Posts

Showing posts from January, 2016

சமண சுவட்டைத் தேடி : செங்கங்காடு

Image
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ ஐந்தாண்டு நிறைவு மகாமகம் காணவுள்ள 2016இல் சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது முதல் வலைப்பூ ஐந்தாண்டு நிறைவு பெறுவதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். என் எழுத்துக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். களப்பணியைத் தொடர்வோம்.  1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியின்போது புத்தர் சிலைகளை மட்டுமே பார்த்துவந்தேன். திரு தில்லை கோவிந்தராஜன் உள்ளிட்ட பல நண்பர்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளின் கூறுகளை எடுத்துக் கூறி அவற்றையும் பார்க்கும்படிக் கூறியதன் அடிப்படையில் புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். இவ்வகையில் புத்தருடன் மகாவீரரும் சேர்ந்துகொண்டார்.   இவ்வாறான வகையில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் களப்பணியில்  காணும் வாய்ப்பு கிடைத்தது. 1999இல் விக்ரமத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன்.   அச்சிலையைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் செங்கங்காடு என்னுமிடத்தில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த சமணரைக் காண செங்கங்காடு செல்வோம்.   13 பிப்ரவரி 1999 விக்ரமத்தி