Posts

Showing posts from May, 2026

சோழ நாட்டில் பௌத்தம்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்

Image
நேற்று (9.5.2026) தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் "சோழ நாட்டில் பௌத்தம்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன். உரையில் சோழ நாட்டில் இருந்த/இருக்கின்ற பௌத்த சமயச் சான்றுகளைப் பற்றி எடுத்துரைத்தேன். அத்துடன் பின்வருவன உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தேன். புத்தர் கற்சிலைகள், புத்தர் கோயில்கள், சிற்பங்கள், விகாரம், புத்த பாதம் ஆகியவற்றை நேரில் சென்று பார்த்த அனுபவங்கள். நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை இந்திய மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து அஞ்சல் வழியாக (அப்போது அதிகமாக மின்னஞ்சல் அறிமுகமாகாத காலகட்டம்) பெற்ற போது எதிர்கொண்ட சூழல். கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகள் முதன்முதலாக நாளிதழ்களில் வெளியானபோது அடைந்த உணர்வு. அடுத்தடுத்த களப்பணியின்போது முன்னர் பார்த்த சிலைகள் காணாமல் போதல். சில புத்தர் சிலைகள் அருங்காட்சியகங்களுக்கு இடம் பெயர்தல். சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளின் (புது எழுத்து, 2022, 2023) அச்சேற்றம் பற்றிய அனுபவங்கள். ஒரு மழைக்காலத்தில் எங்கள் இல்லத்தில், சேகரிப்பில் இருந்த நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்பட...