Posts

Showing posts from October, 2023

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் மதிப்புரை : க. ரவிக்குமார்

Image
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் க.ரவிக்குமார் அவர்களின் மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். ************ ஏப்ரல் 2023 களப்பணியில் நூலாசிரியருடன் க.ரவிக்குமார் (இ) தமிழகத்தில் புத்தர் சிலைகளை பற்றி ஆய்வு செய்வதற்கு மிகச் சிறந்த பொக்கிஷமாக விளங்குகிறது முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சோழ நாட்டில் பௌத்தம்.           அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் பரவிய விதத்தை அசோகரின் சாசனங்கள், தமிழ் இலக்கியங்கள் வாயிலாகவும் பௌத்த பள்ளிகள் விகாரங்கள் ஏற்படுத்தப்பட்டு   மதுரை,   காவிரிப் பூம்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் சிறப்புடன் இருந்தமையை கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது.   வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட சான்றுகள் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் புத்த விகாரங்கள்   மூலமாக புத்த மதம் இப்பகுதியில் செழிப்புடன் இருந்தமையை   இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது.          முதலாம் ராஜராஜ

புத்துயிர் பெறும் பௌத்தம் : நூல் அறிமுகம் : அண்டனூர் சுரா

Image
புதிய புத்தகம் பேசுது அக்டோபர் 2023 இதழில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, திரு அண்டனூர் சுராஅவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. அவருக்கும், வெளியிட்ட இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி. ************ திரு அண்டனூர் சுரா அவர்களுடன் நூலாசிரியர்,  மே 2023

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் மதிப்புரை : இ. ஜெயபிரகாஷ்

Image
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் இ.ஜெயபிரகாஷ் அவர்களின் மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். ************ வெள்ளனூர் புத்தருடன் ஜெயபிரகாஷ்   ஆய்வின் ஊடாக வெளிவந்துள்ள "சோழநாட்டில் பௌத்தம்" என்ற ஆய்வுப்புத்தகம் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இவர் தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்தை முதன்மைப்படுத்தி பௌத்தம் சார்ந்த ஆய்வை "Buddhism in Tamilnadu with special reference to Thanjavur district" என்ற தலைப்பில் நிகழ்த்தி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1995ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். "சோழநாட்டில் பௌத்தம்" என்ற தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு 1999ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு கல்விப்புலம் சார்ந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் பௌத்தம் சார்ந்த ஆய்வில் பா.ஜம்புலிங்கம் ஈடுபட்டுள்ளார். கல்விப்புலம் சார்ந்த ஆய்வுக்காலம் நிறைவுற்ற பிறகும் தொடர்ந்து பௌத்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்க

புத்தர் சிலைகள் சொல்லும் மண்ணின் வரலாறு : உபாசகர் வே.சந்திரசேகர்

Image
போதி முரசு செப்டம்பர் 2023 இதழில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, உபாசகர் திரு வே.சந்திரசேகர் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. அவருக்கும், வெளியிட்ட போதி முரசு இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி. ************