பௌத்த சுவட்டைத் தேடி : பரசுராமர் குளம்
8 மார்ச் 2014
இன்று மதியம் முதல் எனக்கு தொடர்ந்து நண்பர்களிடமிருந்தும், அறிஞர்களிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள். "தஞ்சாவூரில் ஏதோ சமணர் சிலை கண்டுபிடித்துள்ளார்களாம், பார்த்தீர்களா? சிலர் புத்தர் என்றும் கூறிக்கொள்கிறார்கள்". தொடர்ந்து மாலை செய்தித்தாளில் 'தஞ்சையில் இன்று மீன் வலையில் சிக்கிய சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்' என்ற தலைப்பில் செய்திவெளியாகியிருந்தது. வலையில் இரு சிலைகள் சிக்கியதாகவும் அதில் ஒன்று மகாவீரர் சிலை என்றும் இன்னொரு சிலை 11 முகங்களைக் கொண்ட பிரம்மமூர்த்தி சிலை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
10 மார்ச் 2014
இன்று மதியம் முதல் எனக்கு தொடர்ந்து நண்பர்களிடமிருந்தும், அறிஞர்களிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள். "தஞ்சாவூரில் ஏதோ சமணர் சிலை கண்டுபிடித்துள்ளார்களாம், பார்த்தீர்களா? சிலர் புத்தர் என்றும் கூறிக்கொள்கிறார்கள்". தொடர்ந்து மாலை செய்தித்தாளில் 'தஞ்சையில் இன்று மீன் வலையில் சிக்கிய சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்' என்ற தலைப்பில் செய்திவெளியாகியிருந்தது. வலையில் இரு சிலைகள் சிக்கியதாகவும் அதில் ஒன்று மகாவீரர் சிலை என்றும் இன்னொரு சிலை 11 முகங்களைக் கொண்ட பிரம்மமூர்த்தி சிலை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
![]() |
செய்தியுடன் காணப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தபோதே ஒரு சிலை புத்தர் சிலை,
மகாவீரர் சிலை அல்ல என்பதை உணரமுடிந்தது.
9 மார்ச் 2014
மறுநாள் காலையில்
செய்தித்தாள்களில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரெட்டிப்பாளையம் சாலையின் அருகில் உள்ள குளத்தில் (ராமநாதபுரம் ஊராட்சி, காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பரசுராமர் குளம்) மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் வலையில் இரு சிலைகள் சிக்கியதாக செய்தி வெளியாகியிருந்தது. சில செய்தித்தாள்களில் முதலில் காணப்படுகின்ற சிலை சமணர் சிலை என குறிப்பிடப்பட்டிருந்தது. புகைப்படத்தைப் பார்த்தபோது முதலாவதாக உள்ளது புத்தர் சிற்பமென்பதும், சமண தீர்த்தங்கரர் சிற்பம் அல்ல என்பதும் உறுதியாகத் தெரிந்தது. புத்தர் சிற்பத்தில் தலையில் காணப்படுகின்ற தீச்சுடர், நெற்றியில்
திலகக்குறி இச்சிற்பத்தில் உள்ளன. உடல் முழுக்க ஆடை காணப்படுகிறது.
வழக்கமாக புத்தர் சிற்பத்தில் காணப்படுகின்ற அமைதி தழுவும் கண்கள், புன்னகை
சிந்தும் உதடுகள், நீண்டு தொங்கிய காதுகள் இச்சிற்பத்தில் காணப்படுகின்றன.
தாமரைப்பீடத்தில் நின்ற நிலையில் காணப்படும் புத்தர் சிற்பங்களில் பொதுவாக
வலது கை அபய முத்திரையுடனும், இடது கை வரத முத்திரையுடனும் காணப்படும்.
