Posts

Showing posts from December, 2021

பௌத்த சுவட்டைத் தேடி : திருநாட்டியத்தான்குடி

Image
23 ஏப்ரல் 1995 கும்பகோணம் என்.சேதுராமன் அவர்களுடன் ஆய்வு பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தஞ்சாவூரில் பௌத்தம் தொடர்பாக அவர் கூறுகின்ற செய்திகளை எதிர்நோக்கிக்கொண்டிருந்தபோது நாகப்பட்டினத்தில் புத்தர் விகாரை, நாகப்பட்டினம் வெளிப்பாளையம், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சோழபுரம், திருநாட்டியத்தான்குடி, திருமலைராயன்பட்டனம், அம்மன்குடி, நாகேஸ்வரர் கோயில் அருகே பகவர், மன்னார்குடி, பட்டீஸ்வரம், புத்தமங்கலம், திருச்சோபுரம், போதிமங்கை போன்ற இடங்களைப் பற்றியும் கூறியிருந்தார். மார்ச் 2003 முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், திரு வி.கண்ணன், திரு கணேசன் ஆகியோருடன் களப்பணி சென்றபோது திருநாட்டியத்தான்குடியில் மூங்கில் தோப்பில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த சிலையின் வலது கையும் தீச்சுடரும் உடைந்த நிலையிலும், கழுத்தும், முகமும் சற்றுச் சிதைந்த நிலையிலும் இருந்தன. உள்ளங்கையில் தர்ம சக்கரத்தைக் காணமுடிந்தது. இப்பகுதியில் மழை வராமலிருக்கும்போது, மழை பெய்வதற்காக இச்சிலைக்கு எருக்க மாலை அணிவித்து துள்ளு மாவு கலந்து, தப்படித்து, கற்பூரம் ஏற்றினால் மழை ...