Posts

Showing posts from July, 2022

பௌத்த சுவட்டைத் தேடி : காஜாமலை

Image
2008இல் மேற்கொண்ட களப்பணியின்போது திருச்சியில் காஜாமலையில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. தகவல் கிடைத்த சில நாள்களுக்குள் அங்கு சென்றேன். 7 அக்டோபர் 2018 தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளரான திரு அதிரடி அன்பழகன் (ஆசிரியர், பெரியார் தொடக்கப்பள்ளி, பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகம், காஜாமலை, திருச்சி) என்னை அலுவலகத்தில் சந்தித்து தான் பணியாற்றுகின்ற இடத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளதாகக் கூறினார். உடன் அங்கு களப்பணி மேற்கொள்ள திட்டமிட்டு, வாய்ப்பிருப்பின் அந்த புத்தர் சிலையின் புகைப்படத்தினைக் கேட்டிருந்தேன். 15 அக்டோபர் 2018 திருச்சிக்குச் செல்ல திட்டமிட்டோம். அவர் அந்த புத்தர் சிலையின் புகைப்படத்தைக் காண்பித்தார். படத்தைப் பார்த்து உறுதி செய்தபின் பயணத்தை மேற்கொண்டோம். காஜாமலை பகுதியிலுள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் அந்தப் புத்தர் சிலை இருந்தது. 72 செமீ உயரமுள்ள அச்சிலையின் தலையில் தீச்சுடர் உடைந்திருந்தது. நீண்டு வளர்ந்த காதுகள், மேலாடை, நெற்றிக்குறி, கையில் தர்மசக்கரக்குறி ஆகியவற்றுடன் அச்சிலை இருந்த