Posts

Showing posts from 2014

பௌத்த சுவட்டைத் தேடி : அரியலூர், இராயம்புரம், பரவாய், ஒகுளூர்

Image
போதிய குறிப்புகள், செய்திகளைத் திரட்டிக்கொண்டு செல்லும்போதுகூட  பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகளைப் பார்த்த அனுபவத்தினை ஒரு களப்பணியில்போது பெற்றேன். அத்துடன் வேறு இரு புத்தர் சிலைகள் இருப்பதையும் அறிந்தேன். அது என் ஆய்வில் மறக்க முடியாத அனுபவமாகும். களப்பணியின்போது தஞ்சாவூரில் தொடங்கி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த அரியலூர், இராயம்புரம், குன்னம், பரவாய் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். 15 வருடங்களுக்கு முன் நான் சென்ற இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் பெருமையடைகிறேன். 18.3.1999 (தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை நாள்) அரியலூர் அரியல ூர் புத்தர் (1999)  புகைப்படம் ஜம்புலிங்கம்  என் பயணத்திட்டத்தில் முதலில் தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்குப் பேருந்தில் சென்றேன். அங்கு கோட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புத்தர் சிலை உள்ளதாக திருச்சி அருங்காட்சியக காப்பாளர் திரு இராஜ்மோகன் மற்றும் அரியலூர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இல. தியாகராஜன் ஆகியோர் கூறியிருந்தனர். (தற்போது இருவரும் பணி நிறைவு பெற்றுவிட்டனர்). கோட்ட ஆட்சியா

புத்தகயா 2014

Image
அலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 2014 முதல் வாரம் தொடங்கி புனிதப்பயணம் மேற்கொண்டோம்.  அவ்விடங்களில் புத்தகயா பயணம் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். பயண அனுபவம் விரைவில் உங்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். மகாப ோதி க ோயில் (நுழைவாயில்), புத்தகயா மகாப ோதி க ோயில் (நுழைவாயில்) பூமியைத்த ொட்ட க ோலத்திலுள்ள புத்தரை வழிபடும் பக்தர்கள்    க ோயில் வளாகத்தில் ப ோதி மரம் சித்தார்த்தர், புத்தர் ஆனதைக் குறிக்கும் கல்வெட்டு ப ோதி மரத்தை வழிபடும் பக்தர்கள்   ப ோதி மரத்தை வழிபடும் புத்த பிக்கு ப ோதி மரத்தருகில் பிக்குகளுடன் பக்தர்கள் ப ோதி மரத்தருகில் புத்த பிக்குகளுடன் பக்தர்கள் க ோயில் வளாகத்தில் பக்தர்கள் க ோயில் வளாகம்    க ோயில் வளாகத்தில் புத்தர் சிற்பங்கள் க ோயில் வளாகத்தில் புத்தர் சிற்பங்கள் க ோயில் வளாகம் க ோயில் வளாகம் க ோயில் வளாகம் க ோயில் வளாகத்தில் புத்தர் சிற்ப

ஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை

Image
கவிதை வடிவில் புத்தரைப் பற்றிய அரிய நூல். பௌத்தம் தொடர்பான ஆய்வில் அடியெடுத்து வைத்த காலத்தில் (1993வாக்கில்) இந்நூலைப் பற்றி நண்பர்களும், அறிஞர்களும் எடுத்துக்கூறியதைக் கேட்டு வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் இந்நூலை மறுபடியும் படித்தேன். புத்தர் வரலாற்றைப் பற்றிய அரிய செய்திகள் கவிதைகளாக, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதான வகையில் அமைந்துள்ளது. நான் வாசித்ததைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். "நமது பழந்தமிழ் நூல்களில் புத்தரைப் பற்றியும், பௌத்த சமயத்தைப் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. எனினும் அவற்றைக் கொண்டு நாம் புத்தர் பெருமானுடைய வரலாற்றை முற்றிலும் அறிந்துகொள்ள இயலாது. அக்குறையைக் கவிமணியவர்களின் ஆசிய ஜோதி இப்பொழுது போக்கிவிட்டது. ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு ஆசிய ஜோதி (Light of Asia) என்றும் பெயரில் கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். அந்நூலைத் தழுவி தமிழ் மணம் கமழக் கவிமணியவர்கள் பழகுதமிழில் பாடியளித்திருக்கிறார்கள்" என்ற குறிப்பு பதிப்புரையில் காணப்படுகிறது. இந்நூல் புத்தர் அவதாரம், அருள் உரிமை, காதல் பிறந்த கதை, சித்த