இச்சிற்பத்தில் வலது கை வரத முத்திரையுடன் உள்ளது. இடது கை மேலாடையைப் பிடித்த கோலத்தில் உள்ளது.10 மார்ச் 2014
பத்திரிக்கைகளில் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்தபின் அச்சிற்பங்களை நேரில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. செய்திகளின் அடிப்படையில் அச்சிற்பங்கள் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பதையறிந்து அங்கு சென்றேன். மாவட்டக் கருவூல அலுவலகத்தில் கண்காணிப்பாளராளப் பணியாற்றும் என் நண்பர் திரு முத்துக்குமரன் என்னுடன் வந்தார். என்னைப் பற்றியும், எனது ஆய்வைப் பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த சிற்பங்களை, குறிப்பாக அந்த புத்தர் சிற்பத்தை, பார்க்கவேண்டும் என்ற எனது ஆவலை வெளிப்படுத்தினேன். வட்டாட்சியர் திரு இரா.காமராஜ் பெருமனதுடன் இரு சிற்பங்களையும் கொணரவைத்தார். நேரில் சிற்பங்களைப் பார்த்தேன். சில செய்தித்தாள்களில் சமணர் என குறிப்பிட்டிருந்ததைப் பற்றி அவரிடம் கூறினேன். அவர் அச்சிற்பத்தை என்னிடம் காட்டியபோது அதில் புத்தர் என்றே குறிக்கப்பட்டிருந்தது. அதை அவரும் உறுதி செய்தார். அலுவலகத்தில் இருந்த சிற்பங்களைப் பார்க்க அனுமதி வழங்கிய வட்டாட்சியருக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினேன்.
நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்
சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்விற்காக வெளிநாடு மற்றும் இந்தியாவிலுள்ள அருங்காட்சிகளிலிருந்து பெறப்பட்ட நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியில் காணப்படும் சில கூறுகளை தஞ்சாவூரில் காணப்பட்ட இச்சிற்பத்தில் காணமுடிந்தது. நின்ற நிலையிலுள்ள ஒரு நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் அரண்மனைக் கலைக்கூடத்தில் காட்சியில் உள்ளது. திரு அய்யம்பேட்டை செல்வராஜ் உதவியோடு மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை அய்யம்பேட்டையில் காண முடிந்தது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் காலம் உறுதி செய்யப்படவேண்டும்.
நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்
சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்விற்காக வெளிநாடு மற்றும் இந்தியாவிலுள்ள அருங்காட்சிகளிலிருந்து பெறப்பட்ட நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியில் காணப்படும் சில கூறுகளை தஞ்சாவூரில் காணப்பட்ட இச்சிற்பத்தில் காணமுடிந்தது. நின்ற நிலையிலுள்ள ஒரு நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் அரண்மனைக் கலைக்கூடத்தில் காட்சியில் உள்ளது. திரு அய்யம்பேட்டை செல்வராஜ் உதவியோடு மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை அய்யம்பேட்டையில் காண முடிந்தது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் காலம் உறுதி செய்யப்படவேண்டும்.
- தஞ்சையில் இன்று மீன் வலையில் சிக்கிய சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர், மாலை மலர், 8.6.2014
- ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு, தினமலர், 9.6.2014
- தஞ்சை அருகே குளத்தில் சாமி சிலைகள் கண்டெடுப்பு, மீன் பிடிக்க வலை விரித்தபோது சிக்கின, தினத்தந்தி, 9.6.2014
- மீன் வலையில் சிக்கிய ஐம்பொன் புத்தர் சிலை, தி இந்து, 9.6.2014
- தஞ்சை அருகே குளத்தில் புத்தர் சிலை மீன்பிடி வலையில் சிக்கியது, தினமணி, 9.6.2014
- குளத்தில் மீனவர் வலையில் ஐம்பொன் சிலைகள் சிக்கியது, தினகரன், 9.6.2014
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு இரா.காமராஜ், திரு முத்துக்குமரன், நாளிதழ்கள்,
புகைப்படங்கள் தி இந்து
-------------------------------------------------------------------------------------------
தஞ்சை பரசுராமர் குளத்தில் புத்தர்
ReplyDeleteவியப்புதான் மேலிடுகிறது ஐயா
எத்தனை காலம் மூழ்கி இருந்த சிற்பம்
இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது
தங்களின் பணி தொடர வாழ்த்துகிறேன்
நன்றி ஐயா
உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteதஞ்சை பரசுராமர் குளத்து சிலைகள் பற்றிய உண்மையை எடுத்துரைத்ததற்கு நன்றி!
ReplyDeleteநீங்கள் தனி மனிதராக தங்கள் சொந்த செலவில் இதுபோன்ற ஆராய்ச்சிகளை செய்வதைவிட, இதற்கென்று உள்ள சில அறக்கட்டளைகள் (FOUNDATIONS) மூலம் குழுவாக செய்தால் இன்னும் நல்லது என்று நினைக்கிறேன்! சொன்னதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்!
