வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்
அசோகர் காலத்தில் தென்னிந்தியாவிற்கு வந்த பவுத்தம். தமிழ்நாட்டிலும் பரவியது. இதற்கு இலக்கியங்கள், வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் சான்றுகளாக இருந்து வருகின்றன.
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் தனது களப்பணி மூலமாக பூம்புகார், நாகப்பட்டினம் உள்ளிட்ட புத்த விகாரங்களுக்கும்.. புத்தர் கோயில்களுக்கும் நேரில் சென்று புத்தரின் சிற்பங்கள் குறித்து ஆய்வுகள் செய்து அவற்றில் புத்தர் சிலைகள் புத்தர் அல்லாத சிலைகள் பற்றி விரிவாக ஆய்வு நோக்கில் ஆராய்ந்து சோழ நாட்டில் பவுத்தம் என்ற நூலை 2022 ஆம் ஆண்டு படிமம் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார்.
இந்நூலில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகள் குறித்து படத்துடன் விரிவாக ஆய்வு நோக்கில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது..
இந்நூல் தற்போது ஆங்கிலத்தில் "BUDDHISM IN CHOLA NADU" எனும் தலைப்பில் பல்வேறு புத்தர் சிற்பங்களுடன் படிமம் பதிப்பகம் சார்பில் வெளிவந்துள்ளது..
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் களப்பணியும்.. ஆய்வுகளும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் இந்த இரண்டு நூல்களையும் குறிப்பிடலாம்.
மகிழ்ச்சியான வாழ்த்துகள்..
சீமான் இளையராஜா
-------------------------------------------------------------------------------------------
நன்றி: முனைவர் சீமான் இளையராஜா, முகநூல் பதிவு 26.7.2024
-------------------------------------------------------------------------------------------
நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள:
புது எழுத்து, காவேரிப்பட்டினம், அலைபேசி: 98426 47101
சிம்ளி புக் சென்டர், தஞ்சாவூர், அலைபேசி: 96008 32452
-------------------------------------------------------------------------------------------
.jpg)

Comments
Post a Comment