Posts

Showing posts from October, 2026

நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது 2026

Image
2026ஆம் ஆண்டிற்கான நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை திரு குறிஞ்சிவேலன் அவர்களின் 25.8.2026 நாளிட்ட முகநூல் பக்கம் மூலமாக அறிந்தேன்.   அறிவிப்புடன் இணைக்கப்பட்டிருந்த நூல் அட்டைகளில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் ஆங்கிலப்பதிப்பின் (Buddhism in Chola Nadu) மேலட்டை இருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.  தேர்ந்தெடுத்த நல்லி திசை எட்டும் அமைப்பிற்கும், திரு குறிஞ்சிவேலன் ஐயாவிற்கும், தேர்வுக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலின் தமிழ், ஆங்கிலப்பதிப்புகளைக் கலை ரசனையோடு சிறப்பாக வடிவமைத்துத் தந்த புது எழுத்து திரு சுகவன முருகன் அவர்களுக்கும், என் ஆய்வுப்பயணத்திற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி. இந்த விருதானது பௌத்த ஆய்வு தொடர்பாக நான் பெறுகின்ற ஆறாவது விருதாகும். பௌத்த ஆய்வு/நூலுக்காகப் பெற்ற விருதுகள் அருமொழி விருது 2021-பௌத்த மரபு ஆய்வாளர் , தஞ்சாவூர், சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம், அருமொழி விருது 2021 வழங்கும் விழா,    26.12.2021 ஆவணக்குரிசில...