ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு

 குருகு இணைய இதழில் (3 செப்டம்பர் 2023) என் நேர்காணல் வெளிவந்துள்ளது. திரு தாமரைக்கண்ணன் அவர்களுக்கும், குருகு இதழுக்கும் நன்றி. 
 

ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு - பா. ஜம்புலிங்கம் நேர்காணல்

பா.ஜம்புலிங்கம் முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில், குறிப்பாக சோழநாட்டுப் பகுதியான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளையும், பௌத்தம் தொடர்பான தடயங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகிறார். கள ஆய்வு மூலம் சோழமண்டத்தில் கண்டடைந்த புத்தர் சிலைகளை தொகுத்து ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற நூலினை 2022-ல் வெளியிட்டுள்ளார். புத்தர் சிலைகளுக்கான தேடலில் இவர் கண்டடைந்தவற்றை தொகுக்கும் இந்த புத்தகம் தமிழக அளவில் ஒரு முன்மாதிரி. எழுத்தாளர்கள் அ மார்க்ஸ், எஸ் ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருக்கின்றனர். இதுவன்றி ஜம்புலிங்கம் நண்பர்களுடன் இணைந்து 'தஞ்சையில் சமணம்' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் வாசிக்க
குருகு இணைய இதழ்

முந்தைய பேட்டிகள்/அறிமுகம்
1.ச.ம.ஸ்டாலின், "புத்தரைத் தேடி", தினமணி, 6 ஜனவரி 2008
2.M.T.Saju, “Buddha spotting in Chola country fills his weekends”, The Times of India, Madurai/Trichy, 11.10.2012
3.ராசின், “தமிழர் வழிபாடு முனீஸ்வர புத்தர்”, ராணி,  3.5.2015
4. N.Ramesh, "Tracing footprints of Buddhism in Chola country", The New Indian Express, 15 May 2005
5. N.Ramesh, "Writer of 250 articles in Tamil Wikipedia", The New Indian Express, 13 November 2005
6.சு.வீரமணி, "தமிழகத்தில் புத்தர் இருக்கிறார்", புதிய தலைமுறை, ஆண்டு மலர் 2017
7.ஆசை, "நீரோடிய காலம்", துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும், காமதேனு, 10 பிப்ரவரி 2019
8."வியக்கவைக்கும் விக்கிப்பீடியா பதிவர்", புதிய தலைமுறை, 13.2.2020
9."பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்", முகப்போவியம், 412, முகம், சனவரி 2021

18 செப்டம்பர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

Post a Comment