Posts

Showing posts from May, 2023

தமிழகத்தில் பௌத்தம் : முனைவர் தேமொழி

Image
முனைவர் தேமொழி எழுதியுள்ள தமிழகத்தில் பௌத்தம் என்னும் நூல் ஐந்து தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. புத்தரின் திருவுருவத் தோற்றம் (பக்.14-33), தமிழ்நாட்டுப் பௌத்த சிற்பங்கள் (பக்.34-44) என்ற தலைப்பின்கீழ் உள்ள கட்டுரைகளில் கலையியல் நோக்கில் புத்தரின் சிற்பங்களைப் பற்றியும், சிலைகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கோற்பவர் ( பக்.45-59 ) கட்டுரை முக்கோற்பவர் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக்குறிப்புகள் ( பக்.60-79 ) என்ற கட்டுரை தமிழக வரலாற்றை அறிவதில் அளிக்கும் பங்கினை அளிக்கிறது. எண்குணத்தான் ( பக்.60-91 ) எண்வகைப்பட்ட குணங்களை பலவித சான்றுகளுடன் அணுகுகிறது. இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம். "தொடக்ககால இந்தியக்கலையில் (பொ.ஆ.ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்தரிக்கப்படவில்லை. குறியீடுகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார். " (ப.14) " கனிஷ்கர் காலத்தில்தான் மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது....புத்தரின் முதல் சிற்பம் கனிஷ்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது. " (ப.23) " சிந்து சமவெளிக்கு அப்ப

சோழ நாட்டில் பௌத்தம் : மதிப்புரை : முனைவர் தி.நெடுஞ்செழியன்

Image
என் நூலுக்கு அன்பு நண்பர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் வழங்கியுள்ள மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன், ஒளிப்படம்  : தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் பணி நிறைவு பெற்றபோது ஏப்ரல் 2017இல் முனைவர் தி நெடுஞ்செழியன் என்னைப் பாராட்டிய இனிய தருணங்கள் சோழ நாட்டில் பௌத்தம் என்னும் நூலை உருவாக்கிய முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உதவிப் பதிவாளராகப் பணி ஓய்வு பெற்றவர். இவர் சிறந்த ஓர் ஆய்வாளர் மட்டுமல்லாமல், சிறந்த வாசிப்பாளர். அதுவும் தன் இளமைக் காலம் முதல் இன்று வரை ஆங்கில இந்து நாளேடு, பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழ்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆளுமைத் திறன் கொண்டு நிர்வாகத்திலும் சிறந்து விளங்கியவர்.  இப்படியான பன்முக ஆற்றல் கொண்ட முனைவர் பா.ஐம்புலிங்கம் தன் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சோழ நாட்டில் பௌத்தம் என்னும் தலைப்பைத் தேர்வு செய்து, அறைக்குள் முடங்கி,

பௌத்த சுவட்டைத் தேடி : மீண்டும் புதூர்

Image
சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, செப்டம்பர் 2022, அலைபேசி 9842647101) நூல் வெளியாகியுள்ள நிலையில் அதனை ஆங்கிலத்தில் வெளிக்கொணர முயற்சி எடுத்து, சோழ நாட்டில் பல இடங்களுக்கு மறுபடியும் களப்பணி சென்றுவருகிறேன்.   அவ்வகையில் 8 ஏப்ரல் 2023இல் திருவாரூர் மாவட்டம் புதூரில் உள்ள புத்தர் சிலையைப் பார்க்க மறுபடியும் சென்றேன். முதன்முதலாக 2000வாக்கில் மழவராயநல்லூரைச் சேர்ந்த திரு சிங்காரவேலனுடன் சுமார் 25 கிமீ மிதிவண்டியில் பயணித்து இச்சிலையைப் பார்த்தது நினைவிற்கு வந்தது.  முந்தைய களப்பணியில் சந்தித்த திரு சிவகுருநாதனின் மகன் திரு முத்துராமன் தற்போது பணிநிமித்தம் திருவாரூரில் உள்ளார். அவரிடம் அலைபேசியில் பேசியதும் மகிழ்ந்தார். பணியின் காரணமாக அவரால் வர இயலா நிலையைக் கூறினார். நான் மட்டுமே சென்றேன்.   தஞ்சாவூர்-திருவாரூர்-திருத்துறைப்பூண்டி பாதையில் நால்ரோட்டில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோவில் சென்றேன்.  பெருமாள் கோயில் தெரு. அங்கே ஒரு குளம். குளத்தின் கரையில், மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் புத்தர். முந்தைய களப்பணிகளின்போது அருகில் இருந்த குளத்தைப் பார்த்த நினைவில்லை. சோழ நாட