தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் : பிக்கு மௌரியார் புத்தா
அண்மையில் நான் படித்த நூல் மதிப்பிற்பிற்குரிய பிக்கு மௌரியா புத்தர் அவர்களால் தொகுக்கப்பட்ட தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் . பௌத்தக் களப்பணி தொடர்பாக தமிழில் குறிப்பிடத்தக்க நூலாக அமைந்துள்ள இந்நூலை 27 மே 2017 அன்று பிக்கு அவர்கள் நேரில் என் இல்லத்திற்கு வந்து, தந்து என் ஆய்வு பற்றி விசாரித்தார். அவருக்கு நன்றி. "தொல்லியல் ஆய்வாளர் கன்னிங்காம்தான் முதன்முதலில் தொல்லியல் ஆய்வுகளில் பௌத்த அடையாளங்களையும் கற்றூண்களையும் மண்ணிலிருந்து வெளிக்கொண்டு வந்தவர்...அவர் செய்த அகழாய்வுகள் பௌத்த நெறியைச் சார்ந்ததாக இருந்தது...அதன் பிறகு பௌத்த அகழாய்வு ஆசிரியர்கள் நமக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை. " என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கூறுகிறார் தொகுப்பாசிரியர் வணக்கத்திற்குரிய பிக்கு மௌரியா புத்தா. இந்நூலில் புத்துயிர் பெறும் பௌத்தம், வேரூன்றி படர்ந்து வளர்த்த பௌத்தம் (பிக்கு மௌரியார் புத்தா), பௌத்தரின் குகைகள், கற்றூண் சிற்பங்கள், புனித தலங்களின் அழிப்பும் பௌத்தர்களின் பாராமுகமும், அலட்சியமும் (தமிழாக்கம் தொல்லியன்), தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் (இளம்போதி),களப்பணியில் கண...