தமிழ்ச் சமூகத்திற்கு அறிவுக்கொடை : திரு இரா.விஜயன்
பௌத்தம் அது தோன்றிய காலத்திலேயேத் தமிழகத்தில் பரவத் தொடங்கிற்று. தமிழ் நிலம், தமிழ்ச்சமணம் என்ற வகைமையை உருவாக்கியது போன்றே, தமிழ்ப் பௌத்த மரபு ஒன்றையும் ஒத்து உறழ்ந்து இங்கு உருவாக்கிற்று. தமிழ்க் காப்பிய மரபு அந்நிகழ்ச்சிப் போக்கின் பெரும் சான்றாய்த் திகழ்கிறது. குறிப்பாக சோழநாட்டில் அதன் தாக்கம் மிக வீரியமாய் இருந்தது. அத்தாக்கத்தின் அழியாச் சாட்சிகளாய்ச் சோழ நாட்டின் உள்ளொடுங்கிய கிராமங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும் புத்தர் கற்சிலைகள் நீடிக்கின்றன.
முனைவர் பா. ஜம்புலிங்கம் தனது வாழ்நாள் பணியாக பல பௌத்தத் தலங்களையும், சிதறிக்கிடந்த சிறிய பெரிய புத்தர் சிலைகளையும் தளரா ஆய்வுவேட்கையோடுத் தேடிக் கண்டுபித்துத் தமிழ் சமூகத்திற்கு அறிவுக் கொடையாக அளித்துள்ளார்.
சோழ நாட்டில் பௌத்தம் என்ற அவரது நேரிய பெருநூலின் மேன்மையை உணர்ந்து போற்றித் தோழர் புது எழுத்து மனோன்மணி (அலைபேசி: +91 98426 47101) அவர்கள் தனது பதிப்புப் பணியின் சாதனைகளில் ஒன்றாக உயரிய வடிவமைப்புடன் துல்லியமான வண்ணப்படங்களுடன் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். சோழ நாட்டில் பௌத்தம், தமிழிலும் ஆங்கிலத்திலும், கெட்டி அட்டையுடன் பக்கத்துக்குப்பக்கம் உயர்நுணுக்க High Resolution வண்ணப் புகைப்படங்களுடன் அச்சிடப்பட்ட நூல். நூலாசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தஞ்சாவூரில், சோழ நாட்டில் பௌத்தம் நூலைப் பெற :
திரு இரா.விஜயன்
சிம்ளி நூல் அங்காடி
790, ஹெச்.ஐ.ஜி. புதிய வீட்டு வசதி வாரியம்
(மன்னர் சரபோசி கல்லூரி எதிரில், புதிய பேருந்து நிலையம்)
தஞ்சாவூர் 613 005
அலைபேசி 9600832452




எமது மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்....
ReplyDelete