Posts

Showing posts from March, 2017

நாளிதழ் செய்தி : நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி : அய்யம்பேட்டை : நவம்பர் 1999

Image
சோழ நாட்டில் பௌத்தம் என்ற முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டபோது களப்பணியின்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த புத்த செப்புத்திருமேனி ஒன்றையாவது கண்டுபிடிக்கவேண்டும் என் என்ற அவாவினைப் பூர்த்தி செய்தவர் வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்கள்.  அவ்வாறான முயற்சியை 1993இல் நான் தொடங்கியபோதும் அவ்வாறான ஒரு புத்தர் செப்புத்திருமேனியை 1999இல் காணமுடிந்தது. என் கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது நாளிதழ் செய்தியாகும். (முதல் செய்தி மீசை புத்தர் பற்றியது) நாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அய்யம்பேட்டையில் தனியாரிடம் வழிபாட்டில் உள்ள அத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். கொல்கத்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்ட புத்தர் புகைப்படங்களில் ஒன்றினை ஒத்த கலையமைதியோடு இந்த புத்தர் செப்புத்திருமேனி