பௌத்த சுவட்டைத் தேடி : பரிநிர்வாண புத்தர் சிலை

சோழ நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையிலான புத்தர் சிலைகளைப் பார்த்துள்ளேன். எனது பௌத்த ஆய்வினைப் பாராட்டும் நண்பர்களில் ஒருவரான முனைவர் இரா. பாவேந்தன் பரிநிர்வாண புத்தர் சிலையின் புகைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்துள்ளார். அச்சிலையைப் பற்றி அறிய அழைக்கிறேன்.

ஏப்ரல் 19 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக தமிழ் உதவிப்பேராசிரியரும், துணைவேந்தரின் தொழில்நுட்ப மற்றும் தனி அலுவலுருமான நண்பர் முனைவர் பாவேந்தன் அவர்கள் தன் முகநூல் பதிவாக கீழ்க்கண்ட கிடந்த நிலையிலான புத்தரைப் பற்றிய ஒரு பதிவினை எழுதியிருந்தார். முன்பொரு முறை இந்த புத்தர் சிலையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அப்போது புகைப்படத்தோடு எவ்வித குறிப்பும் காணப்படவில்லை.



"அரிய புத்தர் சிற்பம் ... கண்டுபிடிக்க உதவுங்கள்..
தமிழகத்தில் அழிந்து வரும்/அழிக்கப்பட்டு வரும் பெளத்த கலை வரலாற்று பொக்கிஷங்களில் இந்த படத்தில் உள்ள சிற்பம் என் கவனத்தை கவர்ந்தது.
கடந்த ஆண்டு இந்த புகைப்படத்தை என் முக நூலில் வெளியிட்டேன். ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரிடம் எந்த எதிர்வினையும் இல்லை...
தற்செயலாக நேற்று dinamalar.com தளத்தில் வாட்ஸ் அப் கலக்கல் என்ற பகுதியில் மீண்டும் வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்து சோழநாட்டில் பெளத்தம் என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட முனைவர் பா.ஜம்புலிங்கம்தொல்லியல் ஆய்வாளர் முனைவர் இரா.பூங்குன்றன்,வானவராயர் வரலாற்று அறநிலையில் பணிபுரியும் முனைவர் ஜெகதீசன்அவைதீக ஆய்வாளர் முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்ட பலரிடம் தகவல் தெரிவித்துள்ளேன்...நல்ல தகவல் வரும்..."

அப்பதிவிற்கு கீழ்க்கண்டவாறு நான் மறுமொழி எழுதியிருந்தேன். "கடந்த ஆண்டு இதே புகைப்படத்தை எங்கிருந்தோ தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டிருந்தீர்கள். தற்போது மறுபடியும் இதனை வெளியிட்டுள்ளதைப் பார்க்கும்போது பௌத்தம் மீதான தங்களின் ஈடுபாட்டை உணரமுடிகிறது. சோழ நாட்டில் பௌத்தம் என் றதலைப்பிலான எனது ஆய்விற்காக ஒருங்கிணைந்த தஞ்சாவூர்ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் களப்பணி மேற்கொண்டபோது சோழ நாட்டில் கிடந்த நிலையி்லான புத்தர் சிலைகளைக் காணமுடியவில்லை. வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி தன்னுடைய பௌத்தமும் தமிழும் என்ற நூலில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கிடந்த நிலையில் ஒரு புத்தர் இருப்பதாகக் கூறி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 1999வாக்கில் நான் அங்கு சென்று பார்த்தபோது அச்சிலை காணப்படவில்லை. அதற்குப் பின் தற்போது கிடந்த நிலையில் உள்ள புத்தர் சிலையினைப் பார்க்கும் வாய்ப்பு தங்கள் மூலமாகக் கிடைத்துள்ளது. காஞ்சீபுரம் சிலையிலிருந்து சற்று மாறுபட்டு (வலது கையும் தலையும் சற்றொப்ப மிக அருகில் இணைந்த நிலையில் காஞ்சீபுரம் சிலை காணப்படும்) இச்சிலை உள்ளது. தவிரவும் இச்சிலை அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளதைப் போலத் தெரிகிறது. இச்சிலையின் புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன். மேற்கொண்டு விவரம் கிடைக்கும்போது தங்களைத் தொடர்பு கொள்வேன். நண்பர்களையும்அறிஞர்களையும் இச்சிலை இருக்கும் இடத்தைக் கண்டறிய உதவவேண்டுகிறேன்."

திரு ந.வசந்தகுமார் எங்களுக்கு பின்வரும் தகவலைக் கூறியிருந்தார். "வணக்கம். இது நான் எடுத்த புகைப்படம். நீங்கள் கேட்பது புரியவில்லை. இது மகாபலிபுரத்தில் எடுத்தது"

அதற்கு நான் பின்வருமாறு மறுமொழி எழுதினேன். "சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். கிடந்த நிலையிலான புத்தர் சிலைகளை எனது ஆய்வின்போது எங்கும் காணமுடியவில்லை. நண்பர் பாவேந்த்ன் இந்த சிலையைப் பற்றி அறிய ஆர்வப்பட்டார். என் ஆர்வமும் சேர்ந்துகொள்ளவே பார்க்க அச்சிலையைப் பற்றி அறிய விழைந்தோம். இச்சிலையின் புகைப்படத்தை தாங்கள் எடுத்ததறிந்து மகிழ்ச்சி".

