Posts

Showing posts from August, 2021

பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் : முனைவர் சீமான் இளையராஜா

Image
முனைவர் சீமான் இளையராஜா எழுதியுள்ள பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும் என்ற நூல் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் கூற்று, புத்தரின் வாழ்வும் நெறியும், கோயில்களின் வரலாறும் பின்னணியும், அயோத்திதாச பண்டிதரின கூற்று, பவுத்தப் பண்டிகைகள், விழாக்கள் என்னும் ஐந்து தலைப்புகளைக் கொண்டுள்ளது. மறைக்கப்பட்ட பவுத்த கோயில்கள், பவுத்தப் பண்டிகைகள் புதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் பற்றியும் அதன் உண்மை வரலாற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே இந்நூலின் முக்கிய நோக்கம் என்கிறார் நூலாசிரியர். நூலில் காணப்படுகின்ற கருத்துகள் சிலவற்றைக் காண்போம். “புத்தம் ஒரு மதமில்லை. அது சனாதனத்துக்கு எதிரான ஒரு ஜனநாயகக் கோட்பாடு. மானுட சமத்துவத்துக்கு வழிகாட்டும் ஒரு வாழ்வியல் நெறி. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்னும் கற்பிதங்களை நொறுக்கும் கருத்தியல்….” (பக்கம் 9) “புத்தர் தம்மை ஒரு அவதாரமாகவோ, கடவுளின் தூதராகவோ, தெய்வப்பிறவியாகவோ, கடவுளாகவோ விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் கூறிக்கொள்ளவில்லை. வேறு எந்தக்கடவுளையும் சுட்டிக்காட்டி வணங்கவோ, வழிபாடு செய்யவோ போதிக்