Posts

Showing posts with the label நூல் மதிப்புரை

புத்தரின் போதனைகள்-தீகநிகாயம்-நீண்ட பேருரைகள்

Image
பாலி மொழியில் இருந்த திரிபிடகம் பொ.ஆ.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் தற்போது, 21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழிலும் வெளிவரத் துவங்கியுள்ளதாகவும், அதன் முதல் முயற்சியாக சுத்தபிடகத்தின் முதல் நூலான தீகநிகாயம் முழுவதும் வெளியிடப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக சுத்தபிடகம் முழுமையும் தமிழில் கொண்டுவரப்படும் என்ற உறுதிப்பாட்டைத் திரிபிடகத் தமிழாக்கக் குழு கூறுவதில் பெருமை கொள்வதாகவும் பிக்கு போதிபால கூறுகிறார். 'புத்தரின் போதனைகள்-தீகநிகாயம்-நீண்ட பேருரைகள்' என்ற இந்நூலின் முதல் பதிப்பிற்கான முகவுரை மூலமாக இதன் பெருமையை உணரமுடியும். "உயர்வுற்ற, பேரறிவும் பெருமன்பும் மிகைந்த பிக்கு போதிபாலா அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பாலியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமிருந்த புத்தரின் போதனைகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டுவரும் அளப்பரிய பணியில் இந்த தீகநிகாயம் இன்று நம் கையில் தவழ்கிறது. மனித வாழ்வின் விழுமியமான மகிழ்வும், அமைதியும் பௌத்தத்தின் வேர்களினின்றே பூக்கும் என்னும் உண்மை இந்த தீகநியாகத்தில் நிரம்பி இருக்கிறது. பௌத்தச் சாற்றினை உறி...

ஆய்வாளர்களுக்கு அரும்பெரும் பொக்கிஷம்

Image
தமிழில் படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் வாசிப்பது அருமையாக இருக்கிறது 1993 தொடங்கி தற்பொழுது வரை காடுகரைகள் வயல்வெளிகள் என ஊரூராக அலைந்து திரிந்து அரும்பாடுப்பட்டு நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளையும், புடைப்புச் சிற்பங்களையும் கண்டுபிடித்து இருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள். இவைகளை தொகுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புது எழுத்து பதிப்பத்தின் மூலமாக வெளியிட்டு இருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த உயரிய வளவளத் தாளில் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களோடு சிறு குறிப்பும் வரைந்திருக்கிறார். இச்சிலைகளின் காலம் கிபி 10ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 15-17ம் நூற்றாண்டு வரைக்கும் நீளுகிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு அரும்பெரும் பொக்கிஷமாக திகழப் போகிறது. இவை பிற்கால சோழர்களின் ஆட்சியெல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கிடைத்தவை மட்டுமே. இதே போன்று பாண்டிய, சேர, பல்லவ நாடுகளிலும் இளைஞர்கள் களப்பணியில் ஈடுபட வேண்டுமென்பதற்கு அய்யா நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். போற்றுதலுக்குரிய இவ்வரிய பணியை செய்து கொடுத்த அய்யாவுக்கு நன்றி. --------------------------------------------------------------------------...

வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்

Image
அசோகர் காலத்தில் தென்னிந்தியாவிற்கு வந்த பவுத்தம். தமிழ்நாட்டிலும் பரவியது. இதற்கு இலக்கியங்கள், வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் சான்றுகளாக இருந்து வருகின்றன. முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் தனது களப்பணி மூலமாக பூம்புகார், நாகப்பட்டினம் உள்ளிட்ட புத்த விகாரங்களுக்கும்.. புத்தர் கோயில்களுக்கும் நேரில் சென்று புத்தரின் சிற்பங்கள் குறித்து ஆய்வுகள் செய்து அவற்றில் புத்தர் சிலைகள் புத்தர் அல்லாத சிலைகள் பற்றி விரிவாக ஆய்வு நோக்கில் ஆராய்ந்து சோழ நாட்டில் பவுத்தம் என்ற நூலை 2022 ஆம் ஆண்டு படிமம் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார். இந்நூலில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகள் குறித்து படத்துடன் விரிவாக ஆய்வு நோக்கில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.. இந்நூல் தற்போது ஆங்கிலத்தில் "BUDDHISM IN CHOLA NADU" எனும் தலைப்பில் பல்வேறு புத்தர் சிற்பங்களுடன் படிமம் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது.. முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் களப்பணியும்.. ஆய்வுகளும் வரலாற்...

வரலாற்று ஆய்வில் சிறு சேதாரச்சில்லும் உதவும்

Image
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள   சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு வரலாற்று நூலின் பக்கங்களிலிருந்து   சொல்லமுடியாத பெயர்தெரியாத ஓர் உணர்வு நம் மனதை கனக்கவைக்கிறது. காரணம், பீடும் பெருமையும் கொண்டிருந்த ஓர் மன்னர்குலமோ மத நிறுவனமோ அல்லது மற்ற ஏதோ ஓர் அமைப்போ காலவோட்டத்தில் பலகாரணிகளால் தன் நிலை இழந்து மறைவைத் தொட்டும் தொடாமலும் விட்டுப்போன அவற்றின் சுவடுகள் ஒரு சரித்திரத்தை அதன் பல நூற்றாண்டுகளின் வீழ்ச்சியை நாம் நூல் வாசிக்கும் சிறுபொழுதில் நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது. பரதகண்ட பூமிப்பரப்பில் பொ.ஆ.முன் ஐந்தாம்  நூற்றாண்டில்  கவுதமபுத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் தென்னிந்தியாவில்-தமிழகத்தில் இருந்தும் பின் மறைந்துபோனது. அது அக்கம்பக்க நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த வரலாற்றுப் பெருவெளியைப் பார்வையிட்டு அதனுள் சோழநாட்டை மட்டும் எல்லைகாட்டி  அதுபற்றி வாசித்து அறியப்பட்ட, அதனுள் தேடிக்கிடைத்த ஆதாரங்கள் மெய்ப்பிக்க உதவும் அயல்நாட்டவர் குறிப்புகள் என்று ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்து மெய்ம்மை...

புத்தர் சிலைகளை ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பு: சுப்ரஜா கண்ணன்

Image
ஜென் மூலை என்ற ஒருவகையான வாஸ்து தற்போது ப்ரபலமாகி உள்ளது. அதனால் புத்தர் சிலைகளை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அலங்காரத்திற்காக அல்லாமல் வயல்களின் அருகே, காடுகளின் உள்ளே, குளங்களில், குட்டைகளில், பல்லாயிரம் ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும்‌ இல்லாமல், வழிப்பாடும் இல்லாமல் கேட்பாரின்றி கிடக்கும் புத்தர் சிலைகளை கண்டதுண்டா? அப்படி கண்டிருந்தாலும் அது புத்தர் சிலை தானா என்று தெரிந்திருக்குக்கூடுமா? புத்தர் வழிபாடு எப்போது தமிழகத்தில் தொடங்கியது? யாரால் கொண்டு வரப்பட்டது? புத்தருக்கென்று தனியாக கோவில்கள் இருந்தனவா? எங்கே? இப்போது அவைகளின் நிலமை என்ன? பண்டைய காலத்து புத்தர் சிலைகளை பார்க்கும்போது இப்படி பல கேள்விகள் நம்முள் எழுகின்றன அல்லவா? இனி அந்தக் கேள்விகளுக்கு இடமில்லை (குறிப்பாக சோழ நாட்டு மக்களுக்கு). சோழநாடு என்று அறியப்படுகின்ற தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை‌ சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் அனைத்தையும் தேடி ஆராய்ந்து தொகுப்பாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் “Buddhism in Chola Nadu” என்ற புத்தகமாக வெளியிட்டி இருக்கிற...

