தமிழ்நாட்டு சமணத் தளங்கள் : களப்பணியில் கண்ட சமணர் சிலைகள்
சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்விற்காக 26 பிப்ரவரி 1999இல் முதன்முதலாக பாண்டிச்சேரியிலுள்ள புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் (French Institute of Pondicherry) சென்று அங்குள்ள புத்தர் சிலைகளின் புகைப்படங்களைப் பற்றிய குறிப்புகளை எடுத்து வந்தேன். அதனைப் பற்றிய குறிப்புகளை முனைவர் பட்ட ஆய்வேட்டில் தந்துள்ளேன். ஆய்வேட்டினை நிறைவு செய்த பின்னர் அங்கு பல முறை சென்றுள்ளேன். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் வெளியிட்ட குறுந்தகட்டில் என் களப்பணியின்போது காணப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும்.
2018இல் அந்நிறுவனம் தமிழ்நாட்டு சமணத் தளங்கள் (Jain sites of Tamil Nadu) என்ற குறுந்தகட்டினை பிப்ரவரி 2018இல் வெளியிட்டது. நிகழ்வின்போது திரு கே.ரமேஷ்குமார் அதன் சிறப்பை எடுத்துரைத்தார். அதில் தமிழ்நாட்டில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள், குகைக்கோயில்கள், பாழடைந்த கோயில்களின் 7,873 புகைப்படங்கள் காணப்படுகின்றன.
சோழ நாட்டில் பௌத்தம் (முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) ஆய்விற்காக மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது புத்தர் சிலைகளைக் காணச் சென்ற இடத்தில் பல சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நானும், என் மேற்பார்வையில் "தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம்" (Jainism in Thanjavur district, Nehru Trust for the Indian Collections at the Victoria and Albert Museum in London, New Delhi, 2010) என்ற திட்டத்தினை மேற்கொண்ட திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் சில சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டோம். நவம்பர் 2011இல் முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினரோடு சென்று நாங்கள் கண்ட புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காண்பித்ததோடு, உரிய விவரங்களையும் தந்தோம். அவை உரிய ஒப்புகையுடன் இதில் இடம் பெற்றுள்ளன.
வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteசிறப்பு... வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதங்களது பணி சிறக்கட்டும் வாழ்க நலம்.
ReplyDeleteவாழ்துக்கள் ஐயா👏👏🙏🙏
ReplyDeleteஅருமையான சேவை,
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
Congratulations sir
ReplyDeleteதமிழக சமணர்களின் சார்பில் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழ்நாட்டு சமணத் தளங்கள் : களப்பணியில் கண்ட சமணர் சிலைகள்
ReplyDeleteMarch 01, 2021 - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சோழ நாட்டில் பௌத்தம்
BUDDHISM IN THE CHOLA NADU