வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைத்தளம்

வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன் அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது. என் கட்டுரை வெளியான அவரது தளத்தின் பக்கத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவ