புத்தம் சரணம் கச்சாமி : சாக்யா ஈ.அன்பன்

புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் சுருக்கமாகக் கொண்டுள்ள நூல் திரு ஈ.அன்பன் அவர்கள் தொகுத்துள்ள "புத்தம் சரணம் கச்சாமி". 2005இல் நூலாசிரியர் அன்பளிப்பாக தந்த இந்நூலை மறுபடியும் அண்மையில் வாசித்தேன்.


புத்த தம்மத்தை அறிய விரும்பும் புதிய ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்குமாக இந்நூல் தொகுத்து வழங்கப்படுவதாகக் கூறுகின்றார் தொகுப்பாசிரியர். 11 அத்தியாயங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்நூல் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல துணைத் தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

  • புத்தரின் வாழ்க்கை 
  • முதல் பேருரை
  • நான்கு உன்னத வாய்மைகள்
  • எண் மார்க்கம்
  • புத்தரின் சமய பரப்புப்பணிகள்
  • புத்தரின் ஆளுமை
  • புத்தரின் அன்றாட செயல்பாடுகள்
  • புத்தரின் பரிநிப்பானம் (மறைவு)
  • திரிபீடகம்
  • கம்மா, நல்வினை, தீவினை
  • மனித ஆளுமையின் பகுப்பாய்வு
  • பவுத்த வாழ்முறை
  • சமூகப் போதனைகள்
  • பவுத்தம் போற்றிய தமிழர்கள் 

ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சில பயிற்சிக் கேள்விகளும், சிறு குறிப்பு வரைக என்று சில கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. படித்ததை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளவும் தம்மை சோதித்துக் கொள்வதற்கும் வாசகர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இக்கேள்விகள் துணை நிற்கின்றன. இந்நூலில் குறிப்பிடத்தக்கனவாக சிலவற்றைக் காண்போம்.

புத்தர் பிறந்த இடம் லும்பினி
புத்தர் மெய்ஞ்ஞானம் பெற்ற இடம் கயா
புத்தர் முதல் தம்ம பேருரையாற்றிய இடம் சாரநாத்
புத்தர் பரிநிப்பானமடைந்தது குசினரா
மேற்கண்ட அனைத்துமே பௌர்ணமி நாளில் நிகழ்ந்தபடியால் பௌத்த நாடுகளில் பௌர்ணமி நாள் புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது. (ப.84)

ஒரு முறை புத்தர் தம் சீடர்களுடன் ஜேதவனத்தில் தங்கியிருந்தபேது கையில் சிறிது உதிர்ந்த இலைகளை எடுத்துக் கொண்டு கூறினார். "பிக்குகளே, நான் உங்களுக்கு போதித்தது என் கையில் உள்ள இலைகளின் அளவே, ஆயின் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இந்த வனத்தில் உள்ள இலைகளின் அளவிலும் அதிகமானது." (ப.93)

திரிபீடகம் இன்றைக்கு மிகப் பெரிய ஆழமான நன்னெறி கோட்பாடுடைய புத்தரின் போதனைகளாகும். திரிபீடகம் என்ற சொல்லுக்குக்கு மூன்று கூடைகள் என்று பொருளாகும். அவை சுத்த பீடகம் (பேருரைப்பகுதி), அபிதம்ம பீடகம் (உன்னத கோட்பாட்டுப் பகுதி) மற்றும் விநய பீடகம் (நன்னடதைக் கோட்பாட்டுப் பகுதி) என்பனவாகும். ஒவ்வொரு பகுதியும் பல உட்பிரிவுகளைக் கொண்டு 31 நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (ப.87)

இளம்போதியார் (கி.பி.2ஆம் நூற்றாண்டு), சீத்தலைச்சாத்தனார் (கி.பி.2), அறவணடிகள் (கி.பி.2), மணிமேகலை  (கி.பி. 2), நாகுத்தனர் (கி.பி.4), புத்ததத்தர் (கி.பி.5), புத்தகோஷர் (கி.பி.5), தம்மபாலர் (கி.பி.5), தினகர் (கி.பி.5), போதிதம்மர் (கி.பி.6), தம்மபாலர் (கி.பி.7), தம்மகீர்த்தி (கி.பி.7), வஜ்ரபோதி (கி.பி.7), போதிசேனர் (கி.பி.7), புத்தமித்திரர் (கி.பி.10), அனுருத்தர் (கி.பி.12), திஸ்பனகரா புத்தபியாதேரர் (கி.பி.12), கஸப்பதேரர் (கி.பி.12), தம்மகீர்த்தி தேரர் (கி.பி.12) ஆகியோர் பௌத்தம் போற்றிய தமிழர்கள் ஆவர். (ப.184)

புத்தரின் வரலாற்றை சுருக்கமாக அறிந்துகொள்ளவும், பௌத்தக் கொள்கைகளை நுணுக்கமாக அறிந்துகொள்ளவும் உதவும் இந்நூலை வாசிப்போம்.

