தமிழகத்தில் புத்தர் இருக்கிறார் : புதிய தலைமுறை



தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பெரண்டாக்கோட்டை என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சாம்பான் என்ற கடவுளுக்கு வழிபாடு நடத்திவருகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நாம் அந்த கிராமத்திற்குச் சென்று சாம்பான் வழிபாடு நடைபெறும் இடத்தில்  உள்ள சிலையைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் சாம்பான் என்று சொல்லி வழிபடும் சிலை புத்தரின் சிலை.

இந்த குக்கிராமத்தின் உள்ளே புதர்கள் மண்டிய அடர்ந்த காடு போன்ற திடலில் மார்பு மற்றும் கழுத்துப்பகுதிகள் உள்ளே புதைந்துள்ள நிலையில் தலையை மட்டும் வெளியே காட்டி மெல்லிய புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார் புத்தர். இந்த புத்தர் சிலை சாம்பான் என்ற பெயரில் காலம்காலமாக இங்குள்ள ஒரு சமூகத்தால் வணங்கப்படுகிறது.

இந்த புத்தரை சாம்பானாக வணங்கும் மக்கள் "எங்களுக்கு விவரம் தெரிஞ்ச காலத்திலிருந்து இந்த சிலையை சாம்பான் சாமின்னுதான் கும்பிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு சிவன் ராத்திரி அன்னைக்குதான் விசேஷம். அன்னைக்கு இரவு இந்த சிலைக்கு பூசை செய்து வழிபாடு செய்வோம். அதுபோக, வருடத்திற்கு ஒருநாள் கிடா வெட்டியும் வழிபாடு செய்வோம். இங்கு ஆண்கள் மட்டும்தான் சாமி கும்பிட வருவோம் பெண்கள் வந்து சாமி கும்பிட மாட்டார்கள். இப்பதான் சில பேர் வந்து இது சாம்பான் சாமி இல்ல, புத்தர் அப்படி இப்படின்னு சொல்றாங்க. ஆனால், நாங்க இதை இன்னைக்கு வரைக்கும் எங்க ஊரை காப்பாத்துற சாம்பானாத்தான் கும்பிடுகிறோம்" என்கிறார்கள்.

இப்படி புத்த சமண எச்சங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றது. பௌத்த சமண சமயங்கள் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலை பெற்றிருந்தன. இப்போது சில ஆயிரம் பேர் மட்டுமே பின்பற்றும் நிலையில் அவை இருந்தாலும் அப்போது பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் சமயங்களாக அவை இருந்தன.

தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக சோழ நாட்டில் அதிக அளவில் புத்த, சமண சமய தாக்கம் அதிகம் இருந்தது. புத்த, மகாவீரரின் சிலைகள் இன்றும் சோழ நாட்டில் அதிகம் கிடைக்கிறது. அந்த சமயத்தின் பெயர் தாங்கிய ஊர்கள் சோழ மண்டலத்தில் அதிக அளவில் உள்ளன. சாம்பன், அய்யனார் என்று பல பெயர்களைக் கொண்டு இன்றும் பல கிராமங்களில் கிடா வெட்டி பூஜை செய்து ஜீவகாருண்யத்தைப் பின்பற்றிய புத்த, மகாவீரர் சிலைகளை வழிபட்டு வருகிறார்கள்.

சோழ நாடு முழுமையும் உள்ள புத்த, சமண சான்றுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம். இந்த சான்றுளைப் பற்றி தனது வலைப்பூவில் தொடர்ச்சியாக எழுதி கவனம் பெறுகிறார். மேலும் 'சோழ நாட்டில் பௌத்தம்' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவருமான முனைவர் பா.ஜம்புலிங்கம் விவாதிக்கிறார்.....





-------------------------------------------------------------------------------------------
நன்றி: சு.வீரமணி/புதிய தலைமுறை ஆண்டு மலர் 2017
-------------------------------------------------------------------------------------------

22 பிப்ரவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா. உங்கள் உழைப்பின் முக்கியத்துவமும் பயனும் இன்னும் பலருக்கு அறியலாகும். மனம் நிறைந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வியப்புக்குறிய தகவல்கள் முனைவருக்கு வாழ்த்துகளும்....
    த.ம.3

    ReplyDelete
  4. புத்தர் சிலைகள் பற்றி ஏராளமான தகவல்களை தேடி திரட்டி அவற்றை உலகுக்கு வெளிப் படுத்தும் தங்கள் பணி மேன்மைக்குரியது ஐயா! வரலாறு உங்கள் பெயரை சொல்லும்

    ReplyDelete
  5. தங்கள் பணி பாராட்டுக்குரியது.
    அரிய சிலைகள் காணாமற் போவதும் சிதைக்கப்படுவதும் மிக்க வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  6. மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள் பல...

    ReplyDelete
  7. தங்களின் தொய்வில்லாத புத்தர் ஆராய்ச்சிக்கு கிடைத்த பலன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள்...ஐயா..தங்கள் ஆராய்சி பலருக்கும் முன்னோனடி...

    ReplyDelete
  9. கற்றோருக்குப் போகுமிடமெல்லாம் சிறப்பே / தங்கள் பெயரும் புகழும் ஓங்கி ஒலிக்கட்டும்

    ReplyDelete
  10. வாழ்த்துகள்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. கட்டுரை நன்றாக அமைந்துள்ளது. பௌத்த சமயம் தமிழகத்தில் பரவியுள்ள செய்திகள் தங்களது முன்னைய கட்டுரைகளைப் படித்து அறிந்து மகிழ்ந்தேன். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள். பா.மதுசூதனன்

    ReplyDelete
  13. தமிழ்நாட்டில் பவுத்தம் பற்றிய உங்கள் களப்பணி போற்றற்குரியது.

    ReplyDelete
  14. புத்தம் பற்றிய தங்களின் ஆராய்ச்சிகள் தொடர்ந்திட வாழ்த்துகிறேன். -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete

Post a Comment