Posts

Showing posts from October, 2024

இவர் புத்தர் இல்லை, பகவர்.

Image
மானுடம் அக்டோபர் 2024 இதழில் என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்ட மானுடம் இதழுக்கு நன்றி. ************************************** “கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் சிலை உள்ளது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்” என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். [1]   நாகேஸ்வரர் திருமஞ்சன வீதியிலுள்ள பகவத் (பகவ) விநாயகர் கோயிலின் கருவறையில் விநாயகர் சிலையும்,  முன் மண்டபத்தில் அவர் கூறிய சிலையும் உள்ளது. அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அப்படியே பதிவுசெய்தேன். [2]   அக்கோயிலுக்கு அருகில் பகவத் படித்துறை உள்ளது.   தஞ்சாவூர் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், முதலமைச்சரான கோவிந்த தீட்சிதர் மற்றும் மராட்டிய மன்னர்கள் காவிரி ஆ...

தமிழக பௌத்தம் குறித்தான ஒரு கலைக்களஞ்சியம் : பேரா.கனக. அஜிததாஸ்

Image
முக்குடை செப்டம்பர் 2024 இதழில் என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" (புது எழுத்து, 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, பேராசிரியர் கனக. அஜிததாஸ் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. இதில் ஆங்கிலப் பதிப்பின் அறிமுகமும் இடம் பெற்றுள்ளது. அவருக்கும், அவ்விதழுக்கும் என் நன்றி, ***************************************** இந்த மதிப்புரை தமிழ் மரபுத் திணை அக்டோபர் 2024 இதழிலும் வெளியாகியுள்ளது. அவ்விதழுக்கும் நன்றி. *****************************************

ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல் : கரந்தை ஜெயக்குமார்

Image
  என் Buddhism in Chola Nadu (Pudhu Ezhuthu, Kaveripattinam, Krishnagiri District, Tamilnadu, India, Mobile: +91 9842647101) ஆங்கில நூலைப்பற்றி தன் வலைப்பூவில் மதிப்புரை தந்துள்ள திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என்னுடைய நன்றி. ************************************************** ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல்           சிந்தனை.      ஒரே சிந்தனை.      சற்றேரக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை. இந்த சிந்தனையை மையப்படுத்தியத் தேடல்.      தேடல் என்றால் சாதாரணத் தேடல் அல்ல.      பேருந்து.      மிதி வண்டி.      இரண்டும் இல்லையேல் நடை.      தன் குடும்பத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த சமூகத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த இனத்திற்காகத் தேடவில்லை.      சுத்தமான, சுயநலமற்றத் தேடல். ...

Extraordinary Book : Supraja Kannan

Image
I feel happy to share the review of my book "Buddhism in Chola Nadu" by  Supraja Kannan, with thanks to her. ****************************************** I am thrilled to share my thoughts on this extraordinary book, “Buddhism in Chola Nadu”. Delving deep into the book will transport us to an era, where the Buddhism was at its peak. It accords a plethora of information about the history and influence of Buddhism in the Chola dynasty. Some of the fascinating factors: Before entering into the subject, the author describes the geography of Chola Nadu in detail, including its districts and significant places associated with this ancient region, providing a solid foundation for understanding the history that follows. The author’s meticulous research and references from ancient texts reveal Buddhism’s flourishing past in these areas. The careful curation of quotes and names from various literary sources, including the revered  Thirukural, Silapathigaram, and Manimegalai  makes fo...