எனது ஆய்வின்போது சோழ நாட்டில் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையில் தியான கோலத்திலும் புத்தர் சிலைகளைப் பார்த்துள்ளேன். அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகள் பெரும்பாலும் தியான கோலத்தில் உள்ளன. ஒரே ஒரு சிலை மட்டும் தரையைத் தொட்டமர்ந்த கோலத்தில் பார்த்ததாக நினைவு. புத்தகயாவில் உள்ள பெரும்பாலான புத்தர் சிலைகள் தரையைத் தொட்டமர்ந்த கோலத்தில் இருந்ததைக் கண்டேன். 

மயிலை சீனி.வேங்கடசாமி
கிடந்த நிலையிலான புத்தரைப் பற்றிய பதிவுகளை சோழ நாட்டில் காணமுடியவில்லை. வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி தன் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் கூறியிருந்த புத்தர் சிலை (கீழேயுள்ள புகைப்படம்) தற்போது சுவடு இன்றி மறைந்துவிட்டது. 

பரிநிர்வாண புத்தர் சிலை
நிற்க வைக்கப்பட்ட புத்தர்
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் இதழில் இந்த பரிநிர்வாண புத்தரை நிற்க வைத்து நின்ற நிலையில் புத்தர் என்றிருந்த குறிப்பினைக் கண்டேன். வியந்தேன், வேறென்ன என்ன முடியும்?

காஞ்சீபுரத்திலிருந்த புத்தர் சிலையிலிருந்து சற்றே வித்தியாசமான நிலையில் புகைப்படத்தில் உள்ள புத்தர் சிலை உள்ளதைக் காணமுடிந்தது. பௌத்தத்தின்மீதான பரவலான ஈர்ப்பை இந்த புத்தர் சிலை மேம்படுத்திவிட்டதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது. முனைவர் பாவேந்தன் விரும்பியபடி மேலும் விவரம் கிடைத்தாலும், இந்த புத்தர் சிலையை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் பகிர்ந்துகொள்வேன். பரிநிர்வாண புத்தர் சிலை தொடர்பாக மேற்கொண்டு விவரம் அறிந்தால் தெரிவிக்கக் கேட்டு, நண்பர்களுக்கும் அறிஞர்களுக்கும் இப்பதிவு மூலமாக மறுபடியும் வேண்டுகோள் வைக்கிறேன். 

Comments

  1. அழகுப் பொருளாகச் சிலைகளோடுச் சிலையாக மகாபலிபுரத்தில் செதுக்குகின்றார்களோ! உங்களுக்குத் தகவல் கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி..களப்பணிக்குத் தேவையான தகவல்கள் உங்களை வந்தடையட்டும். நன்றி ஐயா.

    ReplyDelete
  2. தங்களின் முயற்சி வெல்லட்டும் ஐயா
    தம+1

    ReplyDelete
  3. Near Pondicherry, at Bahoor Commune, there is a Buddha temple with a big Buddha statue. It is under Archaelogical Department of Govt. of India. This site is well known in the early days for an university situated here.

    ReplyDelete
  4. வாழ்த்துகள் முயற்சி வெல்க!

    ReplyDelete
  5. கிடந்த நிலையிலான புத்தர் சிலை ஒன்று அஜந்தா வில் உள்ளது . அங்கு ஃ பிளாஷ் லைட் இல்லாமால் நான் எடுத்த புகைப்படம் சரிவர வரவில்லை . மேலும் அந்த முழு புத்தரையும் என்னால் புகைப் படத்திற்குள் கொண்டு வர முடியவில்லை . கூகிளில் அந்த புகைப்படம் உள்ளது . ஆனால் அதுவும் முழுதாக இல்லை .

    ReplyDelete
  6. முதல் புகைப்படம் வேதனையைத் தருகின்றது
    முனைவர் அவர்களின் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  7. பரிநிர்வாண புத்தர் சிலையை பார்த்த போது திருவரங்கம் பற்றிய உண்மை தெரிந்தது.

    ReplyDelete
  8. காஞ்சிபுரத்தில் ஏகம்பராஸ்வரர் கோவில் மதில் சுவற்றில் இருப்பது உண்மைதான், கடந்த வருடம் கோவில் மதில் சுவர் சீரமைக்கப்பட்டது, தரைக்கு அருகமையில் இருப்பதால் மண் மேடு மூடப்பட்டு உள்ளது வருத்தம் தருகிறது....

    ReplyDelete
  9. wish you open more new pages ............

    ReplyDelete
  10. தங்களின் தேடல் வியப்பளிக்கிறது. புத்தர் சிலை மீது மனிதர்கள் அமர்ந்தபடி இருப்பது அளிக்கிறது. தங்கள் முயற்சி வெல்லட்டும்!

    ReplyDelete
  11. திரு வசந்தகுமார் தான் மகாபலி புரத்தில் எடுத்தபடம் எனக் கூறுவதும் பார்க்கும் போது இப்படமும் அண்மையில் செதுக்கியதுபோல்தான் தோன்றுகிறது

    ReplyDelete
  12. அருமை. மகத்தான பணி சிறப்பான ஆய்வு.தங்களை தொல்லியல் துறை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் . வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  13. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
  14. முதல் புகைப்படத்தை ஒத்த சிலையை மாமல்லபுரத்தில் கொஞ்ச வருடங்களுக்கு முன் பார்த்திருக்கின்றேன்.

    ReplyDelete

Post a Comment