பௌத்த சுவட்டைத் தேடி : கங்கைகொண்ட சோழபுரம்
10 பிப்ரவரி 1997
சோழ
நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வில் திருச்சி மாவட்டமும் அடங்கும் என்ற நிலையில் திருச்சி
மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு களப்பணி செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் பல இடங்களைச்
சுற்றியதால் ஓரளவு என்னால் திட்டமிட முடிந்தது. திருச்சியில் பார்க்வேண்டியவை மற்றும்
பார்க்க வேண்டியவர்கள் என்ற நிலையில் திட்டமிட்டு தொல்லியல் துறை பதிவு அலுவலர் அலுவலகம்
மற்றும் அருங்காட்சியகம் சென்றேன். அப்போது
திருச்சி அருங்காட்சியக் காப்பாளர் திரு ராஜமோகன் அவர்களுடன் விவாதித்ததில் எனக்குக்
கிடைத்த தகவல்களில் ஒன்று, அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு புத்தர் சிலை
என்பதுதான். நான் களப்பணி சென்ற காலத்தில் அரியலூர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது.
ஆய்வின் களம் என்ற நிலையில் அரியலூர் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன்.
டி.என்.வாசுதேவராவ் (1979) ஒருங்கிணைந்த தஞ்சாவூர்
மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை
உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாகக் குறிப்பிட்ட இடங்களில் அரியலூர்
புத்தரும் ஒன்று. புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of
Pondicherry) தன் தொகுப்பில் இச்சிலையைப் பற்றிக் கூறியுள்ளது. பின்னர்தான் சிவராமலிங்கம்
(1997) இச்சிலையைப் பற்றி குறிப்பிட்டதை அறிந்தேன். வரலாற்றறிஞர் முனைவர் அரியலூர்
தியாகராஜன் முனைவர் சந்திரகுமார் இச்சிலையைப் பற்றிக் கூறியிருந்தனர்.
18 மார்ச் 1999
அரசு விடுமுறை (தெலுங்கு வருடப்பிறப்பு) நாளில் திருச்சி
மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர் சென்றேன். அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக
இருந்த சிலையைப் பார்த்ததும் சோழ நாட்டில் பிற இடங்களில் நான் பார்த்த பல புத்தர் சிலைகள்
நினைவிற்கு வந்தன. இச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்தது. கோட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் சிலையைப் புகைப்படம் எடுக்க உதவி செய்து ஆய்வினைப் பாராட்டினார்.
அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். தொடர்ந்து இராயம்புரம்,
பரவாய், ஒகளூர் சென்று நான்கு புத்தர் சிலைகளைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். இதனைப்பற்றி முன்பொரு பதிவில் விவாதித்துள்ளோம்.
அடுத்தடுத்து பல முறை அங்கு சென்றேன். அது தொடர்பான அனுபவங்களைத் தொடர்ந்து காண்போம்.
டிசம்பர் 2003
அவ்வப்போது அருகிலுள்ள அருங்காட்சியங்களுடன் தொடர்பு
கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியக் காப்பாட்சியர், "புதிதாகக் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிற்பம் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். இச்சிற்பத்துடன் மொத்தம் மூன்று புத்தர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வேறு புத்தர் சிலையேதும் இங்கு இல்லை." என்று 23.12.2003 நாளிட்ட கடிதத்தில் மறுமொழி எழுதியிருந்தார்.
அவரது கடிதம் கிடைத்ததும் அவருக்கு நன்றி கூறி கடிதம்
எழுதினேன், எனது ஆய்விற்கு அவரது தகவல் மிகவும் உதவியாக இருக்கும் என்று அக்கடிதத்தில்
கூறினேன். இவ்வருங்காட்சியகத்தில் கீழக்கொளத்தூர், வலங்கைமான் ஆகிய இடங்களைச் சேர்ந்த புத்தர் சிலைகளும் உள்ளன.
களப்பணியின்போது பொதுவிடத்தில் வெயிலிலும் மழையிலும்
இருந்த ஒரு புத்தர் சிலை அருங்காட்சியகத்திற்குச் சென்றதறிந்து மகிழ்ந்தேன். இவ்வாறாக
ஒரு சில புத்தர் சிலைகள் மட்டுமே இவ்வாறாக உரிய நேரத்தில், இடத்தில் பாதுகாப்பாகச் சென்றடைகிறது.
19 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
தங்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது ஐயா
ReplyDeleteதங்களது களப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteத.ம. 2
ReplyDeleteதங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்
தங்கள் ஆய்வுப் பணி தொடர
எனது வாழ்த்துகள்
மிக அரிதான தொண்டு. தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம 3
உங்கள் சிறப்பான பணி மேலும் தொடரட்டும்.....
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி.
Great, keep up and discover the buried history. We have acknowledged your work in our latest book & will send you a pdf of it although it is in our mother tongue; you may see your picture and notes mentioning you.
ReplyDeleteதங்கள் பணியினைப் போற்றி வணங்குகின்றேன்.
ReplyDeleteஉங்கள் முயற்சியால் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள் அருங்காட்சியகத்துக்குச் செல்வதைக் காணுபோது மகிழ்ச்சிதானே
ReplyDeleteமிக சிறந்த பணி. கவனிப்பாரற்றுக் கிடக் கிடக்கும் சிலைகளின் பெருமையை உலகறிய செய்ய உரிய இடத்தில் சேர்த்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteமிக சிறந்த பணி. கவனிப்பாரற்றுக் கிடக் கிடக்கும் சிலைகளின் பெருமையை உலகறிய செய்ய உரிய இடத்தில் சேர்த்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteதங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteயாழ்பாவாணன்