பாரபட்சமற்ற வரலாற்றுப் பார்வை: உபாசகர் இ. அன்பன்

Image
வாழ்த்து மடல் பெருமிதத்திற்குரிய நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் "சோழ நாட்டில் பௌத்தம்" குறித்த வரலாற்று ஆய்வு நூல் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களாக வெளிவந்திருப்பது கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நமது நட்பின் ஊடக, கள ஆய்வுகளிலும், தரவு சேகரிப்பிலும் நீங்கள் காட்டி வந்த அர்ப்பணிப்பை நான் நன்கு அறிவேன். அன்று நான் அழைத்த கருத்தரங்கிற்கு வருகை தந்து, நீங்கள் வழங்கிய ஆழமான ஆய்வுக்கட்டுரையே உங்களின் புலமைக்குச் சான்றாக அமைந்தது. இன்று அது ஒரு முழுமையான வரலாற்றுப் பொக்கிஷமாக உருவெடுத்திருப்பது தமிழக வரலாற்று ஆய்வுலகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்த நூலின் சிறப்புகள்: மறைக்கப்பட்ட வரலாறு: சோழ நாட்டின் நிலப்பரப்பில் பௌத்த சமயம் விட்டுச் சென்ற தடயங்களை அறிவியல்பூர்வமாகவும், சான்றாதாரங்களோடும் வெளிக் கொண்டு வந்துள்ளீர்கள். கள ஆய்வு: வெறும் நூலகத் தரவுகளோடு நின்றுவிடாமல், சிதிலமடைந்த சிலைகளையும், கல்வெட்டுகளையும் தேடித் தேடி நீங்கள் மேற்கொண்ட பயணம் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது. தெளிவான பார்...

மண்ணில் புதைந்த மௌன சாட்சியங்கள்!: டி.வி.சோமு

Image
தமிழக வரலாற்றில் சோழ மண்டலம் என்பது கலைகளின் புகலிடம். அங்குள்ள சைவ, வைணவத் தடயங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஒருகாலத்தில் செழித்தோங்கிய பௌத்தத்திற்கு வழங்கப்படவில்லை. இந்த வரலாற்று இடைவெளியை நிரப்ப, தனது வாழ்நாளின் 30 ஆண்டுகளை அர்ப்பணித்து, முனைவர் பா. ஜம்புலிங்கம்  அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் உருவாக்கியுள்ள ' சோழ நாட்டில் பௌத்தம் ' நூல் ஒரு காலப்பேழை. அர்ப்பணிப்புமிக்க நூலாசிரியர்   தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம், வெறும் அலுவலகப் பணியாளராகத் தன் காலத்தைக் கழிக்கவில்லை. 1990-களிலேயே தொடங்கிய இவரது தேடல், சோழ நாட்டின் வயல்வெளிகளிலும், ஏரிக்கரைகளிலும், சிதைந்த கோயில்களிலும் புதைந்து கிடந்த புத்தரைத் தேடிக் கண்டடைந்தது. 60-க்கும் மேற்பட்ட சிலைகளைப் பட்டியலிட்டு, அதில் 17 இடங்களை முதன்முதலில் அடையாளப்படுத்திய இவரது ஆய்வு நேர்மை, இந்திய வரலாற்று ஆய்வுலகிற்கே ஒரு பாடம். நூலின் சிறப்பம்சங்கள்: ஒரு வரலாற்று மீட்பு அரிய ஆவணப்படுத்துதல்: காலத்தால் சிதைக்கப்பட்ட, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்...

வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்: ஞானியார் வீ.ஜெயபால்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: ஞானியார் முனைவர் வீ. ஜெயபால்  ------------------------------------------------------------------------------------------- நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள:  