தாங்கள் கூறியது பற்றி நானும் சிந்தித்திருக்கிறேன். அதற்கான வாய்ப்பினை எதிர்பார்க்கிறேன். தாங்கள் கூறிய கருத்தில் தவறு எதுவும் இல்லையே. அன்புக்கு நன்றி.
Deleteநம்மூர் குளத்தில் புத்தர் சிலையா!!! ஆச்சிரியமாக இருக்கிறது.
ReplyDeleteதங்களது பணி தொடரட்டும் ஐயா, வாழ்த்துக்கள்.
சிற்பம் கிடைத்தது என்ற செய்தி எனக்குக் கிடைத்த முதல் அச்சிற்பத்தை நேரில் பார்க்கும்வரை ஏதோ தேர்வு எழுதப் போன மாணவனைப் போல காத்திருந்து வெற்றி பெற்ற உணர்வு ஏற்பட்டது. நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
யார்கண்ணிலும் தென்படாமல் கிடந்த புத்தர்சிலை இன்று தென்பட்டது என்பது ஒரு அதியசம் தங்களின் ஆய்வுப்பணி தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பௌத்தம் தொடர்பான துறைக்கு இது பெரிய துணை. தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.
DeleteExellent documentation on buddha .
ReplyDeleteExellent documentation on buddha .
ReplyDeleteதொடர்ந்து என் பதிவுகளைப் பார்த்து கருத்து கூறும் தங்களுக்கு நன்றி. தங்களைப் போன்றோரின் வாழ்த்துடன் பயணம் தொடரும்.
Deleteit is a surprise to me ! how ot escaped from your sight
ReplyDeleteவிவரம் அறிந்து சென்று பார்த்ததே எனக்கு நிறைவுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteசில அடையாளங்களே ஒன்றில் இருந்து மற்றதை பிரித்துப்பார்த்து புரிந்து கொள்ள உதவுகிறது எல்லா அடையாளங்களும் தெரியாததால் பலகோவில்களில் சிலையில் சித்தரிக்கப் பட்டிருக்கும் கடவுளோ இல்லை வேறு யாராவதோ யார் என்று தெரிவதில்லை. ஒரு முறை உங்களுக்கு எழுதிய பின்னூட்டம் ஒன்றில் சமண தீர்த்தங்கரர்களை எப்படிதெரிந்து கொள்கிறீர்கள் என்று எழுதிக்கேட்ட நினைவு.
ReplyDeleteசரியாகக் கூறிவிட்டீர்கள். சற்று நுணுக்கமாகப் பார்க்கவேண்டியுள்ளது. 20 ஆண்டு கால அனுபவம் ஓரளவு துணையாக இருக்கிறது. தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteசிற்பங்கள் குறித்து சிறப்பான தகவல்கள்
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள்..!
வட்டாட்சியர் அலுவலகத்தில் புத்தர் சிற்பத்தை நேரில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சி எல்லையற்றது.
Deleteவருகைக்கு நன்றி.
மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா...
ReplyDeleteஒவ்வொரு புத்தர் சிற்பத்தையும் புதிதாகப் பார்க்கும்போது புதிய அனுபவமாகவே தோன்றும். தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteபௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் பரசுராமர் குளம் =
ReplyDeleteDr B Jambulingam அவர்களின் பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி ஐயா Dr B Jambulingam
தங்களின் பகிர்வுகள் என் போன்றோரின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம். நன்றி.
ReplyDeleteபுத்தரை மறைக்க நடந்த முயற்சியா ? அல்லது தற்செயலாத குளத்தில் விழுந்ததா ?
ReplyDeleteபதிவிட்ட தங்களுக்கு நன்றி ஐயா.
தங்களின் நியாயமான ஐயங்கள் எனக்கும் உண்டு. நன்றி.
ReplyDeleteஇன்னும் எத்தனை புத்தர் சிலைகள் உங்களைத் தேடிவரப் போகின்றனவோ? யாரறிவார்?
ReplyDeleteவியப்பான விடயம் ஐயா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteகடந்த 20 ஆண்டுகளில் மேற்கொண்ட களப்பணியின்போது ஒவ்வொரு முறையும் இவ்வாறான வித்தியாசமான நிகழ்களைக் கண்டேன். தங்களின் வருகைக் நன்றி.
ReplyDelete