அடுத்த தலைமுறையினருக்கான வழிகாட்டி நூல் : அய்யம்பேட்டை என்.செல்வராஜ்
தஞ்சாவூரில் உள்ள வரலாற்று அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் பா. ஜம்புலிங்கம். அவர், சோழ தேசத்தில் பௌத்தத்தின் எஞ்சிய சுவடுகள் தேடி, களப்பயணம் மேற்கொண்டு, கண்டறிந்த புத்தரின் திருமேனிகளை, நூலாக்கம் செய்து, அரிய பொக்கிஷமாக வழங்கி உள்ளார்..
தமிழ் கூறும் நல்லுலகிற்கு, "சோழ நாட்டில் பௌத்தம்" தந்த அறிஞர், பௌத்தத்தின் பொற்காலம், திக்கெட்டில் உள்ளோரையும் சென்றடைய வேண்டுமென்று, ஆங்கிலத்தில் வடித்துத் தந்துள்ள அற்புதமான நூல்...
உயர்தரமான பேப்பரில், மௌன மொழி பேசிடும், புத்தர் பெருமானின், அரிதான புகைப்படங்களுடன், தகுந்த விளக்கங்களுடன், வரலாற்று உலகிற்கு வழங்கியுள்ளார்....
ஒரே ஆய்வாளர், தன்னுடைய படைப்பை, தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கி இருப்பது கூடுதல் சிறப்பு...
அடுத்த தலைமுறையினர், இதன் தொடர்ச்சியாக, ஆய்வுகள் மேற்கொள்ள, வழிகாட்டும் நூலாகவும் இவை உள்ளன.
வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், இல்ல நூலகத்தில், இவ்விரண்டு நூல்களும் உரிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை...... 




Comments
Post a Comment