சோழ நாட்டில் பௌத்தச் சுவடுகள் : ஆதிவனம்

ஈரோட்டில் நேற்று (9 அக்டோடர் 2022) நடைபெற்ற பொழிவிற்கு வாய்ப்பு தந்த ஆதிவனம் அமைப்பிற்கும், பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும். முகநூலில் பதிந்த நண்பர்களுக்கும்....

ஆதிவனம் அமைப்பின் முகநூல் பக்கத்திலிருந்து.....

நிறைய தகவல்களோடும்,
தெளிவான உச்சரிப்போடு
பொறுமையாக, நிதானமாக
பல தகவல்களை பகிர்ந்தார்.

பெளத்தம் பற்றி பள்ளிக்
காலத்தில் படித்திருப்போம்
அதன் பின்பு சில தகவல்களை
கேட்டோ படித்தோ இன்னும் கொஞ்சம்
அதிகமாக தெரிந்திருப்போம்
ஆனால் களத்தில் நேரடியாக
ஆய்வு கொண்டவர்களுடன்
பேசும் போது
சுவாரஸ்யம் அதிகம் ஆகுது.

நிறைய புதிய தோற்ற புத்தர் சிலைகளை அறிமுகப்படுத்தினார்.
#முக்கியமாக_அவர்_ஒரு_புத்தர்_சிலையை_காட்டினார்.
#அது_தலை_இல்லாத_புத்தர்_சிலை.
அவ்வளவு அழகு...ஆம்
#தலை_இல்லாமலேயே_அத்தனை_அழகாக_தெரிந்தார்.
என்னே...கம்பீரம்!!!
சில சிலைகள் ரொம்ப ஆபத்து
நிறைந்த பகுதிகளில் இருப்பது
வருந்த கூடிய விஷயம் தான்
உண்மையை சொல்லனும்னா
பெளத்தம்_சமணம் பற்றி இன்னும்
நிறைய பேருக்கு குழப்பமாக
தான் இருக்கும்
ஏன்..சிலைகளில் கூட
நம்மால் இயல்பாக
வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது
ஆனால் இன்று அதற்கான
விளக்கங்களை
அருமையாக
கொடுத்தார்.

சோழர்கள் காலத்தில் பெளத்தம்
எப்படி இருந்தது?
மொத்தம் எவ்வளவு சிலைகள்.,
அவைகள் எங்கே இருக்கின்றன?
இப்போது எல்லா சிலைகளும்
இருக்கின்றனவா!!
எல்லாவற்றிற்கும் பதில் அளித்தார்.

நிறைய சிலைகளை அவர்
நிழற்படங்களாக காட்டும் போது
அதில் பல சிலைகள் கொடூரமாக
சிதைக்கப்பட்டிருந்தது
அப்போது இருந்த நபர்களின்
காழ்ப்புணர்ச்சியாக கூட இருக்கலாம்
சிலைகள் கண்டுபிடித்த விதம்
அதில் சிதைந்த சிலைகளின் விளக்கம்
களப்பணி ஆற்றிய விவரங்கள்
களப்பணி எப்படி செய்ய வேண்டும்
கட்டுரைகளை அப்டேட் பண்ணுற
வரை தகவல்களை விளக்கினார்.

ஆய்வு ஆரம்பிக்க நினைக்கும்
அனைவருக்கும் ரொம்ப
உந்துதலாக இருக்கும்
இவருடைய உழைப்பை
மற்றவர்களும் பயன்படுத்தியது
முதல் அனைத்தையும் கூறினார்.

ஒரு ஆசிரியர் அல்லாத ஊழியர்
ஒருவர் முனைவர் பட்டம் பெறும் போது
நடைமுறை சிக்கல்களையும்,
அதை எவ்வாறு கடந்து பட்டம்
பெற்றார் என்பதையும் பகிர்ந்தார்
ரொம்ப நாள் கழித்து
நண்பர்களை சந்தித்ததும்
புதியவர்களை கண்டதும் இன்னும்
ரொம்ப மகிழ்வாக இருந்தது...
நன்றிகள்
#ஆதிவனம்_அமைப்பு
#ஈரோடு







தினகரன், கோவை பதிப்பு,  14 அக்டோபர் 2022, பக்கம் 12


7 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தங்களது பணி மேலும் சிறக்கட்டும் வாழ்க வையகம்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஐயா.
    தங்களின் உழைப்பும், உழைப்பின் வெளிப்பாடும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைவது போற்றுதலுக்கு உரியது ஐயா.
    தங்களின் தேடலும், பணியும் தொடரட்டும்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete

Post a Comment