Posts

Showing posts from 2018

பொன்னி நாட்டில் பௌத்தம் : வேர்கள் : 25 நவம்பர் 2018

Image
சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை வழங்கிய வேர்கள் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்வு 25 நவம்பர் 2018 காலை மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியில் இராமலிங்க விலாஸில் நடைபெற்றது. சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் திருமதி சரோஜினி முன்னிலை வகித்தார். சிறப்புரையாக பொன்னி நாட்டில் பௌத்தம் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். காவிரியால் சோழ நாடு பொன்னி என்றழைக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, களப்பணியின் மீதான ஆர்வம், அதன்மூலமாகவே புதிதாகச் செய்திகளை வரலாற்றுலகிற்கு அளிக்க முடியும் என்ற எண்ணம் உதித்தமை தொடங்கி பௌத்தம் தொடர்பாக அரிய தேடல்களே இருந்த நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய களத்தில் காணப்பட்ட சுமார் 70 புத்தர் சிலைகள், புத்தர் வழிபாடு, வழிபாடு தொடர்பான நம்பிக்கை, பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் உள்ளிட்டவற்றைப் பேசினேன். மயிலாதுறைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்த நிலையில் மாணவர்களுக்கும் வரலாற்றின் மீதான ஆர்வம் தேவை என்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தேன். (பேச்சி

தஞ்சையில் சமணம் : 5 ஆகஸ்டு 2018 : பாராட்டு விழா

Image
"தஞ்சையில் சமணம்" நூலினை வெளியீட்டமைக்காக நூலாசிரியர்கள் என்ற நிலையில் எங்களை தஞ்சாவூர் கரந்தட்டாங்குடியிலுள்ள ஆதீஸ்வரசுவாமி கோயில் எனப்படுகின்ற ஜினாலயத்தில் சமணப்பெருமக்கள் பாராட்டினர்.  தஞ்சை ஜினாலய அறங்காவலர் திரு ச.அப்பாண்டைராஜ் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. திரு தஞ்சை வி.சுகுமாரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.   பஞ்சகல்யாணப்பெருவிழா, கோயில் ஆண்டு விழா, நூலாசிரியர்களுக்குப் பாராட்டு விழா என்ற முப்பெரும் விழாவாக 5 ஆகஸ்டு 2018 அன்று நடைபெற் நிகழ்வின்போது சமணப்பெருமக்களும் அறிஞர்களும் எங்களையும், களப்பணியின்போது நாங்கள் மேற்கொண்ட சிரமங்களையும் சுட்டிக்காட்டி எங்களுடைய முயற்சியைப் பாராட்டி, எங்களை கௌரவித்தனர். அவர்கள் எங்களைப் பாராட்டிய விதம் எங்களை நெகிழ வைத்துவிட்டது.     அப்பாண்டைராஜ் தலைமையுரையாற்றுகிறார். மேடையில்  பா.ஜம்புலிங்கம், மணி.மாறன், வி.சுகுமாரன், தில்லை கோவிந்தராசன் (இடமிருந்து வலமாக)   பத்மமாலினி நன்றியுரை ஏற்புரையில் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.  

In search of imprints of Buddhism : Peravurani Buddha

Image
During the first week of September 2018, there were news reports about the finding of a Buddha sculpture in a temple tank at Peravurani in Thanjavur district of Tamil Nadu. The sculpture was in sitting dhyana posture.      On iconographical aspects, the Peravurani Buddha differed from the Nagapattinam Buddha bronze found in the Chola country comprising of composite Thanjavur, composite Trichy and Pudukottai district. The age of the sculpture has to be ascertained. M y comment on Peravurani Buddha appeared in the  Times of India, 11th September 2018.    1940 For granite Buddhas, historian Mayilai Seeni Venkatasamy’s “Bouthamum Tamilum” (1940) was the primary source. In  his work he cited about the prevalence of 10 granite Buddhas in the Chola country comprising composite Thanjavur, composite Trichy and Pudukottai district in his work. 1954 For Nagapattinam Buddha bronze T.N.Ramachandran’s “The Nagapattinam and other Buddhist bronzes in the Madras Museum

