Posts

Showing posts from 2022

சோழ நாட்டில் புத்தர் சிலைகள்

Image
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பாக 30 நவம்பர் 2022இல் நடைபெற்ற, இணையவழி உரைத்தொடரில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்கிறேன். தமிழ் மரபுக்கு நன்றி. 26 நவம்பர் 2022இல் நடைபெறுவதாக இருந்த நிகழ்வு தவிர்க்க இயலாத காரணங்களால் 30 நவம்பர் 2022இல் நடைபெற்றது. ----------------------**--------------------- அனைவருக்கும் வணக்கம், வரும், நவம்பர் 30 ஆம் தேதி புதன்கிழமை... இந்திய / இலங்கை நேரம் மாலை 6:00 மணிக்கு... தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் ----------------------**--------------------- திசைக்கூடல் - 312 ----------------------**--------------------- இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சி ----------------------**--------------------- திருவள்ளுவர் ஆண்டு 2053, கார்த்திகை 14 30-11-2022, புதன்கிழமை ----------------------**--------------------- தலைப்பு: "சோழ நாட்டில் புத்தர் சிலைகள்" - (சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்) சிறப்புரையாளர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் பௌத்த ஆய்வாளர் உதவிப் பதிவாளர் (பணிநிறைவு) தமிழ்ப...

துபாய் புத்தர்: திரு கரந்தை ஜெயக்குமார்

Image
துபாய் புத்தர் தேடிச் சோறுநிதந் தின்று – பல      சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர்      வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –  பல வேடிக்கை மனிதரைப் போல – நான்      வீழ்வே னென்றுநினைத் தாயோ?      இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும். காரணம், வேடிக்கை மனிதராய் வீழ்ந்துவிடாமல், இப்புவியில், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை, அழுத்தமாய் விட்டுச் செல்ல, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள்.      இவரது உழைப்பு.      இவரது தேடல்.      ஓயாத தேடல்.      ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப் படிப்பிற்காகத் தேடினார்.      முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேடினார்.      ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுவிட்டார...

நூல் வடிவம் பெறும் சோழ நாட்டில் பௌத்தம்

Image
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (B.Jambulingam,  Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District , Madurai Kamaraj University, Madurai, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (பா.ஜம்புலிங்கம்,  சோழ நாட்டில் பௌத்தம் , தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999), புதுதில்லி, நேரு டிரஸ்ட் மூலமாக ஓர் ஆய்வுத்திட்டத்தினையும் ( Buddhism in the Cola country , Project,  Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum , New Delhi, 2002) நிறைவு செய்தேன்.  தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கின்றேன்.  பணியாற்றிக்கொண்டே களப்பணியினை மேற்கொண்டபோது எதிர்கொண்ட சூழல் சற்றே சிரமமானது. இருப்பினும் எந்த நிலையிலும் ஆய்வேட்டில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு பல இடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை களப்பணி சென்றேன். அவ்வப்போது பெற்ற அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர்ந்ததோடு, அதில் மா...

சோழ நாட்டில் பௌத்தச் சுவடுகள்

Image
ஆதிவனம் அமைப்பின் முகநூல் பக்கத்திலிருந்து..... நிறைய தகவல்களோடும், தெளிவான உச்சரிப்போடு பொறுமையாக, நிதானமாக பல தகவல்களை பகிர்ந்தார். பெளத்தம் பற்றி பள்ளிக் காலத்தில் படித்திருப்போம் அதன் பின்பு சில தகவல்களை கேட்டோ படித்தோ இன்னும் கொஞ்சம் அதிகமாக தெரிந்திருப்போம் ஆனால் களத்தில் நேரடியாக ஆய்வு கொண்டவர்களுடன் பேசும் போது சுவாரஸ்யம் அதிகம் ஆகுது. நிறைய புதிய தோற்ற புத்தர் சிலைகளை அறிமுகப்படுத்தினார். #முக்கியமாக_அவர்_ஒரு_புத்தர்_சிலையை_காட்டினார் . #அது_தலை_இல்லாத_புத்தர்_சிலை . அவ்வளவு அழகு...ஆம் #தலை_இல்லாமலேயே_அத்தனை_அழகாக_தெரிந்தார் . என்னே...கம்பீரம்!!! சில சிலைகள் ரொம்ப ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருப்பது வருந்த கூடிய விஷயம் தான் உண்மையை சொல்லனும்னா பெளத்தம்_சமணம் பற்றி இன்னும் நிறைய பேருக்கு குழப்பமாக தான் இருக்கும் ஏன்..சிலைகளில் கூட நம்மால் இயல்பாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது ஆனால் இன்று அதற்கான விளக்கங்களை அருமையாக கொடுத்தார். சோழர்கள் காலத்தில் பெளத்தம் எப்படி இருந்தது? மொத்தம் எவ்வளவு சிலைகள்., அவைகள் எங்கே இருக்கின்றன? இப்போது எல்லா சிலைகளும் இருக்கின்றனவா!! எல்லாவற்றி...

வரலாற்றறிஞர் கும்பகோணம் என்.சேதுராமன்

Image
23.4.1995இல் வரலாற்றறிஞர் கும்பகோணம் சேதுராமன் (குடந்தை சேதுராமன்) அவர்களை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்து ஆய்வினைப் பற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பாக அவரைச் சந்தித்தபோது, அவர் பொறுமையாக விவாதிப்போம் என்று கூறி, ஒரு நாளைக் குறிப்பிட்டு வரும்படி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவரைக் காணச் சென்றேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்து நான் கேட்ட ஐயங்களைத் தெளிவுபடுத்தினார். உரையாடலின்போது கல்வெட்டு அறிக்கைகளை எடுப்பதற்காக இரு முறை மாடிக்குச் சென்று வந்தார். அவருடைய மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தி, ஆய்வு தொடர்பாக நாங்கள் பேசவுள்ளது பற்றி அவரிடம் கூறினார்.  சொந்த ஊர் கும்பகோணம் என்று நான் கூறியதும்,  “ நம்மூர்க்காரப் பையன் இதனைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி ”  என்றார். “Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District” என்ற ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டிற்கான தலைப்பினைக் கேட்டதும், “இத்துறை தொடர்பாக மிகவும் அரிதான ஆய்வுகளே வருகின்றன. அந்த வகையில் இந்த முயற்சி போற்றத்தக்கது. தலைப்பில் பொன்னி எனப்படுகின்ற காவிரியாறு இடம...