நூல் : புத்தம் சரணம் கச்சாமி
ஆசிரியர் : திரு சாக்யா ஈ.அன்பன் (அன்புமலர்)
வெளியீட்டாளர் : புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை, சென்னை கிளை, 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், சேலையூர், சென்னை 600 073
பதிப்பு : ஏப்ரல் 2005
விலை ரூ.75     


Brief of the write up in English:
A review of the book Buddham Saranam Kachami written by Mr Sakya E.Anban (Anbumalar) 89, III Street, Malleeswari Nagar, Selaiyur, Chennai 600 073, April 2005, Rs.75  

2 நவம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 2 November 2017  

Comments

  1. நல்லதோர் நூல் அறிமுகம்.

    த.ம. +1

    ReplyDelete
  2. தங்களது விரிவான விமர்சனம் அருமை.

    ReplyDelete
  3. அருமையான நூல் அறிமுகம் ஐயா
    அவசியம் வாங்கிப் படிப்பேன்
    தம +1

    ReplyDelete
  4. Dear Sir vanakkam thank you very much the ponnibuddha blogspot specially in promoting Buuddhism.This book was reprinted with more additional information.Available

    ReplyDelete
  5. arumaiyaana vimarsanam. nandri sir pakirvukku.

    ReplyDelete
  6. நல்லதொரு நூல் விமர்சனம் மற்றும் அறிமுகம் ஐயா! மிக்க நன்றி

    ReplyDelete
  7. Thanks for this book introduction

    ReplyDelete
  8. உங்கள் பதிவு ,நூலை வாசிக்க தூண்டுகிறது :)

    ReplyDelete
  9. நல்லதொரு நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  10. அறியாத தகவல்கள் பல இருக்கும் போல் இருக்கிறது சொல்லிச் செல்லும் விதம் நன்று

    ReplyDelete
  11. புத்தர் இலைகளைப்பற்றி கூறிய உவமானம்:

    வண. நாரத தேரர் அவர்கள் எழுதிய "பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு" (தமிழில் செல்வி யசோதரா நடராசா)
    பகவான் புத்தர் தாம் அறிந்து கொண்ட அனைத்தையும் மக்கட்குப் போதிக்கவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சமயம், அவர் ஒரு வனத்துக்கூடாகச் செல்லும் போது ஒரு கையளவு இலைகளை எடுத்துத் தன் சீடர்களைப் பார்த்து, "பிக்குகளே! நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பது என் கையிலிருக்கும் இவ்விலைகளுக்கு ஒப்பானதே. நான் கற்றுக் கொடுக்காதது இந்த வனத்திலிருக்கும் இலைகளின் தொகைக்குச் சமமானது," என்று சொன்னார்.
    ஒருவனின் உளத் தூய்மைக்கு மிக அத்தியாவசியமானது என்று தாம் கருதியவைகளை மட்டுமே பகவான் போதித்தார். அவரது போதனைகளில் மறையுரை அல்லது ஒளிவு மறைவற்ற உரை என்று வித்தியாசம் காண முடியாது. அவருடைய உயரிய வாழ்க்கைப் பணியோடு தொடர்பில்லாத விஷயங்களில் அவர் மௌனத்தையே அநுசரித்தார் என்பது குறிப்பிடதக்கது.
    Source: bautham.net/Home/narada/
    Chapter 2 பௌத்த தம்மம்: பௌத்தம் ஒரு தத்துவமா?

    Simsapa Sutta: The Simsapa Leaves (translated from the Pali by Thanissaro Bhikkhu)
    Once the Blessed One was staying at Kosambi in the simsapa forest. Then, picking up a few simsapa leaves with his hand, he asked the monks, "What do you think, monks: Which are more numerous, the few simsapa leaves in my hand or those overhead in the simsapa forest?"
    "The leaves in the hand of the Blessed One are few in number, lord. Those overhead in the simsapa forest are more numerous."
    "In the same way, monks, those things that I have known with direct knowledge but have not taught are far more numerous [than what I have taught]. And why haven't I taught them? Because they are not connected with the goal, do not relate to the rudiments of the holy life, and do not lead to disenchantment, to dispassion, to cessation, to calm, to direct knowledge, to self-awakening, to Unbinding. That is why I have not taught them.
    Source: http://www.accesstoinsight.org/tipitaka/sn/sn56/sn56.031.than.html


    நன்றி,
    அரசு

    ReplyDelete
  12. புத்தர் எத்தனையோ நூற்றாண்டுகள் தாண்டியும் மனித குலத்திற்கு ஒரு வழி காட்டியாக இருக்கிறார் . அவரது கோட்பாடுகள் ஜென் , நிச்சிறேன் என்று பலவிதமாகவும் பின் பற்றப் பட்டு வருகிறது . அவர் ஒரு மாமனிதர் . புத்தக அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  13. புத்தரை குறித்த பல செய்திகள் பல சந்தர்ப்பங்களில் அறிய நேரும்போதெல்லாம் அவை "அரிய" செய்திகளாகவே இருக்கின்றன.

    மற்றவர்களின் படைப்பை ரசிப்பதோடல்லாமல் , "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" எனும் தத்துவ மேன்மையினை பத்திரப்படுத்தும் வகையில், படைப்பாளருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் , படைப்பினை உலகறிய செய்யும் வகையில் அறிமுகபடுத்தியிருக்கும் தங்களின் பெருந்தன்மை வணக்கத்திற்குரியது.

    நூலாசிரியருக்கு சரணம்! சரணம்!! சரணம்!!!

    கோ

    ReplyDelete

Post a Comment