Posts

Showing posts from July, 2019

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலையில் மற்றொரு புத்தர்

Image
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் வயலில், அடையாளம் தெரியாத வகையில் முகம் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது பேட்டவாய்த்தலையில் இருந்த இரண்டாவது புத்தர் சிலையாகும். புத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்டபோது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்கள் கூறிய தகவல்களில் ஒன்று பேட்டைவாய்த்தலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது என்பதாகும். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பேட்டைவாய்த்தலையில் சென்று பல இடங்களில் தேடி பின்னர் சிலை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. மார்பில் உள்ள ஆடையின் மூலமாக அது புத்தர் என்பதை உறுதி செய்யமுடிந்தது. மத்யார்ஜுனேஸ்வர் கோயிலின் முன்பாக இருந்த புத்தர். புகைப்படம் : பா.ஜம்புலிங்கம்  திருச்சி-கரூர் சாலையில் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக அச்சிலை இருந்தது. அப்பகுதியில் முன்பு மூன்று சிலைகள் இருந்ததாகவும், இரண்டு சிலைகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும் சிலர் கூறினர். (சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, ப.152) சிலையைப் பார்த்துவிட்டு, திருச்சி அருங்க