பௌத்த சுவட்டைத் தேடி : குழுமூர், பெரம்பலூர் மாவட்டம்

Image
ஜனவரி 2005 எனது ஆய்வினைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்து அறிமுகமானவர்களில் ஒருவர் திரு அரும்பாவூர் திரு செல்வபாண்டியன். தொலைபேசியில் தன்னை அறிமுகப்படுத்தி பேசியபோது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய பட்டியலில் நான் பார்க்காதது செந்துறை வட்டத்தில் குழுமூர் என்னுமிடத்தில் உள்ள புத்தர் சிலை. எழுத்தாளர் பழமலய் அவர்கள் எழுதியுள்ள (இது எங்க சாமி, ஆனந்தவிகடன், 31.10.2004) கட்டுரையில் இச்சிலையைப் பற்றிக் கூறியுள்ளதாகத் தெரிவித்து, அதன் நறுக்கினை எனக்கு அனுப்பிவைத்திருந்தார். ஜுன் 2006 அந்த புத்தரைக் காணும் வாய்ப்பு கிடைக்க ஒரு வருடத்திற்கு மேலானது. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் மருதையான்கோயில் என்ற பேருந்து நிறுத்தத்திற்கு வரக்கூறினார். அதன்படி தஞ்சாவூரிலிருந்து அரியலூர் சென்றுவிட்டு (அரியலூர்-செந்துறை-குழுமூர் பேருந்து வரத் தாமதமானதால்) அப்போது நின்றுகொண்டிருந்த திட்டக்குடி/பெரம்பலூர் பேருந்தில் சென்று மருதையான் கோயில் நிறுத்தத்தில் இறங்கினேன். அங்கிருந்து தொடர்புகொண்டபோது அவர் பைக்கில் வந்தார். அவருடன் துங்கபுரம் வழியாக குழுமூர் சென்றேன்

ஆபுத்திர காவியம் : மு.கு.ஜகந்நாதராஜா

Image
----------------------------------------------------------------------------------------------------------   தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ்நாட்டிற்கு வந்தபோது (1-5.1.1995) முதன்முதலாக பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது பௌத்த ஆய்வைப் பற்றி தெரிவித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து அம்மாநாட்டில் அவர் அளிக்கவிருந்த சமண, பௌத்த தத்துவ வேறுபாடுகள் என்ற தலைப்பிலான கட்டுரையின் படியை என்னிடம் தந்து  வாழ்த்து தெரிவித்தார். எனது ஆய்வினை பாராட்டிய பெரியோரில் இவரும் ஒருவர். இவருடைய காவியத்தைப் படித்து, பகிர்வதில் பெருமையடைகின்றேன். ----------------------------------------------------------------------------------------------------------  பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா (ஜூலை 26, 1933  - டிசம்பர் 2, 2008) அவர்கள் எழுதியுள்ள ஆபுத்திரன் வரலாறு கூறும் காவியமான ஆபுத்திர காவியம் படித்தேன். முழுக்க முழுக்க காவிய நடையில் அமைந்துள்ள இந்நூலில் ஆபுத்திரனின் வரலாற்றைத் தந்துள்ளார் ஆசிரியர். முன்னுரையில் அவர் மணிமேகலையின் காவியச் சிறப்பை எடுத்

பௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் பரசுராமர் குளம்

Image
8.6.2014  இன்று மதியம் முதல் எனக்கு தொடர்ந்து நண்பர்களிடமிருந்தும், அறிஞர்களிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள். "தஞ்சாவூரில் ஏதோ சமணர் சிலை கண்டுபிடித்துள்ளார்களாம், பார்த்தீர்களா? சிலர் புத்தர் என்றும் கூறிக்கொள்கிறார்கள்". தொடர்ந்து மாலை செய்தித்தாளில் 'தஞ்சையில் இன்று மீன் வலையில் சிக்கிய சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்' என்ற தலைப்பில் செய்திவெளியாகியிருந்தது.  வலையில் இரு சிலைகள் சிக்கியதாகவும் அதில் ஒன்று மகாவீரர் சிலை என்றும் இன்னொரு சிலை 11 முகங்களைக் கொண்ட பிரம்மமூர்த்தி சிலை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. புகைப்படம் நன்றி  தி இந்து செய்தியுடன் காணப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தபோதே ஒரு சிலை புத்தர் சிலை, மகாவீரர் சிலை அல்ல என்பதை உணரமுடிந்தது.  9.6.2014 மறுநாள் காலையில் செய்தித்தாள்களில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரெட்டிப்பாளையம் சாலையின் அருகில் உள்ள குளத்தில் (ராமநாதபுரம் ஊராட்சி, காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பரசுராமர் குளம்) மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் வலையில் இரு சிலைகள் சிக்கியதாக செய்தி வெளியாகியிருந்தது. சில ச

