Posts

Showing posts from 2023

அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்

Image
சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றி, முனைவர் க.ஜெயபாலன் அவர்கள் முகநூலில் எழுதியுள்ள மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். ************* அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்... முனைவர் க.ஜெயபாலன் சமகாலத் தமிழ் அறிவுலகில் பௌத்தம் குறித்த ஆய்வுகளில் புத்தபகவன் சிலைகள் சார்ந்து கள ஆய்வை மேற்கொண்டு பல புதிய ஆய்வுத்தடங்களைப் பதித்து வருவதில் மிக முக்கியமானவராகக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணி ஆற்றி வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள். அதிகமாக எழுத்துப்பணிகளை மேற்கொள்ளும் சிலர் கள ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. கள ஆய்வுகளை மேற்கொள்ளும் சிலர் எழுத்தை விரும்புவதில்லை. ஆய்வையும் மேற்கொண்டு அதே நேரம் நிறைவாக எழுதுவதிலும் ஆழமாக ஆய்வுத்துறையில் பயணிப்பதில் அழுத்தமான முத்திரையை ஐயா முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்கள் பதித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வினை மனதில் தேக்கி வைத்து அப்பொருள் தொடர்பாகவே தொடர்ந்து பயணித்து புதிய புதிய செய்திகளை கண்டறிந்து அவர் உருவாக்கிய ...

சோழ மண்டலத்தில் பௌத்தம் : டாக்டர் மு.நீலகண்டன்

Image
டாக்டர் மு. நீலகண்டன்  எழுதியுள்ள சோழ மண்டலத்தில் பௌத்தம் என்னும் நூல் சோழ மண்டலம் வரலாற்றுப்பின்னணி (பக்.13-33), சோழ மண்டலத்தில் பௌத்த தாக்கம் (பக்.34-44), சோழ மண்டலத்தில் பௌத்தப் பெரியோர்கள் ( பக்.45-50 ), சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு ( பக்.51-63 ), சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் ( பக்.64-122 ), சோழ மண்டலத்தில் பௌத்தம் வீழ்ச்சி ( பக்.123-125 ) என்னும் ஆறு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் இயலில் சோழ மண்டலம் என்ற வரையறையான பிரிக்கப்படாத தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், தென்னாற்காடு, புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிளைக் கொண்ட நிலப்பரப்பு, வரலாற்றுப்பின்னணியில் தமிழ்நாட்டின் எல்லைகள், கால வாரியாக சோழ மண்டல வரலாறு, சோழர் தலைநகர்கள், சங்க இலக்கியச் சான்றுகள், கல்வெட்டு சான்றுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளன. பௌத்தத்தாக்கம் என்ற தலைப்பின்கீழ் புத்தரின் நான்கு தத்துவங்கள், தமிழ்நாட்டில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பௌத்தத்தின் பரவல், வெளிநாட்டவர் குறிப்புகள், பௌத்த மதத்தின் செல்வாக்கு, பௌத்தர் சமயக்கல்வி ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளன. சோழ மண்டலத்தில் பெயர...

சோழ நாட்டில் பௌத்தம் : புத்தக மதிப்புரை : முனைவர் பா.சக்திவேல்

Image
தமிழ் நெஞ்சம் நவம்பர் 2023 இதழிலும், கொலுசு செப்டம்பர் 2023 இதழிலும் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் பா.சக்திவேல் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. அவருக்கும், வெளியிட்ட இதழ்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ******************* முனைவர் பா.சக்திவேல்  

மத நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று : சோழர்கள் இன்று

Image
மத நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று என்ற தலைப்பில் சோழர்கள் இன்று நூலில் வெளியாகியுள்ள என்னுடைய கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தொகுப்பாசிரியருக்கு நன்றியுடன்.  மனித குல வரலாற்றில் பொது ஆண்டுக்கு முந்தைய (கி.மு.) ஆறாம் நூற்றாண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நூற்றாண்டில்தான் ஹெராக்கிளிட்டஸ், செராஸ்டர், கன்பூசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் பல ஞானிகள் தோன்றினர். அப்போதுதான் புத்தரும் தோன்றினார். அசோகர் காலத்திலேயே தமிழ் நிலத்தில் பௌத்தத்தைப் பரப்ப தூதர்கள் அனுப்பப்பட்டதை நாம் அறிய முடிகிறது. பௌத்தத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும், சமயத்தின் பரவலுக்கும் பொதுவாகத் தமிழகமும், சிறப்பாகக் காஞ்சீபுரமும் ஆற்றிய தொண்டு சிறியதல்ல என்று கூறுவர். சோழ நாட்டுக்கும் நாம் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். சோழ நாட்டில் கிடைக்கும் புத்தர்கள் தமிழகத்தில் சோழ நாட்டில்தான் அதிகமான புத்தர் சிலைகளும் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் காணப்படுகின்றன. மண்ணிலிருந்து கிடைக்கும் பல சிலைகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; அதாவது, நாம் சோழர் காலம் என்று குறிப்பிடும் ப...

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் மதிப்புரை : க. ரவிக்குமார்

Image
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் க.ரவிக்குமார் அவர்களின் மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். ************ ஏப்ரல் 2023 களப்பணியில் நூலாசிரியருடன் க.ரவிக்குமார் (இ) தமிழகத்தில் புத்தர் சிலைகளை பற்றி ஆய்வு செய்வதற்கு மிகச் சிறந்த பொக்கிஷமாக விளங்குகிறது முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சோழ நாட்டில் பௌத்தம்.           அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் பரவிய விதத்தை அசோகரின் சாசனங்கள், தமிழ் இலக்கியங்கள் வாயிலாகவும் பௌத்த பள்ளிகள் விகாரங்கள் ஏற்படுத்தப்பட்டு   மதுரை,   காவிரிப் பூம்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் சிறப்புடன் இருந்தமையை கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது.   வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட சான்றுகள் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் புத்த விகாரங்கள்   மூலமாக புத்த மதம் இப்பகுதியில் செழிப்புடன் இருந்தமையை   இந்நூல் வாய...

புத்துயிர் பெறும் பௌத்தம் : நூல் அறிமுகம் : அண்டனூர் சுரா

Image
புதிய புத்தகம் பேசுது அக்டோபர் 2023 இதழில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, திரு அண்டனூர் சுராஅவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. அவருக்கும், வெளியிட்ட இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி. ************ திரு அண்டனூர் சுரா அவர்களுடன் நூலாசிரியர்,  மே 2023