின் நூல்களிலும் கண்டேன்.  கள எல்லைக்கு அப்பாற்பட்டு பிற இடங்களைக் காண விருப்பம் இருந்தபோதிலும் பொருளாதார சூழல், நேரமின்மை காரணமாகச் செல்லும் வாய்ப்பு எழவில்லை.  என்னுடைய ஆய்வுக்கு முதலில் நான் எடுத்துக்கொண்டது மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலாகும். அதில் அவர் கூறியிருந்த இடங்களில் என்னை அதிகம் ஈர்த்தது காஞ்சிபுரம் பகுதியாகும். காஞ்சிபுரத்தில் உள்ள, அவரும் அவருக்குப் பின் வந்த அறிஞர்களும் குறிப்பிட்டுள்ள, புத்தர் சிலைகளைக் காண ஆவல் தொடர்ந்துகொண்டே இருந்தது.  ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanajvur district,  Madurai Kamaraj University, Madurai, 1995), முனைவர்ப் பட்ட (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) ஆய்வேடுகளையும், (என் ஆய்வு நூலின் தமிழ்ப்பதிப்பையும் (முனைவர் பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம் , புது எழுத்து, காவிரிப்பட்டிணம், 2...