தஞ்சையில் சமணம் பாராட்டு விழா
தஞ்சையில் சமணம் நூலினை வெளியீட்டமைக்காக நூலாசிரியர்கள் என்ற நிலையில் எங்களை தஞ்சாவூர் கரந்தட்டாங்குடியிலுள்ள ஆதீஸ்வரசுவாமி கோயில் எனப்படுகின்ற ஜினாலயத்தில் சமணப்பெருமக்கள் பாராட்டினர். தஞ்சை ஜினாலய அறங்காவலர் திரு ச.அப்பாண்டைராஜ் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. திரு தஞ்சை வி.சுகுமாரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
பஞ்சகல்யாணப்பெருவிழா, கோயில் ஆண்டு விழா, நூலாசிரியர்களுக்குப் பாராட்டு விழா என்ற முப்பெரும் விழாவாக 5 ஆகஸ்டு 2018 அன்று நடைபெற் நிகழ்வின்போது சமணப்பெருமக்களும் அறிஞர்களும் எங்களையும், களப்பணியின்போது நாங்கள் மேற்கொண்ட சிரமங்களையும் சுட்டிக்காட்டி எங்களுடைய முயற்சியைப் பாராட்டி, எங்களை கௌரவித்தனர். அவர்கள் எங்களைப் பாராட்டிய விதம் எங்களை நெகிழ வைத்துவிட்டது.
![]() |
அப்பாண்டைராஜ் தலைமையுரையாற்றுகிறார். மேடையில் பா.ஜம்புலிங்கம், மணி.மாறன், வி.சுகுமாரன், தில்லை கோவிந்தராசன் (இடமிருந்து வலமாக) |
![]() |
பத்மமாலினி நன்றியுரை |
ஏற்புரையில் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
ஏற்புரையின்போது சோழ நாட்டில் பௌத்தம் ஆய்விற்காக களப்பணி மேற்கொண்டபோது பல புத்தர் சிலைகளை சமணர் தீர்த்தங்கரர் சிலைகள் என்று மக்கள் கூறுவதையும், சில இடங்களில் தீர்த்தங்கரர் சிலைகளைப் புதிதாகக் கண்டதையும், கவிநாட்டில் புத்தர் என்று கூறப்பட்ட சிலையை சமண தீர்த்தங்கரர் என்று உறுதி செய்ததையும், ஜெயங்கொண்டத்தில் முதல் களப்பணியில் பார்த்த தீர்த்தங்கரர் அடுத்த களப்பணியின்போது அவ்விடத்தில் இல்லாததையும், ஆய்வுக்காலத்தில் என்னால் தனியாகவும், பிற அறிஞர்களோடும் இணைந்து கண்டெடுக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றியும் மேலும் பிற அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டேன்.
திரு தில்லை கோவிந்தராஜன் தன்னுடைய ஏற்புரையில், புதுதில்லியில் உள்ள நேரு டிரஸ்ட் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தஞ்சையில் சமணம் என்ற ஆய்வுத்திட்டம் இந்த நூலுக்கு அடிப்படையாக அமைந்ததையும், அந்தத் திட்டம் மேற்கொள்வதற்கு முன்னரும், தொடர்ந்தும் கண்டெடுக்கப்பட்ட சமணர் சிலைகளைப் பற்றிய தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
திரு மணி.மாறன் தன்னுடைய ஏற்புடையில் களப்பணியின்போது அவர் கண்ட தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றியும், நாட்டாணியில் உள்ள தீர்த்தங்கரரைக் காணபோது எதிர்கொண்ட சிரமங்களையும், நூல் அச்சாக்க முயற்சியின்போது எதிர்கொண்ட நிகழ்வுகளையும் எடுத்துக்கூறினார்.
நிறைவாக, திருமதி பத்மமாலினி நன்றி கூறினார். இவ்விழா மறக்க முடியாத ஒரு நிகழ்வாக எங்களுக்கு அமைந்தது.
நூல் : தஞ்சையில் சமணம்
ஆசிரியர்கள் : முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன்,
மணி. மாறன்
மணி. மாறன்
வெளியிடுபவர் : நிறுவனர் & தலைவர், ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர்
விலை : ரூ.130
விலை : ரூ.130
அலைப்பேசி : 94434 76597
புகைப்படங்கள் : திரு செந்தில்குமார்
மகிழ்ந்தேன்
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
தங்களின் தேடல் தொடரட்டும்
நல்லது ஐயா! மகிழ்ச்சி!
ReplyDeleteமகிழ்ச்சியான விடயம் வாழ்த்துகள்.
ReplyDeleteமகிழ்ச்சியான தருணம். எங்களின் வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteஅருமை ஐயா.
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteபாராட்டுகள். பாராட்டியவர்களுக்கும் என் பாராட்டுகள்.
ReplyDeleteதமிழக சமணர்கள் தங்கள் மூவருக்கும் நன்றிக்கடன் பட்டவர்கள்.பதிவுக்கு மிக்க நன்றி அய்யா. _ தஞ்சை சமணன்
ReplyDeleteபதிவுக்கு மிக்க நன்றி அய்யா _ தஞ்சை சமணன்.
ReplyDeleteகற்றவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு வாழ்த்துகள்
ReplyDelete