பௌத்த சுவட்டைத் தேடி : திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது திருப்பராய்த்துறையில் முதன்முதலாகக் காணப்படுகின்ற புத்தர் சிலையாகும். 
திருப்பராய்த்துறை புத்தர் 
புகைப்படம் நன்றி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி 
தகவல் உதவி : திரு க.ரவிக்குமார்

ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் உடன் பா.ஜம்புலிங்கம்

புத்தர், திருப்பராய்த்துறை, கி.பி.10ஆம் நூற்றாண்டு,  என்ற குறிப்புடன் அந்த சிலை உள்ளது. திருப்பராய்த்துறை புத்தர் சிலைக்குப் பின்புறம் பிரபை உள்ளது. மார்பில் ஆடையும், தலையில் தீச்சுடரும் உள்ளன.  முகம் தெளிவாகத் தெரியவில்லை.  வழக்கமாக புத்தர் சிலைக்குள்ள பிற கூறுகள் இதில் உள்ளன.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு  (Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் (8344856826) திருச்சி அருகேயுள்ள திருப்பராய்த்துறையைச் சேர்ந்த புத்தர் சிலையைப் பற்றிய பதிவு பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் உள்ளதாகக்கூறி, புகைப்படத்தைத் தந்தார். 

களப்பணியின்போது ஆங்காங்கே காணப்படுகின்ற சில விடுபாடுகள் ஆய்வின் முக்கியமான பல தரவுகளைச் சேகரிப்பதில் குறைகளைத் தரும் என்பதை உணர்த்தியது திருப்பராய்த்துறை புத்தர் சிலை. ஆய்வின்போது களப்பணி மேற்கொண்டபோது பெரும்பாலும் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளைச் சார்ந்த அருங்காட்சியங்களுக்கு மட்டுமே சென்றதால், மதுரையிலுள்ள இந்த புத்தர் சிலையைப் பற்றி அப்போது அறியமுடியவில்லை. 
திருப்பராய்த்துறை புத்தர் 
நன்றி: திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம், மதுரை 
புகைப்படம் : திரு ஜ. சிவகுரு
இந்த புத்தர் சிலை மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புத்தர் சிலை, சோழ நாட்டில் பௌத்தம் பரவியிருந்ததை உணர்த்தும் வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காணப்படுகிறது. 


Just I came to know about a Buddha statue found in Tirupparaithurai in Trichy district of Tamil Nadu. I got a photograph of this Buddha from the collections of French Institute of Pondicherry, through Mr G.Ravikumar, a Ph.D., scholar, Periyar E.V.R.College (Autonomous), Trichy, who is doing under the title "Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district". The Buddha is now exhibited in the museum in the campus of Thirumalai Nayakkar Palace Madurai. As I did not cover the museums of other districts I could not able to find the statue earlier. This Buddha is an addition to the Buddhas of Trichy district. 

Comments

 1. தங்களது பணி மேலும் சிறப்புறட்டும்.
  இறைபணி தொடரட்டும்...

  ReplyDelete
 2. பல சான்றுகள் உங்களால் அறிய முடிகிறது ஐயா...

  ReplyDelete
 3. தேடல்கள் தொடரட்டும்.

  ReplyDelete
 4. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 6. தேடல்கள் தொடரட்டும் ஐயா.

  திருப்பராய்த்துறை - கோவிலுக்குள் இருந்த சிலையா ஐயா? எனக்கு மிகவும் பிடித்த ஊர். ஒவ்வொரு தமிழகப் பயணத்திலும் அங்கே சென்று வருவதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. இருந்த இடம் தொடர்பான பதிவினைப் பெற முயற்சித்து வருகிறேன். அடுத்தடுத்த களப்பணி மூலம் இதனை உறுதி செய்வேன்.

   Delete
 7. தொடர்ந்து வரும் உங்கள் தேடல்கள் மூலம் பழங்காலத்தின் உண்மையான வரலாறு கிடைக்கும்.

  ReplyDelete
 8. ஆராய்ச்சிக்கு முடிவில்லை. அதனால்தான் மீண்டும் உற்சாகத்துடன் செயல்பட முடிகிறது. இல்லையா?

  ReplyDelete
 9. உங்களின் பணி மகத்தான பணி. ஆராய்ச்சிகள், தேடல்கள் தொடர வாழ்த்துகள் ஐயா.

  கீதா

  ReplyDelete
 10. தொடரட்டும் தேடல்கள்...
  மகத்தான பணி ஐயா...

  ReplyDelete
 11. திரு மணிகண்டன் (மின்னஞ்சல் மூலமாக : mani.tnigtf@gmail.com)
  சிறப்பு அற்புதமான பணி அய்யா...ஆ.மணிகண்டன்

  ReplyDelete

Post a Comment