பௌத்தம் சீர் பரவுவார் விருது

தஞ்சாவூர், மூத்த குடிமக்கள் சங்கத்தின் சார்பாக 27.10.2026இல் பெசண்ட் அரங்கில் நடைபெற்ற மனமகிழ்ச் சங்கம விழாவில் "பௌத்தம் சீர் பரவுவார்" என்ற விருதினைப் பெற்றேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். தேர்ந்தெடுத்த சங்க நிறுவனர் தமிழ்ச்செம்மல் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் அவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


ஆய்விற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், குடும்பத்தாருக்கும், என் பௌத்த நூல்களின் பதிப்பாளர் புது எழுத்து திரு சுகவன முருகன் அவர்களுக்கும் என் நன்றி. இந்த விருதானது பௌத்த ஆய்வு தொடர்பாக நான் பெறுகின்ற ஏழாவது விருதாகும்.

பௌத்த ஆய்வுக்காகப் பெற்ற விருதுகள்


அழைப்பிதழில் கண்டவாறு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின்போது சங்கத்தலைவர் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம், அங்குசம் இதழின் ஆசிரியர் பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் ஆகியோரின் முன்னிலையில் தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் எனக்கு "பௌத்தம் சீர் பரவுவார்" என்ற விருதினை வழங்கினார்.










தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், அண்மையில் பெரிய கோயில் சதய விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருதுபெற்ற, சங்கத்தின் நிறுவனர் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


நிகழ்வில் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், பல துறை சார்ந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வு தொடர்பான செய்திகளை வெளியிட்ட மாலை முரசு (27.10.2026), தினமணி, அங்குசம், தகவல் டுடே (28.10.2026) இதழ்களுக்கு மனமார்ந்த நன்றி.




-------------------------------------------------------------------------------------------
நன்றி: மூத்தகுடிமக்கள் நலச் சங்கம், தஞ்சாவூர்
-------------------------------------------------------------------------------------------
29.10.2026இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. மிகவும் மகிழ்ச்சி. விருதுகள் தொடரட்டும்

    ReplyDelete
  2. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete

Post a Comment