Posts

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலை

Image
மார்ச் 1998 திருச்சிப் பகுதியின் களப்பயணத்தின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். திருச்சியில் காணப்படும் புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய இடங்களில் ஒன்று திருச்சி-கோயம்புத்தூர் சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பேட்டைவாய்த்தலை.அங்கு செல்ல உரிய நாளை எதிர்நோக்கியிருந்தேன். செப்டம்பர் 1998 திட்டமிட்ட ஒரு நாளில் பேருந்தில் அங்கு சென்றேன். பிற இடங்களைப் பார்த்துவிட்டு, அவ்வூரைச் சென்றடைய மாலை நேரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி, புத்தர் சிலை உள்ள இடத்தைப் பற்றி பல இடங்களில் விசாரித்தேன். அப்போது மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்புறம் ஒரு சிலை உள்ளதாகக் கூறினர். பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் கோயில் இருந்தது. பேருந்து வசதி இல்லாத நிலையில் அருகிலிருந்த கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டேன். வெளியூர்க்காரர்களுக்கு மிதிவண்டி தருவதில்லை என்ற பதில் வந்தது. ஆய்வு தொடர்பாக நான் வந்த விவரத்தைக் கூறி அதற்கான கடிதத்தைக் காண்பித்தேன். "ஆய்வுன்னா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது, தர முடியாதுன்னா தரமுடியாது" என...

பௌத்த சுவட்டைத் தேடி: பட்டீஸ்வரம்

Image
என் ஆய்வு தொடங்கிய நாள் முதல் என்னை அதிகம் ஈர்த்த இடங்களில் ஒன்று பட்டீஸ்வரம் பகுதி. ஏனெனில் அப்பகுதியில் அதிகமான புத்தர் சிற்பங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. பட்டீஸ்வரம் அருகே கோபிநாதப்பெருமாள்கோயில் என்னுமிடத்தில் ஒரு தோப்பில் அருகருகே இரு புத்தர் சிலைகளை முந்தைய களப்பணியில் பார்த்தோம். மறுபடியும் தற்போது பட்டீஸ்வரம் போவோம் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள புத்தரைப் பார்க்க.   அக்டோபர் 1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து, ஆய்வியல் நிறைஞர் ஆய்வு மேற்கொள்ள தொடங்கிய காலகட்டம். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்த நிலையில் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் (1940) நூல் எனக்கு முதன்முதலாகத் துணைக்கு வந்தது. அவர் அந்நூலில் புத்தர் சிற்பங்கள் உள்ளதாகக் கூறிச் சில இடங்களைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் தற்போது புத்தர் சிற்பங்கள் இருக்கிறனவா என்பதை உறுதி செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றேன். அவ்வாறாக அவர் சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட இடங்களில் ஒன்று கும்பகோணம் அருகிலுள்ள பட்...

பௌத்த சுவட்டைத் தேடி : கண்டிரமாணிக்கம்

Image
மறுபடியும் மிக அழகான புத்தர் சிற்பத்தைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இந்த சிற்பம் சோழ நாட்டில் காணப்படுகின்ற 66ஆவது புத்தர் சிற்பமாகும். நான் பார்த்த பெரிய சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த வாரம் இச்சிற்பத்தைப் பார்த்தபோது பெற்ற பிரமிப்பையும், தற்போது இச்சிற்பம் உள்ள நிலையை அறிந்தபின் பெற்ற வேதனையையும் பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் கண்டிரமாணிக்கம் செல்வோம். 23 ஜூலை 2012 கண்டிரமாணிக்கம் அருகே புத்தர் சிற்பம் இருப்பதாகத் தனக்குத்தகவல் வந்துள்ளதாக வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரணியம் அவர்கள் தெரிவித்தார். மறுநாளே அவருடன் அங்கு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. 24 ஜூலை 2 012  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள கண்டிரமாணிக்கம் என்னும் ஊருக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குறிப்பிட்ட இடத்தை நெருங்கும்போது தினத்தந்தி நிருபர் திரு சிவராமன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் திரு காளிமுத்து ஆகியோர் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். புத்தர் சிற்பம் இருந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்சென்றனர். மேட்டுத்தெருவில் திரு மணிகண்டன் வீட்டுக் கட...

சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-வழிபாடும் நம்பிக்கைகளும்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: தமிழ்ப்பொழில் ,  துணர் 76, மலர் 5, நவம்பர் 2002 ------------------------------------------------------------------------------------------- கீழ்க்கண்ட   நூலின் பதிப்பாசிரியர் கேட்டபடி அவரிடம் தரப்பட்டு, அது வெளிவராத நிலையில் இக்கட்டுரை  தமிழ்ப்பொழில் இதழுக்கு அனுப்பப்பட்டு, நவம்பர்2002இல்  வெளியானது.  பல வருடங்களுக்குப் பின்  தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் என்ற நூலில் இக்கட்டுரை   வெளியானதை நண்பர்கள் மூலமாக அறிந்தேன்.  ------------------------------------------------------------------------------------------- நன்றி: தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் / பதிப்பாசிரியர் ம.சா.அறிவுடைநம்பி ------------------------------------------------------------------------------------------- பிற கட்டுரைகளை வாசிக்க : கட்டுரைகள் ------------------------------------------------------------------------------------------- 18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்

Image
நாகப்பட்டின புத்தரின் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை ஆவணப்படுத்துவது என் ஆய்வின் ஒரு பகுதியாக அமையும். அதற்கு அடிப்படையாக அமைந்தது டி.என். இராமச்சந்திரன் எழுதிய  Nagapattinam and other Buddhist bronzes in Madras Museum   ( Director of Museums, Chennai, I Edition 1954, Reprint 1992) நூலாகும். இக்கட்டுரைக்கான தேடல் நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனிகளைப் பற்றியதாகும். நாகப்பட்டினம் என்றால் பௌத்த விகாரமும் அங்கிருந்த புத்தர் செப்புத்திருமேனிகளும் நினைவுக்கு வந்துவிடும்.  நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.   முதலாம் இராஜராஜன் (கி.பி.985 முதல் 1014 வரை) அனுமதியுடன் ஸ்ரீவிஜயநாட்டு மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மன் ஒரு பௌத்த விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டினான். இராஜராஜன் தனது 21ஆவது ஆட்சியாண்டில் நாகப்பட்டினம் அருகேயுள்ள ஆனைமங்கலம் என்ற ஊரைக் கொடையாக வழங்கினான். முதலாம் இராஜராஜனுக்குப் பின் அவனது மகன் இராஜேந்திரன் அதனை உறுதி செய்தான். அந்த விகாரம் இராஜராஜப்பெரும்பள்ளி என அழைக்கப்பட...