Posts

Showing posts from June, 2014

கௌதம புத்தர் (உரைநடை நாடகம்): கு.வெ.பாலசுப்பிரமணியன்

Image
 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள  கௌதம புத்தர் (உரைநடை நாடகம்) என்ற நூல் மூலமாக நம்மை நிகழ்வுகள் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். வரலாற்றுக் கதைச்சுருக்கத்தைத் தொடர்ந்து (பக்.13-16) நாடக உறுப்பினர்களை அறிமுகப்படுத்துகின்றார் ஆசிரியர் (பக்.17-18). காட்சியின் தொடக்கத்தில் புத்தரின் அறநெறிகளைத் தம்ம பதம், மஜ்ஜிம நிகாயம், சம்யுக்த நிகாயம், அங்குத்த நிகாயம், சுத்த பிடகம், மணிமேகலை,  சுத்த நிகாயம் போன்ற நூல்களிலிருந்து  தந்துள்ளார். புத்தரைக் குறித்துப் பல நூல்களிலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்நாடகத்தை உருவாக்கியுள்ளதாகவும், நிகழ்ச்சிகளில் தன் கற்பனைக்கு இடமில்லை என்றும், உரையாடலில் பாத்திரத்தைச் செழுமைப்ப்டுத்த மொழிநடையில் தன் கற்பனை தன்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்திருக்கலாம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.24 காட்சிகளில் புத்தரின் வாழ்வினை மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகின்றார். முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்  ஒவ்வொரு காட்சிக்குள் நுழையும்போதும் படிக்கின்ற உணர்வைவிட களத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.  இந்த உரைநட