Posts

Showing posts from August, 2020

களப்பணி ஆய்வுகள் : மணற்கேணி ஆய்விதழ்

Image
1993இல் தொடங்கப்பட்ட களப்பணியின்போது ஒரு முறை கிடைத்த அனுபவம் வித்தியாசமானது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி என்று நினைவு. புத்தர் சிலை இருப்பதாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பயணம். ஆட்களே இல்லாத காட்டுப்பகுதி போன்ற இடமாக இருந்தது. ஆங்காங்கே சில மரங்கள். ஒருவரும் கண்ணுக்குத் தென்படவில்லை. சரியான உச்சி வெயில். எங்காவது புத்தர் சிலை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றேன். 1970களில்  எங்கள் ஆத்தா, “உச்சுறுமும் நேரத்திலே கொல்லப்பக்கம் போகாதீங்க” என்று சொன்னது நினைவிற்கு வந்தது. சற்றே நடுக்கம். ஒருவர் வருவது போல இருந்தது. அருகில் வந்ததும் அவர், “உங்களுக்கு பூ வாசம் தெரிகிறதா?” என்றார். “இல்லை” என்றதும், “உங்களை உரசிக்கொண்டு ரயில் போவது போல இருந்ததா?” என்றார். எனக்கு பயம் அதிகமாகவே குலதெய்வம் முதல் தெரிந்த அனைத்து சாமிகளின் பெயர்களையும் உச்சரித்துக்கொண்டே நடந்தேன். மறுபடியும் தொடர்ந்து வந்த அவர், “உங்களுக்கு ஏதாவது ஆனால் அதோ அருகில் என் வீடு உள்ளது. வாருங்கள்” என்றார். “பேய், பிசாசு அடிப்பதைப் போலக் கூறுகின்றீர்களே? சுய நினைவில் இருந்தால்தானே வர