அடுத்த தலைமுறையினருக்கான வழிகாட்டி நூல்: அய்யம்பேட்டை என்.செல்வராஜ்

Image
தஞ்சாவூரில் உள்ள வரலாற்று அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் பா. ஜம்புலிங்கம். அவர், சோழ தேசத்தில் பௌத்தத்தின் எஞ்சிய சுவடுகள் தேடி, களப்பயணம் மேற்கொண்டு, கண்டறிந்த புத்தரின் திருமேனிகளை, நூலாக்கம் செய்து, அரிய பொக்கிஷமாக வழங்கி உள்ளார்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கு, "சோழ நாட்டில் பௌத்தம்" தந்த அறிஞர், பௌத்தத்தின் பொற்காலம், திக்கெட்டில் உள்ளோரையும் சென்றடைய வேண்டுமென்று, ஆங்கிலத்தில் வடித்துத் தந்துள்ள அற்புதமான நூல்... உயர்தரமான பேப்பரில், மௌன மொழி பேசிடும், புத்தர் பெருமானின், அரிதான புகைப்படங்களுடன், தகுந்த விளக்கங்களுடன், வரலாற்று உலகிற்கு வழங்கியுள்ளார்.... ஒரே ஆய்வாளர், தன்னுடைய படைப்பை, தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கி இருப்பது கூடுதல் சிறப்பு... அடுத்த தலைமுறையினர், இதன் தொடர்ச்சியாக, ஆய்வுகள் மேற்கொள்ள, வழிகாட்டும் நூலாகவும் இவை உள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், இல்ல நூலகத்தில், இவ்விரண்டு நூல்களும் உரிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை...... ------------------------------------------------------------------------------------------- நன்றி: திரு அய்யம்பேட்டை என...

வருங்கால ஆய்வாளர்களுக்கு முக்கியத் தரவு: ஜெயபால் இரத்தினம்

Image
உலகின் பழமையான ஆன்மீகப் பாதைகளில் ஒன்றான பௌத்தம், தமிழகத்தில் பொதுக்காலத்திற்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் பரவத்தொடங்கி, பல நூற்றாண்டுகள் வரை உயர் செல்வாக்குடன் திகழ்ந்திருந்து, பின்னர் படிப்படியாக செல்வாக்குக் குறையத்தொடங்கி, பின்னர் சோழர்ஆட்சியில் புத்தெழுச்சி பெற்றது என்பதும், பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் செல்வாக்கிழந்தது என்பதும் ஆய்வாளர்கள் அளிக்கும் தகவல்கள். ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் கலவையுடனும், வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் இலக்குகளுடனும் செயல்பட்டு, நீண்ட நெடிய காலம் தமிழ் மண்ணில் நிலைபெற்றிருந்த பௌத்தம் ஆன்மீகம், தமிழ் மொழி மற்றும் பண்பாடு ஆகியப் பரப்புக்களில் பல அழியாத முத்திரைகளைப் பதித்துள்ளது. அது விட்டுச்சென்ற தடயங்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் புத்தர் பெருமான் சிலைகள். தமிழகத்தில் நிலவிய பௌத்தமதப் பரவலுக்கு சான்றளிக்கும் முக்கியத் தரவுகளில் ஒன்றாக விளங்குவது புத்தர் சிலைகள். சோழநாட்டுப் பகுதிகளில் காணக்கிடைக்கும் புத்தர் சிலைகள் குறித்த ஆய்வாக வெளிவந்திருக்கும் நூல் ‘சோழநாட்டில் பௌத்தம்’. நூலாசிரியர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்கள்...

தமிழ்ச் சமூகத்திற்கு அறிவுக்கொடை: திரு இரா.விஜயன்

Image
பௌத்தம் அது தோன்றிய காலத்திலேயேத் தமிழகத்தில் பரவத் தொடங்கிற்று. தமிழ் நிலம், தமிழ்ச்சமணம் என்ற வகைமையை உருவாக்கியது போன்றே, தமிழ்ப் பௌத்த  மரபு ஒன்றையும் ஒத்து உறழ்ந்து இங்கு உருவாக்கிற்று. தமிழ்க் காப்பிய மரபு அந்நிகழ்ச்சிப் போக்கின் பெரும் சான்றாய்த் திகழ்கிறது. குறிப்பாக சோழநாட்டில் அதன் தாக்கம் மிக வீரியமாய் இருந்தது. அத்தாக்கத்தின் அழியாச் சாட்சிகளாய்ச் சோழ நாட்டின் உள்ளொடுங்கிய கிராமங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும் புத்தர் கற்சிலைகள் நீடிக்கின்றன. முனைவர் பா. ஜம்புலிங்கம் தனது வாழ்நாள் பணியாக பல பௌத்தத் தலங்களையும், சிதறிக்கிடந்த சிறிய பெரிய புத்தர் சிலைகளையும் தளரா ஆய்வுவேட்கையோடுத் தேடிக் கண்டுபித்துத் தமிழ் சமூகத்திற்கு அறிவுக் கொடையாக அளித்துள்ளார். சோழ நாட்டில் பௌத்தம் என்ற அவரது நேரிய பெருநூலின் மேன்மையை உணர்ந்து போற்றித் தோழர் புது எழுத்து மனோன்மணி  (அலைபேசி: +91 98426 47101) அவர்கள் தனது பதிப்புப் பணியின் சாதனைகளில் ஒன்றாக உயரிய வடிவமைப்புடன் துல்லியமான வண்ணப்படங்களுடன் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். சோழ நாட்டில் பௌத்தம், தமிழிலும் ஆங்கிலத்திலும், கெட்டி அட...

