Posts

Showing posts from 2023

அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம் : முனைவர் க.ஜெயபாலன்

Image
முனைவர் க.ஜெயபாலன் அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்... சமகாலத் தமிழ் அறிவுலகில் பௌத்தம் குறித்த ஆய்வுகளில் புத்தபகவன் சிலைகள் சார்ந்து கள ஆய்வை மேற்கொண்டு பல புதிய ஆய்வுத்தடங்களைப் பதித்து வருவதில் மிக முக்கியமானவராகக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணி ஆற்றி வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள். அதிகமாக எழுத்துப்பணிகளை மேற்கொள்ளும் சிலர் கள ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. கள ஆய்வுகளை மேற்கொள்ளும் சிலர் எழுத்தை விரும்புவதில்லை. ஆய்வையும் மேற்கொண்டு அதே நேரம் நிறைவாக எழுதுவதிலும் ஆழமாக ஆய்வுத்துறையில் பயணிப்பதில் அழுத்தமான முத்திரையை ஐயா முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்கள் பதித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வினை மனதில் தேக்கி வைத்து அப்பொருள் தொடர்பாகவே தொடர்ந்து பயணித்து புதிய புதிய செய்திகளை கண்டறிந்து அவர் உருவாக்கிய ஒரு செம்பதிப்பான நூல் என்று "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற இந்த நூலைக் குறிப்பிடலாம். இந்தியாவின் நிலப்பரப்பு பெரும் பகுதியாக உள்ளதாலும், பல்வேறு மொழிகள் பண்பாடுகள் கொண்ட பகுதியாகவும் உள்ளதாலும், இந்தியாவைத் து...

சோழ மண்டலத்தில் பௌத்தம் வரலாற்று ஆய்வு : டாக்டர் மு.நீலகண்டன்

Image
டாக்டர் மு. நீலகண்டன்  எழுதியுள்ள சோழ மண்டலத்தில் பௌத்தம் வரலாற்று ஆய்வு என்னும் நூல் சோழ மண்டலம் வரலாற்றுப்பின்னணி (பக்.13-33), சோழ மண்டலத்தில் பௌத்த தாக்கம் (பக்.34-44), சோழ மண்டலத்தில் பௌத்தப் பெரியோர்கள் ( பக்.45-50 ), சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு ( பக்.51-63 ), சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் ( பக்.64-122 ), சோழ மண்டலத்தில் பௌத்தம் வீழ்ச்சி ( பக்.123-125 ) என்னும் ஆறு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் இயலில் சோழ மண்டலம் என்ற வரையறையான பிரிக்கப்படாத தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், தென்னாற்காடு, புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிளைக் கொண்ட நிலப்பரப்பு, வரலாற்றுப்பின்னணியில் தமிழ்நாட்டின் எல்லைகள், கால வாரியாக சோழ மண்டல வரலாறு, சோழர் தலைநகர்கள், சங்க இலக்கியச் சான்றுகள், கல்வெட்டு சான்றுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளன. பௌத்தத்தாக்கம் என்ற தலைப்பின்கீழ் புத்தரின் நான்கு தத்துவங்கள், தமிழ்நாட்டில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பௌத்தத்தின் பரவல், வெளிநாட்டவர் குறிப்புகள், பௌத்த மதத்தின் செல்வாக்கு, பௌத்தர் சமயக்கல்வி ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளன. சோழ ...

அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள நூல்: முனைவர் பா.சக்திவேல்

Image
முனைவர் பா.சக்திவேல் ------------------------------------------------------------------------------------------- நன்றி: முனைவர் பா.சக்திவேல் /கொலுசு , செப்டம்பர் 2023 ------------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------- நன்றி: முனைவர் பா.சக்திவேல் / தமிழ் நெஞ்சம் , நவம்பர் 2023 ------------------------------------------------------------------------------------------- 22 பிப்ரவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

சோழர் நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று

Image
சோழர் மத நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று மனித குல வரலாற்றில் பொது ஆண்டுக்கு முந்தைய (கி.மு.) ஆறாம் நூற்றாண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நூற்றாண்டில்தான் ஹெராக்கிளிட்டஸ், செராஸ்டர், கன்பூசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் பல ஞானிகள் தோன்றினர். அப்போதுதான் புத்தரும் தோன்றினார். அசோகர் காலத்திலேயே தமிழ் நிலத்தில் பௌத்தத்தைப் பரப்ப தூதர்கள் அனுப்பப்பட்டதை நாம் அறிய முடிகிறது. பௌத்தத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும், சமயத்தின் பரவலுக்கும் பொதுவாகத் தமிழகமும், சிறப்பாகக் காஞ்சீபுரமும் ஆற்றிய தொண்டு சிறியதல்ல என்று கூறுவர். சோழ நாட்டுக்கும் நாம் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். சோழ நாட்டில் கிடைக்கும் புத்தர்கள் தமிழகத்தில் சோழ நாட்டில்தான் அதிகமான புத்தர் சிலைகளும் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் காணப்படுகின்றன. மண்ணிலிருந்து கிடைக்கும் பல சிலைகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; அதாவது, நாம் சோழர் காலம் என்று குறிப்பிடும் பிற்காலச் சோழர்களுடைய காலகட்டம். குறிப்பிட்ட ஒரு பிராந்தியம் அல்லது நகரப் பகுதிகளில் மட்டும்தான் என்பதுபோல அல்லாமல், பாரம்பரியமான...

மிகச் சிறந்த பொக்கிஷம் : முனைவர் க. ரவிக்குமார்

Image
நூலாசிரியருடன் க.ரவிக்குமார் மிகச் சிறந்த பொக்கிஷம் தமிழகத்தில் புத்தர் சிலைகளை பற்றி ஆய்வு செய்வதற்கு மிகச் சிறந்த பொக்கிஷமாக விளங்குகிறது முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சோழ நாட்டில் பௌத்தம் . அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் பரவிய விதத்தை அசோகரின் சாசனங்கள், தமிழ் இலக்கியங்கள் வாயிலாகவும் பௌத்த பள்ளிகள் விகாரங்கள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, காவிரிப்பூம்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் சிறப்புடன் இருந்தமையை கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட சான்றுகள் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் புத்த விகாரங்கள் மூலமாக புத்த மதம் இப்பகுதியில் செழிப்புடன் இருந்தமையை இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. முதலாம் ராஜராஜன் காலத்தில் சூடாமணி விகாரம் அமைப்பதற்காக ஆனைமங்கலம் ஊரை வழங்கியதையும் முதலாம் இராஜேந்திரன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இவ்விகாரம் சிறப்புடன் திகழ்ந்தது என்பதை லெய்டன் செப்பேடுகள் மூலமாக அறிய முடிகிறது. நாகப்பட்டினத்தில் 350 புத்த செப்பு திருமேனிகள் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜே...

புத்துயிர் பெறும் பௌத்தம் : அண்டனூர் சுரா

Image
திரு அண்டனூர் சுரா அவர்களுடன் நூலாசிரியர்,  மே 2023 ------------------------------------------------------------------------------------------- நன்றி:  திரு அண்டனூர் சுரா / புதிய புத்தகம் பேசுது , அக்டோபர் 2023 ------------------------------------------------------------------------------------------- 12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

ஆய்வின் நேர்மையைக் கடந்த ஆய்வின் மகோன்னதம் : முனைவர் இ. ஜெயபிரகாஷ்

Image
வெள்ளனூர் புத்தருடன் ஜெயபிரகாஷ்   ஆய்வின் நேர்மையைக் கடந்த ஆய்வின் மகோன்னதம் ஆய்வின் ஊடாக வெளிவந்துள்ள சோழநாட்டில் பௌத்தம்  என்ற ஆய்வுப்புத்தகம் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இவர் தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்தை முதன்மைப்படுத்தி பௌத்தம் சார்ந்த ஆய்வை Buddhism in Tamilnadu with special reference to Thanjavur district  என்ற தலைப்பில் நிகழ்த்தி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1995ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். சோழநாட்டில் பௌத்தம்  என்ற தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு 1999ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு கல்விப்புலம் சார்ந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் பௌத்தம் சார்ந்த ஆய்வில் பா.ஜம்புலிங்கம் ஈடுபட்டுள்ளார். கல்விப்புலம் சார்ந்த ஆய்வுக்காலம் நிறைவுற்ற பிறகும் தொடர்ந்து பௌத்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, ஏறக்குறைய முப்பதாண்டுகளாக தொடராய்வின் ஊடாக கடுஞ்சிரத்தையான ஆய்வை விடாமுயற்சியுடன் ஆய்வுசெய்து வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் என்றால் அது மிகையாகாது. இத்தகைய நீண்ட காலத்தின...

புத்தர் சிலைகள் சொல்லும் மண்ணின் வரலாறு : உபாசகர் வே.சந்திரசேகர்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: உ பாசகர் வே.சந்திரசேகர் / போதி முரசு , செப்டம்பர் 2023 ------------------------------------------------------------------------------------------- 12 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு

Image
    ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு - பா. ஜம்புலிங்கம் நேர்காணல் பா.ஜம்புலிங்கம் முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில், குறிப்பாக சோழநாட்டுப் பகுதியான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளையும், பௌத்தம் தொடர்பான தடயங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகிறார். கள ஆய்வு மூலம் சோழமண்டத்தில் கண்டடைந்த புத்தர் சிலைகளை தொகுத்து ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற நூலினை 2022-ல் வெளியிட்டுள்ளார். புத்தர் சிலைகளுக்கான தேடலில் இவர் கண்டடைந்தவற்றை தொகுக்கும் இந்த புத்தகம் தமிழக அளவில் ஒரு முன்மாதிரி. எழுத்தாளர்கள் அ மார்க்ஸ், எஸ் ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருக்கின்றனர். இதுவன்றி ஜம்புலிங்கம் நண்பர்களுடன் இணைந்து 'தஞ்சையில் சமணம்' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.  தொடர்ந்து..தளத்தில் வாசிக்க: குருகு இணைய இதழ் ------------------------------------------------------------------------------------------- நன்றி: தாமரைக்கண்ணன்/ குருகு இணைய இதழ், 3 செப்டம்பர் 2...

