களப்பணியில் சமணம் : அகிம்சை நடை

அகிம்சை நடை நடத்துகின்ற “இணைவோம் இணைய வழியால்” நிகழ்வில் 9 ஆகஸ்டு 2020 மாலை 3.00 மணியளவில் களப்பணியில் சமணம் என்ற தலைப்பில் ஆற்றிய பொழிவின் சுருக்கம்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளைக் கொண்ட சோழ நாட்டில் பௌத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது சுமார் 70 இடங்களில் புத்தர் சிலைகளையும், சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணமுடிந்தது. 

பள்ளிக்காலம் முதல் சொந்த ஊரான கும்பகோணத்தில் பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களைப் பார்த்துவரும்போது வித்தியாசமாக அங்கே காணப்பட்ட ஜீனாலயம், பல இடங்களில் புத்தரை சமணர் என்று அழைக்கப்படல் உள்ளிட்ட பல சூழல்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஆவணப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் (1998), திருவாரூர் மாவட்டம் தப்ளாம்புலியூர் (1998), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி (1999), திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகில் (1999), தஞ்சாவூர் (1999), பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் (1999), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகில் அடஞ்சூர் (2003), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் செருமாக்கநல்லூர் (2009), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகில் சுரைக்குடிப்பட்டி (2010), திருவாரூர் மாவட்டம் பஞ்சநதிக்குளம் (2010), தோலி (2011), புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு (2013), நாட்டாணி (2015) ஆகிய இடங்களில் தனியாகவும், பிற அறிஞர்களின் துணையோடும் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காணமுடிந்தது. செருமாக்கநல்லூர், சுரைக்குடிப்பட்டி, பஞ்சநதிக்குளம், தோலி ஆகிய இடங்களில் தில்லை கோவிந்தராஜன், கவிநாட்டில் சந்திரபோஸ், நாட்டாணியில் மணி.மாறன் ஆகியோருடன் இணைந்து களப்பணி மேற்கொள்ளப்பட்டது. 







முனைவர் பட்ட ஆய்வேட்டிலும் (பா.ஜம்புலிங்கம், “சோழ நாட்டில் பௌத்தம்”, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999), சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள நூலிலும் (“Bulletin of the Chennai (Madras) Government Museum, Iconography of the Jain images in the Districts of Tamil Nadu”, 2002), தில்லை கோவிந்தராஜன் மேற்கொண்ட திட்டத்திலும் (G.Thillai Govindarajan, “Jainism in Thanjavur district, Tamil Nadu”, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, May 2010), பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டிலும் (Jain Sites of Tamil Nadu, French Institute of Pondicherry, 2018), ஏடகம் வெளியிட்டுள்ள நூலிலும் (“தஞ்சையில் சமணம்”, முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன், ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர், 2018) இந்த சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய செய்திகள் ஆவணப்படுத்தப்பெற்றுள்ளன. 

ஒரு பொருண்மை தொடர்பான களப்பணியானது முந்தைய ஆய்வினைத் தொடரவும், அதனை மேம்படுத்தவும் பெரிதும் துணையாக இருக்கும் என்பது களப்பணி அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.

இந்த உரையை பின்வரும் இணைப்பைச் சொடுக்கிக் கேட்க வேண்டுகிறேன்:  அகிம்சை நடை இணைவோம் இணைய வழியால் 


பிற யுட்யூப் பதிவுகள்

1.வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு/பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை | வேர்கள் | B Jambulingam speech/30.11.2018 


2.திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1/சோழ நாட்டில் பௌத்த களப்பணி முனைவர் ஜம்புலிங்கம்/27.8.2020 (உரை 27.6.2020)


3.விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள்| GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8/6.9.2020


4.புதுவைத் தமிழாசிரியர்கள்-மின்முற்றம்-122 “பொன்னி நாட்டில் பௌத்தம்” முனைவர் ஜம்புலிங்கம்/16.11.2020


1 டிசம்பர் 2020இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தங்களது தேடல் தொடரட்டும்... அரும் பணி செய்யும் தங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  3. சமணம் மீது ஈடுபாடு கொண்டு தங்களின் இந்த அரிய ஆய்வால் பல தகவல்கள் வழங்கி சமண சமயம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் பல ஊர்களில் எப்படி தழைத்திருந்தது என்பதை காணமுடிகிறது.

    சமண சமயம், தொல்லியல் துறைக்கு தங்களின் பங்களிப்பு வார்த்தைகளில் அடக்க முடியாதது.

    தொடரட்டும்...

    ReplyDelete
  4. சிறந்த பணி சீரிய முயற்சிகள். வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  5. சமணர்கள் சார்பில் நன்றிகள் பல.தங்கள் களப்பணி தொடர வாழ்த்துக்கள், தஞ்சை அப்பா ண்டை ராஜ்

    ReplyDelete

Post a Comment