Posts

Showing posts from September, 2026

புத்தரின் போதனைகள்-தீகநிகாயம்-நீண்ட பேருரைகள்

Image
பாலி மொழியில் இருந்த திரிபிடகம் பொ.ஆ.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் தற்போது, 21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழிலும் வெளிவரத் துவங்கியுள்ளதாகவும், அதன் முதல் முயற்சியாக சுத்தபிடகத்தின் முதல் நூலான தீகநிகாயம் முழுவதும் வெளியிடப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக சுத்தபிடகம் முழுமையும் தமிழில் கொண்டுவரப்படும் என்ற உறுதிப்பாட்டைத் திரிபிடகத் தமிழாக்கக் குழு கூறுவதில் பெருமை கொள்வதாகவும் பிக்கு போதிபால கூறுகிறார். 'புத்தரின் போதனைகள்-தீகநிகாயம்-நீண்ட பேருரைகள்' என்ற இந்நூலின் முதல் பதிப்பிற்கான முகவுரை மூலமாக இதன் பெருமையை உணரமுடியும். "உயர்வுற்ற, பேரறிவும் பெருமன்பும் மிகைந்த பிக்கு போதிபாலா அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பாலியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமிருந்த புத்தரின் போதனைகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டுவரும் அளப்பரிய பணியில் இந்த தீகநிகாயம் இன்று நம் கையில் தவழ்கிறது. மனித வாழ்வின் விழுமியமான மகிழ்வும், அமைதியும் பௌத்தத்தின் வேர்களினின்றே பூக்கும் என்னும் உண்மை இந்த தீகநியாகத்தில் நிரம்பி இருக்கிறது. பௌத்தச் சாற்றினை உ...

வரலாறு, பண்பாடு பேசும் அரிய நூல்

Image
    ------------------------------------------------------------------------------------------- (புகைப்படம்: இல்ல நூலகம் /ஏப்ரல்  2023) நன்றி: பேராசிரியர் இரா.காமராசு/ நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், செப்டம்பர் 2026 ------------------------------------------------------------------------------------------- நூல் தேவைக்குத் தொடர்பு கொள்ள:  

வரலாற்றுத் தரவுகளை மிகைப்படுத்தாதீர்கள்

Image
கும்பகோணத்தில் தொடங்கிய உங்கள் கல்விப் பயணம், தமிழ்ப் பல்கலைக்கழகம் வரை எப்படி அமைந்தது? கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளியில் கற்ற கல்வி, தாத்தாவிடம் கற்றுக்கொண்ட நாளிதழ் வாசிப்புப்பழக்கம், அக்காலகட்டத்தில் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப்பயிற்சி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது பெற்ற கடிதம் எழுதும் திறன் என்ற பின்புலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது அங்கிருந்த கல்விச்சூழல் பல நிலைகளில் கைகொடுத்தது. கல்வியாளர்களுக்கான தட்டச்சுப்பணிகளை மேற்கொண்டபோது பல அனுபவங்களைப் பெற்றேன். ஒரு காலத்தில் அலுவல்நிலைப்பணியாளராக இருந்தபோது நான் அனுப்பிய, தமிழ்ப் பல்கலைக்கழக செய்தி மலரிலும், காலாண்டிதழ்களிலும் என் கட்டுரைகளும், புத்தர் சிலை கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகளும் வெளியானது என் தொடர் முயற்சியின் வெற்றியாகக் கருதுகிறேன். தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்ற என்னை ஒரு ஆய்வாளனாக ஆக்கியது இந்தச் சூழலே. சோழ நாட்டின் பௌத்த, சமண வரலாற்றை ஆய்வு செய்யும் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? கல்லூரிக்காலத்தில், 1970க...