பௌத்த ஆய்வில் 30 ஆண்டுகள்

Image
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகப் பதிவு செய்ய ஆகஸ்டு 1993இல் விண்ணப்பம் அனுப்பி, அந்த ஆய்வினை நிறைவு செய்து, தொடர்ந்து ஆய்வினை மேற்கொள்வது என்பது நினைவில் நிற்கின்ற அனுபவமாகும். அனுபவத்தைப் பற்றி விவாதிக்கும் முன்பாக, ஆய்வின்போது பன்மொழிப்புலவர் திரு மு.கு.ஜகந்நாதராஜா அவர்களிடமிருந்து பெற்ற கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காக அவர் வந்திருந்தபோது சந்தித்தேன். பௌத்தம் குறித்து பல அரிய தகவல்களைக் கூறிய அவர், அங்கு அளித்த கட்டுரையின் படியை எனக்குத் தந்தார். அவருக்கு அக்கட்டுரையை என் ஆய்விற்காகப் பயன்படுத்திக்கொள்ள இசைவு கேட்டு கடிதம் எழுதினேன். அவர் அதற்கு மறுமொழி அனுப்பியிருந்தார். 1993ஆம் ஆண்டிற்கு பின்னோக்கிச் செல்வோம். முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள எண்ணியபோது ஆய்வு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொண்டு ஆய்வில் ஈடுபட்டால் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறிய நிலையில், 3 ஆகஸ்டு 1993இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பம் வேண்டி, வரலாற்றுத்துறைத் தலைவரின் அனு...

வரலாற்றறிஞர் புலவர் செ.இராசு

Image
கல்வெட்டறிஞர் புலவர் இராசு ஐயா அவர்கள் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் எங்களை ஈர்த்த ஆசிரியப்பெருமக்களில் ஒருவர் இராசு ஐயா அவர்கள். 1983இல் பதிப்புத்துறையில் நான் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருடைய மராத்தியர் செப்பேடுகள் 50 என்ற நூலை லாரியிலிருந்து இறக்கும்போது நானும் இருந்தேன். அந்நூல் சென்னையில் அச்சாகி வந்த நினைவு. அப்போது அச்சகத்தில் கலித்தொகை மறுபதிப்பு அச்சாகிக்கொண்டிருந்தது. திடீரென்று இந்த நூலைப் பார்த்ததும் எங்களுக்கு வியப்பு. தமிழ்ப் பல்கலைக்கழக முதல் வெளியீடு என்ற குறிப்போடு அந்நூல் வெளியானது. அவருடைய மராத்தியர் கல்வெட்டுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 100ஆவது வெளியீடாக வந்தது என நினைக்கிறேன். கல்வெட்டுத்துறை என்றாலே எங்களுக்கு முதலில் நினைவிற்கு வருபவர் ஐயாதான். நான் பௌத்த ஆய்வில் சேர்ந்தபோது எனக்கு ஊக்கம் தந்ததோடு அவருடைய கொங்கு நாட்டில் சமணம் என்ற தலைப்பிலான ஆய்வேட்டினைக் காண்...

இராஜராஜசோழரின் 1038ஆவது முடிசூட்டுப் பெருவிழா : மும்முடிச்சோழன் விருது

Image
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவும், தஞ்சாவூர் தமிழ்ச்சங்கமும் இணைந்து 3 ஆகஸ்டு 2023ஆம் நாள் இராஜராஜசோழர் முடி சூடிய 1038ஆவது ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சாவூர் பெரிய கோயில் பெத்தண்ணன் கலையரங்கில் நடத்தின. இராஜராஜ சோழரின் புகழுரையை தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் கோ.தெய்வநாயகம் நிகழ்த்தினார். வணக்கத்துக்குரிய மேயர் திரு சண்.இராமநாதன் தலைமையுரையாற்றினார். குழுவின் தலைவர் மருத்துவர் திரு சா.உதயசங்கர் நோக்கவுரையாற்றினார். வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அமரர் திரு என்.சேதுராமன் (சகோதரர் சிவராமன் பெற்றுக்கொண்டார்), பேராசிரியர் திரு சு.இராஜவேலு, திரு கி.ஸ்ரீதரன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டன. (வலமிருந்து) ஜம்புலிங்கம், உதயசங்கர், கோ.தெய்வநாயகம், சிவராமன், ஸ்ரீதரன், சண்.இராமநாதன், இராஜவேலு, கோவிந்தராஜ், துளசேந்திரன், ஜான் பீட்டர், செ.இராமநாதன்  குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் திரு ஆ. ஜான்பீட்டர், தமிழ்ப்பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் முனைவர் திரு துளசேந்திரன், தமிழ்நாடு பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் ம...