Posts

Showing posts from October, 2022

சோழ நாட்டில் பௌத்தச் சுவடுகள் : ஆதிவனம்

Image
ஈரோட்டில் நேற்று (9 அக்டோடர் 2022) நடைபெற்ற பொழிவிற்கு வாய்ப்பு தந்த ஆதிவனம் அமைப்பிற்கும், பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும். முகநூலில் பதிந்த நண்பர்களுக்கும்.... ஆதிவனம் அமைப்பின் முகநூல் பக்கத்திலிருந்து..... நிறைய தகவல்களோடும், தெளிவான உச்சரிப்போடு பொறுமையாக, நிதானமாக பல தகவல்களை பகிர்ந்தார். பெளத்தம் பற்றி பள்ளிக் காலத்தில் படித்திருப்போம் அதன் பின்பு சில தகவல்களை கேட்டோ படித்தோ இன்னும் கொஞ்சம் அதிகமாக தெரிந்திருப்போம் ஆனால் களத்தில் நேரடியாக ஆய்வு கொண்டவர்களுடன் பேசும் போது சுவாரஸ்யம் அதிகம் ஆகுது. நிறைய புதிய தோற்ற புத்தர் சிலைகளை அறிமுகப்படுத்தினார். #முக்கியமாக_அவர்_ஒரு_புத்தர்_சிலையை_காட்டினார் . #அது_தலை_இல்லாத_புத்தர்_சிலை . அவ்வளவு அழகு...ஆம் #தலை_இல்லாமலேயே_அத்தனை_அழகாக_தெரிந்தார் . என்னே...கம்பீரம்!!! சில சிலைகள் ரொம்ப ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருப்பது வருந்த கூடிய விஷயம் தான் உண்மையை சொல்லனும்னா பெளத்தம்_சமணம் பற்றி இன்னும் நிறைய பேருக்கு குழப்பமாக தான் இருக்கும் ஏன்..சிலைகளில் கூட நம்மால் இயல்பாக வித்தியாசம் கண

வரலாற்றறிஞர் கும்பகோணம் என்.சேதுராமன்

Image
23 ஏப்ரல் 1995இல் வரலாற்றறிஞர் கும்பகோணம் சேதுராமன் (குடந்தை சேதுராமன்) அவர்களை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்து ஆய்வினைப் பற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பாக அவரைச் சந்தித்தபோது, அவர் பொறுமையாக விவாதிப்போம் என்று கூறி, ஒரு நாளைக் குறிப்பிட்டு வரும்படி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவரைக் காணச் சென்றேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்து நான் கேட்ட ஐயங்களைத் தெளிவுபடுத்தினார். உரையாடலின்போது கல்வெட்டு அறிக்கைகளை எடுப்பதற்காக இரு முறை மாடிக்குச் சென்று வந்தார். அவருடைய மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தி, ஆய்வு தொடர்பாக நாங்கள் பேசவுள்ளது பற்றி அவரிடம் கூறினார்.  சொந்த ஊர் கும்பகோணம் என்று நான் கூறியதும்,  “ நம்மூர்க்காரப் பையன் இதனைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி ”  என்றார். “Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District” என்ற ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டிற்கான தலைப்பினைக் கேட்டதும், “இத்துறை தொடர்பாக மிகவும் அரிதான ஆய்வுகளே வருகின்றன. அந்த வகையில் இந்த முயற்சி போற்றத்தக்கது. தலைப்பில் பொன்னி எனப்படுகின்ற காவிரியாறு இடம்பெறும் வ