In search of imprints of Buddhism : Rajendrapattinam, Tamil Nadu

Image
13 May 2018 One of the readers of my blog 'Buddhism in Chola country' Mr Selvakumar of Sirkazhi, Tamil Nadu informed me that he came to know about the missing of the Buddha in Rajendrapattinam and requested me to send him the photograph of the statue. I informed him about the finding of the Buddha in 2007 during the field study carried out with Mr Ananthapuram Krishnamurthi and also told him that I would be sending the relevant newspaper. 14 May 2018 The next day, another reader of my blog Mr Arul Muthukumaran posted in the wall of FB about his visit to the place and having learnt about the missing of Buddha two years back and the discussion he had with Mr Tiruvalluvan.      Since the beginning of my research, in 1993, I have seen many Buddha and Tirtankara statues in the Chola country comprising of composite Thanjavur, composite Trichy and Pudukottai districts of Tamil Nadu. Though not my area, due to the involvement of my friends and other scholars I

தஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்

Image
தஞ்சையில் சமணம் நூலின் ஆசிரியர்களில் ஒருவராக அமைந்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். சமணம் தொடங்கி, சமணர்களின் வரலாறு, பழக்க வழக்கங்கள், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சமணத்தின் தாக்கம், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்ற கண்ணோட்டத்தில் அமைந்துள்ள இந்நூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். வெளியீட்டாளர் முகவுரையிலிருந்து :  "..........இத்தகு சிறப்புமிக்க தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பல சிற்றூர்களில் புதைந்தும், சிதைந்தும், காடுகளுக்கிடையில் கிடந்தவைகளையும் களப்பணியின் வாயிலாகக் கண்டறிந்து  நாளிதழ்களில் அச்செய்திகள் வெளியாயின. இப்பணியில் முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன், மணி. மாறன் ஆகியோர் சேர்ந்தும், தனியாகவும் ஈடுபட்டு சேகரித்த செய்திகளை  "தஞ்சையில் சமணம்" என்னும் இந்நூலின் வழியே தமிழ்ச்சமூகத்திற்கு வழங்கியுள்ளனர்......... "  (ப.1) மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி ஜைன மடத்தின் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகளின் ஆசியுரையிலிருந்து : "..........

கோயில் உலா : தஞ்சாவூர் மாவட்ட சமணக்கோயில்கள்

Image
28 மே 2018 அன்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணக் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு  திரு அப்பாண்டைராஜன், திரு மணி.மாறன், திரு தில்லைகோவிந்தராஜன் உடன் ஆகியோருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முன்னரே இக்கோயில்களுக்குச் சென்றிருந்தபோதிலும் சில மாற்றங்களை இக்கோயில்களில் காணமுடிந்தது. நாங்கள் எழுதி வெளிவருகின்ற தஞ்சையில் சமணம் நூலுக்காக செய்திகளைத் திரட்டும் வகையில் இவ்வுலா அமைந்தது. கும்பகோணம் சந்ர ப்ரப பகவன் ஜினாலயம் கும்பகோணத்தில்  சந்ரப்பிரப பகவான் சமணக்கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் கருங்கற்கலால் வடிக்கப்பட்டுள்ளது. தூண் அமைப்பும், நிலைக்கால் மேலுள்ள பகுதியும் சோழர் கட்டுமானப்பகுதியிலிருந்து எடுத்து வந்து அமைக்கப்பட்டுள்ளது.  கோயில் நுழைவாயில், 2014 தற்போதைய களப்பணியில் மணி.மாறன், தில்லை. கோந்தராஜன், அப்பாண்டைராஜன் கருவறையில் மூலவர் சந்திரப்பிரபா திருமேனி வெள்ளைப் பளிங்குக்கல்லால் உள்ளது. மூலவர் கருவறை கட்டுமானம் தாராசுரம் சோழர் காலத்து கட்டுமானத்தை ஒத்துத் திகழ்கிறது. இக்கட்டுமானத்திற்கான கற்கள் அனைத்தும் இடிபாடுற்ற சோழர் காலக் க