Posts

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் அறிமுகம்

Image
என் வாழ்வில் நினைவில் நிற்கும் நாளாக 21 பிப்ரவரி 2023 அமைந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16 ஆகஸ்டு 1982இல் சேர்ந்து, உதவிப்பதிவாளராக ஏப்ரல் 2017இல் பணி நிறைவுபெற்றேன். பணி நிறைவு பெற்ற நாளில்...நன்றியுரை பணி நிறைவு பெற்ற நாளில்...விடை பெறல் அதற்குப் பின் சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் அறிமுக விழாவிற்காக 21 பிப்ரவரி 2023இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். பணியாற்றிய நிறுவனத்தில் மேடையேறி அக்கால, இக்கால நிகழ்வுகளையும், நூலைப் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்தபோது என் மனம் சற்றே நெகிழ்ச்சியடைந்ததை உணர்ந்தேன். என் நூலைப் பற்றிய முதல் விழா, அதுவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று, அதில் கலந்துகொண்டதை எனக்குக் கிடைத்தற்கரிய பெரும்பேறாகக் கருதுகிறேன். 21 பிப்ரவரி 2023இல் நூல் அறிமுக விழாவிற்கு வரும் துணைவேந்தர், பதிவாளர் (பொ) உள்ளிட்டோர் விழாவில் தலைமையுரையாற்றிய  தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், ஒரு நூலில் எந்த மாதிரியான செய்திகளைக் கூறலாம் என்பதற்கும் அவற்றைத் தொகுப்பாகவும், கோர்வையாகவும்,...

பௌத்த சுவட்டைத் தேடி : தஞ்சாவூர் அருங்காட்சியகம்

Image
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (தஞ்சாவூர், முன்னாள் மாவட்ட ஆட்சியரகம்) பொ.ஆ.10- 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை இருப்பதாகவும், என் பௌத்த ஆய்வுக்காக அதனைப் பார்க்கும்படியும் கூறியிருந்தார். சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் புத்தர் கற்சிலைகளைக் காணமுடிந்தது. அவ்வாறான ஆதாரங்கள் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் இடம் பெற்றுள்ளது. அந்நூலில் சோழ நாட்டில் உள்ள 63 புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அருங்காட்சியகங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும் குறிப்புகளும் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. மதகரம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புத்தர் கற்சிலைகள் தஞ்சாவூர் கலைக்கூடத்திலும், மாத்தூரைச் சேர்ந்த புத்தர் சிலை தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும், சோழன் மாளிகையைச் சேர்ந்த இரு புத்தர் சிலைகள் மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகத்திலும் உள்ளன. சோழன்மாளிகையைச் சேர்ந்த இரு சிலைகளில் ஒரு சிலை ந...

சிங்கள நூலில் மேற்கோள்

Image
2016வாக்கில் Narada Karunatilaka என்பவர் தான் எழுதும் சிங்கள நூலுக்காக என்னுடைய வலைப்பூவிலிருந்து சில செய்திகளை மேற்கோளாகக் குறிப்பிடப்படவுள்ளதாகவும், உரிய ஒப்புகை தருவதாகவும் கூறியிருந்தார். சுமார் ஏழு வருடங்களுக்குப் பின், ஜனவரி 2023இல் நூலின் அட்டையையும், தொடர்பான பக்கங்களையும் அனுப்பியிருந்தார். வலைப்பூவினையும், மணலூரில் களப்பணி தொடர்பான ஒளிப்படத்தையும் அவருடைய நூலில் காணமுடிந்தது. இதற்கு முன்னர் பிற நூல்களில் என் ஆய்வு மேற்கோளாகச் சுட்டப்பட்ட போதிலும், சிங்கள மொழியில் இதுவே முதன்முறையாகும். அவர் அனுப்பியிருந்த மேற்கோளிலிருந்து... "It is commendable that Dr. B. Jambulingam, who is researching about the Buddhism of the ancient Chola kingdom, reveals a wealth of valuable facts." ------------------------------------------------------------------------------------------- நன்றி:  Narada Karunatilaka  (நூலில் மேற்கோள்) ------------------------------------------------------------------------------------------- 1 பிப்ரவரி 2023 காலை மேம்படுத்தப்பட்டது.

சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (CIBF) 2023, 2025

Image
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை (Chennai International Book Fair, 16-18 ஜனவரி 2023) முன்னிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காப்புரிமை நூற்றொகுப்பில் புது எழுத்து வெளியிட்டுள்ள  சோழநாட்டில் பெளத்தம் (பா.ஜம்புலிங்கம்), திருச்சாழல் (கண்டராதித்தன்), கூலிக்காரப் பயலுக (அறிவழகன் கைவல்லியம்) ஆகிய மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் என் நூலும் உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.  இச்செய்தியைப் பெருமையுடன் எனக்குத் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதோடு ஒளிப்படங்களை அனுப்பிய என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் பதிப்பாளர் புது எழுத்து திரு சுகவன முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பான திரு சுகவன முருகன்,  திரு அறிவழகன் கைவல்லியம் ஆகியோரின் முகநூல் பதிவுகள் இக்கண்காட்சிக்குச் சென்ற  எங்கள் இளைய மகன் திரு சிவகுரு அனுப்பிய புகைப்படங்கள். சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2025க்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காப்புரிமை நூற்றொகுப்பில் புது எழுத்து வெளியீடான என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கில நூலின் குறிப்பு...