தஞ்சை பௌத்தச் சுவடுகள் : தஞ்சாவூர் சுழற்சங்கம்

10 மார்ச் 2020 அன்று தஞ்சாவூர் சுழற்சங்கத்தில் (Rotary Club of Thanjavur) தஞ்சையில் பௌத்தச்சுவடுகள் என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
இடமிருந்து வலமாக : தலைவர் எம்.தினேஷ்குமார், மகேந்திரன், ஜம்புலிங்கம், சி.குணசேகரன், செயலர் கே.விசாகன்


  


இடமிருந்து வலமாக : ஜம்புலிங்கம், தலைவர் எம்.தினேஷ்குமார், குணசேகரன், ஆஸ்திரிய நாட்டு சுழற்சங்க உறுப்பினர் ஜான் அடால்ப் கோகஸ், செயலர் கே.விசாகன்

தத்துவம், இலக்கியம் என்பதற்கு மாறாக களப்பணியில் அடியெடுத்து வைக்க முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கருத்து கூறியது.
1993இல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலைகள், காட்சிப்பேழையில் உள்ள நாகப்பட்டின புத்தச்செப்புத்திருமேனியைக் கண்டது.
பல சிலைகளை ஆரம்பத்தில் புத்தரா சமணரா என்று அறிந்துகொள்ள இயலா நிலையில் சிரமப்பட்டது.
அய்யம்பேட்டையில் வழிபாட்டில் இருந்த ஒரே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்டது.
மூல அனுமார் கோயில் பின்புறம் இருந்த சமணர் சிலையை முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் உதவியுடன் காணச்சென்றது.
பெரிய கோயிலில் இரு இடங்களில் புத்தரின் சிற்பங்கள் காணப்படுவது.
போன்றவை உள்ளிட்ட பல அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

முன்னதாக செயலர் திரு விசாகன் அறிக்கை வாசித்தார். புதிய உறுப்பினர்கள் அறிமுகப்டுத்தப்பட்டனர். தலைவர் திரு தினேஷ்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆஸ்திரியாவைச் சேர்ந்த சுழற்சங்க உறுப்பினர் விருந்தினராக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்தார். நன்றியுரையில் திரு ஜெயபால் அவர்கள் என்னுடன் களப்பணி வந்தது உள்ளிட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தஞ்சையின் மூத்த சுழற்சங்கமான தஞ்சாவூர் சுழற்சங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றியது ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக அமைந்தது.

புகைப்படங்கள் நன்றி : தஞ்சாவூர் சுழற்சங்கம்

Comments

  1. மகிழ்ந்தேன்
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  2. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஐயா

    ReplyDelete
  3. சிறப்பு, பாராட்டுகள்
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் எமது...

    ReplyDelete
  5. மகிழ்ச்சி...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  6. மிகவும் அருமை. வாழ்த்துகள் ஜம்பு சார்:)

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஐயா

    கீதா

    ReplyDelete

Post a Comment