கௌதம புத்தர் (உரைநடை நாடகம்): கு.வெ.பாலசுப்பிரமணியன்

Image
 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள  கௌதம புத்தர் (உரைநடை நாடகம்) என்ற நூல் மூலமாக நம்மை நிகழ்வுகள் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். வரலாற்றுக் கதைச்சுருக்கத்தைத் தொடர்ந்து (பக்.13-16) நாடக உறுப்பினர்களை அறிமுகப்படுத்துகின்றார் ஆசிரியர் (பக்.17-18). காட்சியின் தொடக்கத்தில் புத்தரின் அறநெறிகளைத் தம்ம பதம், மஜ்ஜிம நிகாயம், சம்யுக்த நிகாயம், அங்குத்த நிகாயம், சுத்த பிடகம், மணிமேகலை,  சுத்த நிகாயம் போன்ற நூல்களிலிருந்து  தந்துள்ளார். புத்தரைக் குறித்துப் பல நூல்களிலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்நாடகத்தை உருவாக்கியுள்ளதாகவும், நிகழ்ச்சிகளில் தன் கற்பனைக்கு இடமில்லை என்றும், உரையாடலில் பாத்திரத்தைச் செழுமைப்ப்டுத்த மொழிநடையில் தன் கற்பனை தன்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்திருக்கலாம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.24 காட்சிகளில் புத்தரின் வாழ்வினை மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகின்றார். முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்  ஒவ்வொரு காட்சிக்குள் நுழையும்போதும் படிக்கின்ற உணர்வைவிட களத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.  இந்த உரைநட

தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் : பிக்கு போதிபாலா, க.ஜெயபாலன், இ.அன்பன்

Image
பௌத்தம் தொடர்பாக பதிவுகள் அருகிவரும் இக்காலக்கட்டத்தில் வெளியாகியுள்ள ஓர் அரிய நூல் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம்.  24.3.2013இல் சென்னையில் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 35 தமிழ்க்கட்டுரைகளையும், 5 ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம் பின்வரும் நோக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது: "உலகம் முழுவதும் இன்றைக்குப் பௌத்தம் உள்ளது. உலகம் முழுவதும் பௌத்தம் பரவிடச் செய்தவர்கள் தமிழர்களே. தமிழக பௌத்த அறிஞர்கள்தான் பாலி மொழியில் பௌத்த மறைகளுக்குச் சிறந்த உரைகளை வகுத்துள்ளனர். இந்த உண்மைகளைத் தமிழர்களும் உணரவில்லை. தமிழரல்லாதாரும் பெருமளவில் அறியவில்லை. இதை நீக்கியாக வேண்டும். இலங்கை, பர்மா (மியான்மர்), திபெத், தாய்வான், சீன நாடுகளில் இன்றைக்கும் தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன. இவைகளை உலகம் அறியவேண்டும். இக்கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் உலகத்திற்கே பௌத்தத்தைப் போ

In search of imprints of Buddhism: Perandakottai, Thanjavur district

Image
DECEMBER 1999 Archaeologist Mr K. Sridharan, who was instrumental in  helping me to identify a Buddha with moustache in Mangalam , Trichy district, was one among the scholars who were helping to my research. The newspaper cli p ping of 1978 of The Mail (date not available) sent by him helped me to locate a head of Buddha statue in Perantakottai, situated on the Thanjavur-Mannargudi road, at a distance of 12 km from Thanjavur.       THE MAIL clipping of 1978 sent by Mr K.Sridharan From the newspaper clipping it was learnt that a Buddha statue of 11th century CE was identified by the State Archaeology of Government of Tamil Nadu. In the accompanying photograph a head of Buddha was found. Based on the information sent by him I went to Perantakottai (next to Kattur and Padikkolam bus stops) on the Thanjavur-Vaduvur town bus. When I enquired about the Buddha I could not get any information. I continued my enquiry and continued to walk. When I asked for Buddha the locals looked