Posts

பொன்னி நாட்டில் பௌத்தம்

Image
புதுவைத் தமிழாசிரியர்கள் - மின்முற்றம் தமிழ்ச் சிந்தனையில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒரு வார தொடர்ப்பொழிவினை (121-126) ஏற்பாடு செய்திருந்தது. அதில் (122ஆவது நிகழ்வில்) கலந்துகொண்டு, 16 நவம்பர் 2020, மாலை 6.30-7.30 அன்று பொன்னி நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அறிஞர்களோடும், நண்பர்களோடும், ஆய்வாளர்களோடும் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பினைத் தந்த மின் முற்றத்திற்கும், நிகழ்வினைத் தொகுத்த நண்பர் திரு மாதவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு : பொன்னி நாட்டில் பௌத்தம் ------------------------------------------------------------------------------------------- நன்றி:  புதுவைத் தமிழாசிரியர்கள் மின் முற்றம்/16 நவம்பர் 2020 / இணையவழி உரை ------------------------------------------------------------------------------------------- 13 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

களப்பணியில் இணைவோம் இணைய வழியால்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி:   முக்குடை ,  செப்டம்பர் 2020 (9.8.2020, களப்பணியில் சமணம் பொழிவின் எழுத்து வடிவம் ) ------------------------------------------------------------------------------------------- பிற கட்டுரைகளை வாசிக்க : கட்டுரைகள் ------------------------------------------------------------------------------------------- 19.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

பௌத்த சுவட்டைத் தேடி : சீதக்கமங்கலம்

Image
2002ஆம் ஆண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு கோவிந்தராஜன் என்னிடம் தமிழகத்தில் காணப்படுகின்ற புத்தர் சிலையின் அமைப்பைப் பற்றி விசாரித்தார். அவர் தத்துவத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அவரைப் போலவே துறை சார்ந்த பலர் அவ்வப்போது நான் பார்க்கின்ற, பார்த்த புத்தர் சிலைகளை பற்றி பேசுவது வழக்கம். தொடர்புடைய துறைத்தலைவர்கள் கூட என்னிடம் இவ்வாறு கேட்டதுண்டு. தொலைபேசியில் ஆர்வமாகப் பேசுவார்கள். சிலை இருக்கும் இடம், அமைப்பு, மற்றும் தொடர்புடைய விவரங்களைக் கேட்பார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது எதுவுமே பேசாமல் சென்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அவர்களிடம் ஆய்வு செய்யும் மாணவர்கள் மூலமாக மறைமுகமாகக் கேட்பதும் உண்டு. அவ்வாறான பல நண்பர்களை என் ஆய்வின்போது சந்தித்துள்ளேன். திரு கோவிந்தராஜன் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை பின்னர் தான் அறிந்தேன். நான் பார்த்த புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்த வரை கூறினேன். தொடர்ந்து சில நாள் கழித்து அவர் என்னிடம் கேட்ட கேள்விகள்: புத்தர் சிலையின் தலையை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? புத்தரா சமண தீர்த்...

களப்பணியில் சமணம்

Image
அகிம்சை நடை நடத்துகின்ற “இணைவோம் இணைய வழியால்” நிகழ்வில் 9 ஆகஸ்டு 2020 மாலை 3.00 மணியளவில் களப்பணியில் சமணம் என்ற தலைப்பில் ஆற்றிய பொழிவின் சுருக்கம். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளைக் கொண்ட சோழ நாட்டில் பௌத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது சுமார் 70 இடங்களில் புத்தர் சிலைகளையும், சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணமுடிந்தது. பள்ளிக்காலம் முதல் சொந்த ஊரான கும்பகோணத்தில் பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களைப் பார்த்துவரும்போது வித்தியாசமாக அங்கே காணப்பட்ட ஜீனாலயம், பல இடங்களில் புத்தரை சமணர் என்று அழைக்கப்படல் உள்ளிட்ட பல சூழல்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஆவணப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் (1998), திருவாரூர் மாவட்டம் தப்ளாம்புலியூர் (1998), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி (1999), திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகில் (1999), தஞ்சாவூர் (1999), பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் (1999), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகில் அடஞ்சூர் (2003), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் செருமாக்கநல்லூர...

களப்பணி ஆய்வுகள்

Image
களப்பணி அடிப்படையில் ஆய்வுகள், ஆய்வுகள் அடிப்படையில் களப்பணி ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். களப்பணி தொடர்பான பொது அனுபவங்களும், ஆய்வாளராக களப்பணியில் ஈடுபட்ட தனிப்பட்ட அனுபவங்களும் வெவ்வேறு வகையில் அமையும். அதற்கான பின்புலத்தைக் காண்போம். கும்பகோணத்தில் எங்கள் தாத்தா ரத்தினசாமி 1960கள் தொடங்கி நவசக்தி, நாத்திகம் ஆகிய இதழ்களின் வாசகராக இருந்தார். அவருடைய பழக்கத்தில், கல்லூரிக்காலத்தில் (1975-79) தி இந்து ஆங்கில நாளிதழை வாங்க ஆரம்பித்தேன். அந்த வாசிப்பானது செய்திகளுக்கு அப்பாற்பட்டு புதிய வார்த்தைகள், வாக்கிய அமைப்பு, எழுத்துரு, இதழின் வடிவம், செய்திகள் தரப்படும் பாணி, எழுத்து அமைப்பு, புள்ளியும் காற்புள்ளியும் இடுதல், மேற்கோள் ஆகியவற்றில் காணப்படும் உத்திகளின்மீதான ஆர்வத்தை மிகுவித்தது. அதே காலகட்டத்தில் ஓய்வு நேரத்தில் ஆங்கிலத்தட்டச்சு, தமிழ்த்தட்டச்சு, சுருக்கெழுத்து, இந்தி ஆகியவற்றைக் கற்றேன். ஆரம்பித்தேன். எந்த இடத்தில் ஒரு புதிய சொல்லைக் கண்டாலும், கேட்டாலும் அது பயன்படுத்தப்பட்ட முறையையும், பொருளையும் அறிய ஆரம்பித்தேன். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக, தினமும் படிக்கும் ஆங்கில, தம...