Posts

புத்தம் சரணம் கச்சாமி : சாக்யா ஈ.அன்பன்

Image
புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் சுருக்கமாகக் கொண்டுள்ள நூல் திரு ஈ.அன்பன் அவர்கள் தொகுத்துள்ள புத்தம் சரணம் கச்சாமி . 2005இல் நூலாசிரியர் அன்பளிப்பாக தந்த இந்நூலை மறுபடியும் அண்மையில் வாசித்தேன். புத்த தம்மத்தை அறிய விரும்பும் புதிய ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்குமாக இந்நூல் தொகுத்து வழங்கப்படுவதாகக் கூறுகின்றார் தொகுப்பாசிரியர். 11 அத்தியாயங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்நூல் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல துணைத் தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. புத்தரின் வாழ்க்கை  முதல் பேருரை நான்கு உன்னத வாய்மைகள் எண் மார்க்கம் புத்தரின் சமய பரப்புப்பணிகள் புத்தரின் ஆளுமை புத்தரின் அன்றாட செயல்பாடுகள் புத்தரின் பரிநிப்பானம் (மறைவு) திரிபீடகம் கம்மா, நல்வினை, தீவினை மனித ஆளுமையின் பகுப்பாய்வு பவுத்த வாழ்முறை சமூகப் போதனைகள் பவுத்தம் போற்றிய தமிழர்கள்  ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சில பயிற்சிக் கேள்விகளும், சிறு குறிப்பு வரைக என்று சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. படித்ததை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளவும் தம்மை சோதித்துக் கொள்வதற்கும் வாசகர்களுக்கும், ...

தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் : பிக்கு மௌரியார் புத்தா

Image
அண்மையில் நான் படித்த நூல் மதிப்பிற்பிற்குரிய பிக்கு மௌரியா புத்தர் அவர்களால் தொகுக்கப்பட்ட  தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள் . பௌத்தக் களப்பணி தொடர்பாக தமிழில் குறிப்பிடத்தக்க நூலாக அமைந்துள்ள இந்நூலை 27 மே 2017 அன்று பிக்கு அவர்கள் நேரில் என் இல்லத்திற்கு வந்து, தந்து என் ஆய்வு பற்றி விசாரித்தார். அவருக்கு நன்றி.  "தொல்லியல் ஆய்வாளர் கன்னிங்காம்தான் முதன்முதலில் தொல்லியல் ஆய்வுகளில் பௌத்த அடையாளங்களையும் கற்றூண்களையும் மண்ணிலிருந்து வெளிக்கொண்டு வந்தவர்...அவர் செய்த அகழாய்வுகள் பௌத்த நெறியைச் சார்ந்ததாக இருந்தது...அதன் பிறகு பௌத்த அகழாய்வு ஆசிரியர்கள் நமக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை. " என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கூறுகிறார் தொகுப்பாசிரியர் வணக்கத்திற்குரிய பிக்கு மௌரியார் புத்தா.  இந்நூலில் புத்துயிர் பெறும் பௌத்தம், வேரூன்றி படர்ந்து வளர்த்த பௌத்தம் (பிக்கு மௌரியார் புத்தா), பௌத்தரின் குகைகள், கற்றூண் சிற்பங்கள், புனித தலங்களின் அழிப்பும் பௌத்தர்களின் பாராமுகமும், அலட்சியமும் (தமிழாக்கம் தொல்லியன்), தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள் (இளம்போதி),களப்பணியில் ...

பௌத்த சுவட்டைத் தேடி : அய்யம்பேட்டை

Image
ஆய்வுக்காகப் பதிவு செய்தபின், பிற தேடல்களுடன், களப்பகுதியில் புதியதாக ஒரு நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டேன். ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1993 முதல் இல் இறங்கியபோதும், அவ்வாறான ஒரு திருமேனியைக் காணும் வாய்ப்பு 1999இல் கிடைத்தது. மீசை புத்தரை அடுத்து இது கண்டுபிடிப்பு பற்றிய இரண்டாவது நாளிதழ் செய்தியாகும் . நாகப்பட்டினத்தில் கி.பி.1856இலிருந்து 350க்கும் மேற்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் கிடைத்துள்ளன. அவை உள்நாட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களுடன் மேற்கொண்ட களப்பணியின்போது தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையில் ஒரு புதிய நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் கண்டோம். நாகப்பட்டினத்திலிருந்து குடிபெயர்ந்து அய்யம்பேட்டையில் வந்துள்ள ஒரு குடும்பத்தார் மூன்று தலைமுறையாக இத்திருமேனியை முனீஸ்வரர் என்று வழிபட்டுவருகின்றனர். இது 9 செ.மீ. உயரமுள்ளது. அமர்ந்த நிலையில், வலது கை தரையைத் தொட்டமர்ந்த நிலையிலும், இடது கை தியான முத...

தமிழகத்தில் புத்தர் இருக்கிறார்

Image
தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பெரண்டாக்கோட்டை என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சாம்பான் என்ற கடவுளுக்கு வழிபாடு நடத்திவருகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நாம் அந்த கிராமத்திற்குச் சென்று சாம்பான் வழிபாடு நடைபெறும் இடத்தில்  உள்ள சிலையைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் சாம்பான் என்று சொல்லி வழிபடும் சிலை புத்தரின் சிலை. இந்த குக்கிராமத்தின் உள்ளே புதர்கள் மண்டிய அடர்ந்த காடு போன்ற திடலில் மார்பு மற்றும் கழுத்துப்பகுதிகள் உள்ளே புதைந்துள்ள நிலையில் தலையை மட்டும் வெளியே காட்டி மெல்லிய புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார் புத்தர். இந்த புத்தர் சிலை சாம்பான் என்ற பெயரில் காலம்காலமாக இங்குள்ள ஒரு சமூகத்தால் வணங்கப்படுகிறது. இந்த புத்தரை சாம்பானாக வணங்கும் மக்கள் "எங்களுக்கு விவரம் தெரிஞ்ச காலத்திலிருந்து இந்த சிலையை சாம்பான் சாமின்னுதான் கும்பிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு சிவன் ராத்திரி அன்னைக்குதான் விசேஷம். அன்னைக்கு இரவு இந்த சிலைக்கு பூசை செய்து வழிபாடு செய்வோம். அதுபோக, வருடத்திற்கு ஒருநாள்...

வெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைப்பூ

Image
வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன், அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது.  எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ...