இராசேந்திர சோழரின் 1009ஆம் ஆண்டு முடிசூட்டுப் பெருவிழா

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மைப்பிரிவும் தமிழ்த்துறையும், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவும் இணைந்து 15 ஜூலை 2023ஆம் நாள் இராசேந்திர சோழரின் 1009ஆவது ஆண்டு முடிசூட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கத்தினை நடத்தின.

முக்கிய விருந்தினர்கள் குத்துவிளக்கேற்ற விழா தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து நட்ராஜ் நாட்யா குழுவினரின் நாட்யாஞ்சலி நடைபெற்றது.

திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் ஆர்.திருமுருகன் முன்னிலையில், சட்டக்கல்விப்புல முதன்மையர் பேரா.ப.ச.வேல்முருகன் தலைமையுரை ஆற்றினார். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ.ஜான் பீட்டர் உரையாற்றினார்.

மதிய அமர்வில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் முனைவர் துளசேந்திரன், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், இந்தியத்தொல்லியல் துறை கல்வெட்டியல் பிரிவின் இயக்குநர் (பணி நிறைவு) திரு பி.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் (பணி நிறைவு) திரு கஜேந்திரன், திருவாரூர் முத்தமிழ் பண்பாட்டு பாசறை அறக்கட்டளைச் செயலர் திரு ஆரூர் சீனிவாசன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மாண்பமை மு.கிருஷ்ணன் பாராட்டுரை வழங்கியதோடு, நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.

முன்னதாக, குழுவின் தலைவர் திரு உதயசங்கர் நோக்கவுரை ஆற்றினார். செயற்குழு உறுப்பினர் திரு கபிலன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் திரு ஆண்டவர் கனி நன்றி கூறினார்.



துணைவேந்தரிடம் ஜம்புலிங்கம் நூலை வழங்கல். உடன் வலமிருந்து
குழுத்தலைவர் உதயசங்கர், கல்வெட்டியல் துறைத்தலைவர் ச.ரவி

துணைவேந்தர் உரையாற்றல்.
மேடையில் வலமிருந்து பி.வெங்கடேசன், கஜேந்திரன், ஜம்புலிங்கம், ரவி



பி.வெங்கடேசன்,  ஜம்புலிங்கத்திற்கு நினைவுப்பரிசு வழங்கல்.
உடன் குழுத்தலைவர் உதயசங்கர், துறைத்தலைவர் ச.ரவி


காலை அமர்வில் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என்னுடைய நூலைப் பற்றிய அறிமுகத்தைத் தந்ததோடு, களப்பணியின்போது எதிர்கொண்ட அனுபவங்களையும், அண்மையில் பழையாறையில் பார்த்த புத்தர் சிலை உள்ளிட்ட அண்மைச் செய்திகளையும் பகிர்ந்துகொண்டேன்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பளித்த குழுவினருக்கும், என் நூலை ஏற்றுக்கொண்ட துணைவேந்தருக்கும் மனமார்ந்த நன்றி.




ஒளிப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு

Comments