Posts

Showing posts from March, 2021

தமிழ்நாட்டு சமணத் தளங்கள் : களப்பணியில் கண்ட சமணர் சிலைகள்

Image
சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்விற்காக 26 பிப்ரவரி 1999இல் முதன்முதலாக பாண்டிச்சேரியிலுள்ள  புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் (French Institute of Pondicherry)  சென்று அங்குள்ள புத்தர் சிலைகளின் புகைப்படங்களைப் பற்றிய குறிப்புகளை எடுத்து வந்தேன். அதனைப் பற்றிய குறிப்புகளை முனைவர் பட்ட ஆய்வேட்டில் தந்துள்ளேன். ஆய்வேட்டினை நிறைவு செய்த பின்னர் அங்கு பல முறை சென்றுள்ளேன். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர்  அவர்கள் வெளியிட்ட குறுந்தகட்டில் என் களப்பணியின்போது காணப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். 2018இல் அந்நிறுவனம்  தமிழ்நாட்டு சமணத் தளங்கள் (Jain sites of Tamil Nadu) என்ற குறுந்தகட்டினை பிப்ரவரி 2018இல் வெளியிட்டது.   நிகழ்வின்போது  திரு கே.ரமேஷ்குமார் அதன் சிறப்பை எடுத்துரைத்தார்.   அதில் தமிழ்நாட்டில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள், குகைக்கோயில்கள், பாழடைந்த கோயில்களின் 7,873 புகைப்படங்கள் காணப்படுகின்றன.  சோழ நாட்டில் பௌத்தம் (முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கல