ஆய்வுக்கு ஓய்வேது?: பேராசிரியர் இராம. குருநாதன்

Image
’சோழநாட்டில் பெளத்தம்’ நூலினைப் படித்து நெடுங்காலம் ஆயிற்று. பல்வேறு அலுவல்கள், பயணங்கள், கூட்டங்கள் எனக் காலம் கழிந்தது. இப்போதுதான் அந்நூல் பற்றி எழுதக் காலம் கனிந்தது. இருப்பினும் அலைபேசி வழியே தங்களின் நிகழ்வுகளைப் பார்த்துவருகிறேன். ஆய்வுக்கு ஓய்வேது? அலைகளுக்கும் காற்றுக்கும் ஓய்வுண்டா? தங்களின் ஆய்வுக்கும் தேடல் முயற்சிக்கும் ஓய்வேது?. இயங்கிக்கொண்டே இருப்பது உள்ளத்திற்கு உரமல்லவா! அது உடலுக்கும் உணர்வுக்கும் மகிழ்ச்சி அளிக்குமல்லவா? அந்த வகையில் இடைவிடாத முயற்சி தங்களுடையது. அதற்கென் வாழ்த்துகள். நூலில் நுழைந்ததுமே பதிப்புரையில் அரிய செய்திகளைக் குறிப்பிட்டிருப்பதும், தேடலில் பயணித்ததைத் தக்க வகையில் தந்திருப்பதும் பாராட்டுக்குரியவை. மிகவும் பழமையான மதங்களில் புத்த மதமும் ஒன்று. புத்தரின் சிந்தனைகள் தமிழகம் மட்டுமன்றி உலகெங்கும் பயணித்தவை. சங்க காலத்திலேயே புத்தர் சிந்தனைகள் இருந்துள்ளன என்பதற்குச் சங்க இலக்கியப்புலவர்களின் கருத்தோவியங்களே சான்று. சங்க காலத்திய புலவர்கள் சிலர் புத்தமதத்தையும் தழுவியிருந்தார்கள். ஒரு சொற்பொழிவுக்காக, இலங்கைக்கு நான் சென்றிருந்தபோது, நம்மூரில்...

வருங்கால ஆய்வு மாணவர்களுக்கான பாடம்: ந. பழநிதீபன்

Image
எனது நண்பர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி, தனது கடின உழைப்பாலும் நேர்மையாலும் பணி உயர்வு பெற்று உதவிப் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றிருப்பவர் முனைவர் திரு. பா ஜம்புலிங்கம் அவர்கள். அவர் என் முகநூல் நண்பர் மட்டுமல்ல, நான் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது அலைபேசியில் உரையாடி மகிழும் அன்பரும் ஆவார். அவர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் "சோழ நாட்டில் பௌத்தம்" என்கிற இந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணமாகும். ஆசிரியர் குளிர்சாதன அறைக்குள் இருந்து, பல்வேறு புத்தகங்களை அருகில் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து ஆங்காங்கே சில செய்திகளை உருவி உருவாக்கிய புத்தகம் அல்ல இது. இதன் ஒவ்வொரு பக்கத்திலும் நண்பரின் கடின உழைப்பும் அவரது நேர்மையும் அவரது வியர்வையும் நமக்கு வியப்பை ஏற்படுத்தி அன்னாரை அண்ணாந்து பார்க்க வைக்கும்! தனது கள ஆய்வின்போது சோழ நாட்டுப் பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தனது நேரடி கள ஆய்வின் வழியாக 19 புத்தர் சிலைகளையும் 13 சமண தீர்த்தங்கரர்கள் சிலைகளையும் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனியைய...