சமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகில் அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலரில் செய்தியாக வெளியானதும், அது ஒன்றே தற்போது சான்றாக இருப்பதும் மறக்க முடியாத அனுபவமாகும்.

28 மார்ச் 2003
தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் பூதலூரைச் சேர்ந்த திரு சி.வீரமணி*, பூதலூர் பகுதியில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினார். ஆய்வின்போது பல நண்பர்களும், அறிஞர்களும், மாணவர்களும் இவ்வாறாக உதவி செய்து வந்துள்ளனர். அவ்வகையில் அவர் கூறிய புத்தர் சிலையைப் பார்க்கத் தயாரானேன்.

1 ஏப்ரல் 2003
 
மறுநாளே அச்சிலையைப் பார்க்கலாமென முடிவெடுத்தோம். அதன்படி அவருடன் அடஞ்சூர் சென்றேன். பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூரிலிருந்து 5 கிமீ தொலைவில் சிவந்தி திடல் அருகே உள்ள அடஞ்சூர் உள்ளது. சிவந்தி திடல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள காத்தவராயன் கோயில் எனப்படும் நல்லகூத்த அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையிலான சிலையைக் காண்பித்தார். அருகில் உள்ளோர் அச்சிலையை புத்தர் என்றனர். ஆனார் அது சமண தீர்த்தங்கரரான மகாவீரரன் சிற்பம் என்பதை அறிந்தோம். புத்தரைத் தேடிச் சென்று சமணரைப் பார்த்தது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.


   -------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு சி.வீரமணி, 
தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மலர்  
-------------------------------------------------------------------------------------------

அடுத்து அங்கு சென்றேன். அது தொடர்பான அனுபவங்களைத் தொடர்ந்து காண்போம்.

பூதலூர், திருவையாறு வட்டங்களில் களப்பணி மேற்கொண்டபோது அடஞ்சூரில் அச்சிலை இல்லை என்பதை அறிந்தோம். 

*திரு சி.வீரமணி தற்போது தமிழ்ப்பல்கலைக்கழக அகராதியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 15 வருடங்களுக்குப் பிறகு 24 மே 2018இல் அவருடன் அலைபேசியில் தொடர்புகொண்டு 2003இல் இந்தச் சிலையைப் பார்க்கச் சென்ற அனுபவத்தையும், இப்பதிவினைப் பற்றியும் பகிர்ந்தேன். 

14 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தங்களது தேடுதல் பணி குறித்த அனுபவங்கள் இன்னும் வரட்டும். வாழ்க நலம்.

    ReplyDelete
  2. தங்களின் தேடல் தொடரட்டும் ஐயா

    ReplyDelete
  3. தங்களின் தேடலும், ஆய்வும் தொடரட்டும் ஐயா! வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. மென்மேலும் தொடரட்டும் தங்கள் ஆய்வு மற்றும் களப்பணி ஐயா...சிறந்த முயற்சி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான தகவல்கள். உங்கள் ஆர்வமும் ஆய்வும் தொடரட்டும்.

    ReplyDelete
  6. காணாமல் போன சிலைகள் இன்னும் எத்தனையோ ? -ஆவணப்படுத்தியமைக்கு நன்றி.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இம்மாதிரி தெரியாமல் புதைந்திருக்கும் சிலைகளும் காணாமல் போன சிலைகளும் இன்னும் எத்தனையோ ? தங்கள் பணி தொடரரட்டும்,

    ReplyDelete
  8. எனக்கு சமணர் சிலைக்கும் புத்தர் சிலைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை முன்பே ஒரு முறை இதுபற்றிக் கேட்டதாக நினவு

    ReplyDelete
    Replies
    1. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளில் பெரும்பாலானவை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அமர்ந்த நிலையில் தியான கோலத்திலுள்ள புத்தர் சிலைகளில் உஷ்னிஷா எனப்படும் தீச்சுடருடன் கூடிய முடி அமைப்பு, சற்றே மூடிய கண்கள், அமைதி தவழும் முகம், நீண்டு வளர்ந்த காதுகள், மேலாடை, கையில் தர்மசக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறி போன்றவை காணப்படுகின்றன. இவற்றில் சில கூறுகள் சில சிலைகளில் விடுபட்டு இருப்பதைக் காணமுடியும். சமண தீர்த்தங்கரரைப் பொருத்தவரை முக்குடை, திகம்பரமேனி, இரு புறமும் யட்சர்கள் போன்ற பொதுமைக் கூறுகளைக் காணமுடியும். நேரில் சிலைகளைப் பார்த்துவிட்டு புத்தரா சமணரா என்பதை உறுதி செய்வது நலம். ஏனென்றால் மிக நுண்ணிய வேறுபாடு நம்மை ஏமாற்றிவிட வாய்ப்புண்டு. ..

      Delete
  9. தங்கள் தேடலும்
    திரட்டி வெளியிடுதலும்
    தமிழை அடையாளப்படுத்த
    சிறந்த பங்களிப்புச் செய்யும்
    பாராட்டுகள்

    ReplyDelete
  10. So Excellent effort of you sir towards the culture of thissoil

    ReplyDelete
  11. அடஞ்சூர் சமணர் சிலை பற்றிய செய்தி பற்றிய சிறப்பான பதிவு. தஞ்சை காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. செந்தில்குமார் IPS பற்றிய செய்தியும் சுவாரஸ்யம் மிக்கது.

    ReplyDelete
  12. மிக அருமை ஐயா

    ReplyDelete

Post a Comment