Posts

Showing posts from April, 2018

ஏடகம் ஞாயிறு முற்றம் : 11 மார்ச் 2018 : சோழ நாட்டில் பௌத்தம்

Image
ஏடகம் அமைப்பு மாதந்தோறும் நடத்துகின்ற ஞாயிறு முற்றத்தின் மார்ச் மாதச் சொற்பொழிவு 11 மார்ச் 2018 ஞாயிறு மாலை நடைபெற்றது. வழக்கம்போல ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் எழுதிவரும் நிலையில் இம்மாதப் பதிவாக, என்னுடைய உரையினைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.  8 அக்டோபர் 2017இல் தொடங்கப்பட்ட ஏடகம், ஞாயிறு முற்றம் சார்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பான சொற்பொழிவுகளை நடத்திவருகிறது. அவ்வகையில் என் களப்பணி தொடர்பாக உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன். இவ்விழாவில் தலைமையுரையாற்றிய அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பே.வே.நவேந்திரன், தமிழகத்தில் பௌத்தம் தொடர்பான இலக்கியச் சான்றுகளையும், பூம்புகார் மற்றும் நாகப்பட்டின புத்த விகாரைகளைப் பற்றியும்  எடுத்துரைத்தார். வரவேற்புரை : ஆதிபராசத்தி தணிக்கைக்குழு உறுப்பினர் திரு கு.சிவராஜா தலைமையுரை :  அறந்தாங்கி நகராட்சி ஆணையர் திரு பே.வே.நவேந்திரன் நன்றியுரை : முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி டி. பவானி நிகழ்ச்சித்தொகுப்பு : செல்வி இராச.பாரதிநிலா அடுத்து சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒருங்கிணைந்